இரங்கல் (கலம்பக உறுப்பு)
இரங்கல் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. தலைவனைப் பிரிந்த தலைவியின் இரங்கல் கூற்று.
விளக்கம்
இரங்கல் என்றால் வருந்துதல். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி நெய்தல் நிலத்தில் உள்ள பொருள்களைப் பார்த்துத்தன் நிலையைக் கூறி வருந்துவதாக அமையும் உறுப்பு இது.
எடுத்துக்காட்டு
திருவரங்கக் கலம்பகம்
வாயின் இரங்கினை ; ஆரம் எறிந்தனை ;
வாள்வளை சிந்தினைதன்
பாயலை உந்தினை ; மாலை அகைந்தனை :
பாரில் உறங்கிலையால் ;
கோயில் அரங்கனை மாக னகந்திகழ்
கோக னம்பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை
ஆக நெடுங்கடலே !
கடலை நோக்கி தலைவி தன் பிரிவுத்துயரைக் கூறுகிறாள்.
திருவருணைக் கலம்பகம்
மலைமேன் மருந்த ரருணேச ரன்று
வலைவீசி நின்ற வலையே,
அலைமே னிறைந்து வருமீ னருந்தி
யருகே யிடங்கொள் குருகே,
முலைமேன் முயங்கு தலைநாளி லன்பர்
மொழிசூண் மறந்த பிழையோ,
தலைமேல் வரைந்த படியோ விருந்து
தமியேன் வருந்து தகவே. (15)
தலைவி வலை, குருகு போன்ற நெய்தல் நிலத்துக்குரியவற்றிடம் தலைவி தன் பிரிவுத் துயரைக் கூறுதல்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:05:20 IST