அரசவுழிஞை
அரசவுழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. உழிஞை வேந்தனின் புகழைப் பேசும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மக்களுக்கு நிழல் தந்து, காக்கும் தொழிலைச் சிறக்க நடத்தும் உழிஞை வேந்தனின் புகழைச் சிறப்பாகச் சொன்னது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தொழில் காவல் மலிந்து இயலும்
பொழில் காவலன் புகழ் விளம்பிற்று(கொளு 6.6)
வெண்பா
ஊக்க முரண் மிகுதி ஒன்றிய நல்சூழ்ச்சி
ஆக்கம் இவன்கண் அகலாவால் - வீக்கம்
நகப்படர் வென்றி நலமிகு தாராற்கு
அகப்படா இல்லை அரண் (100)
பொருள்: மன எழுச்சியும், நல்ல ஆராய்ச்சியும், செல்வப் பெருக்கமும் உழிஞை வேந்தனிடம் எக்காலத்திலும் அகலாது உள்ளன; ஆதலால், உழிஞை வேந்தனுக்கு, இனிக் கையகப்படாத அரண்கள் இல்லை. அரண்கள் யாவும் கைவசப்படும்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jun-2025, 10:50:48 IST