அலங்காரபஞ்சகம்
To read the article in English: Alangarapanjagam.
அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்
வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844
வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்
- நவநீதப் பாட்டியல், பாடல் 41
எடுத்துக்காட்டு
சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம், சந்தவிருத்தம் என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:24 IST