under review

அ. சுவாமிநாதர்

From Tamil Wiki

அ. சுவாமிநாதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. இசைக்கலைஞர், நாடகங்கள் பல இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அ. சுவாமிநாதர் இலங்கை யாழ்ப்பாணம், மானிப்பாயில் அருணாசலம்பிள்ளைக்கு மகனாக 1819-ல் பிறந்தார்.

இசை

இளமைக் காலத்தில், மானிப்பாய் வேரகப்பிள்ளையார் கோயிலில் கந்தபுராணபடலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, புராணத்தைப் படித்துக் கொண்டிருந்த இவர் ராகத்தைத் தவறுபட இசைத்தாரென்றும், பொருள் சொல்லிக் கொண்டிருந்தவர் இவரைப் பழித்தாரென்றும், அதனால் அ. சுவாமிநாதர் இந்தியாவுக்குச் சென்று பல ஆண்டுகளாக இசை பயின்று திரும்பி வந்தார் என்று நம்பப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

அ. சுவாமிநாதர் "இராம நாடகம்", "தருமபுத்திர நாடகம்" உள்ளிட்ட பல நாடகங்களை இயற்றினார்.

இயற்றிய நாடகங்கள்

  • இராம நாடகம்
  • தருமபுத்திர நாடகம்

உசாத்துணை


✅Finalised Page