under review

இடைக்கழிநாடு

From Tamil Wiki
இடைக்கழிநாடு (நன்றி: தினமணி)

இடைக்கழிநாடு சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் சிறுநாடுகளில் ஒன்று.

ஊர் பற்றி

  • சங்கப் புலவரான நத்தத்தனார் பிறந்த நல்லூர் கிராமம் இடைக்கழி நாட்டில் இருந்தது.
  • இடைக்கழிநாட்டில் இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன
  • சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருபெரும் உப்பங்கழிகளுக்கு இடையில் இந்த நாடு அமைந்திருந்தது.
  • இந்த நாட்டில் மா, பலா, பனை, முந்திரி, தென்னை ஆகியவை அதிகம் விளைந்தன
  • ஒளவையாரும் திருவள்ளுவரும் இந்தப் பனை நாட்டில் வாழ்ந்த இடைக்காட்டுச் சித்தர் என்னும் சித்தரை அழைத்துக் கொண்டு கீழை நெய்தல் வழியாக மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.
  • அன்றில் பறவைகள் அதிகம் வாழும் ஊர்
  • காசிப்பாட்டை என்ற சாலை பண்டைய காலத்திலேயே தமிழ் நாட்டையும் வட இந்தியாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது. இது இடைக்கழி நாட்டின் வழியாகச் சென்றது. அகத்தியர், ராமர், லட்சுமணர், சாது, சந்நியாசிகள் காசிக்கு தீர்த்த யாத்திரை இந்த வழியாகச் சென்றனர். இந்தப் பாதையில் ஆலம்பரை நாணயப் பொறுப்பாளரான 'பொட்டிப்பத்தன்' என்பவரால் கட்டப்பட்ட தர்ம சத்திரங்களில் தங்கிச் சென்றனர். இதற்கு பொ.யு. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டு உள்ளது.
  • இந்நாட்டை சோழர்கள், சாளுக்கியர்கள், டெல்லி நவாப்புகள், பிரெஞ்சு கவர்னர் டூப்ளக்ஸ் எனப் பலரும் ஆண்டனர்.
  • வங்கக் கடலோரம் அமைந்த இந்த நாடு பழங்காலத்திலிருந்தே கீழை நாடுகளுக்குச் செல்லும் வணிக மார்க்கமகவும், பாதுகாப்பு அரண் கொண்டதாகவும் இருந்தது.
  • பொ.யு. 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோஸ்த் அலிகானால் கட்டப்பட்ட ஆலம்பரைக் கோட்டை இன்று இடிந்த நிலையில் உள்ளது
  • இங்குள்ள சிறிய துறைமுகம் வழியாக சணல், உப்பு, ஜரிகை முதலிய பொருட்கள் கீழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தக் கோட்டையில் பிரெஞ்சு ஆளுநரான டூப்ளெக்ஸ்க்காக ஆலம்பரை வராகன் நாணயம் அச்சடிக்கப்பட்டது. இது ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பில் உள்ளது.
  • பொ.யு 18-ம் வருட தாது வருடப் பஞ்சத்தின் போது பிரிட்டிஷ் ஆளுநரான பக்கிங்காம் பிரபு இடைக்கழி நாட்டிலிருந்து ஆந்திரா காக்கிநாடா துறைமுகத்திற்கு அப்பால் பெத்தகஞ்சம் வரையில் கால்வாய் வெட்டினார். இது பக்கிங்காம் கால்வாய் என்று அழைக்கப்பட்டது.
  • நல்லியக்கோடான் என்ற அரசன் ஆண்ட கிடங்கில் அரண்மனை இருந்த இடம் தற்போது குடியிருப்புகளாக உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page