under review

தழும்பன்

From Tamil Wiki
Revision as of 02:42, 16 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தழும்பன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். மருங்கூர்ப் பட்டினத்திற்கு முன்னுள்ள ஊனூரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

தழும்பன் கடற்கரை நகரான மருங்கூர்ப் பட்டினத்திற்கு முன்னுள்ள ஊனூரை ஆட்சி செய்தான். வாட்போர் புரிவதில் வல்லவன். வள்ளல் தன்மை உடையவன். யாழிசைப் பாணர்களின் உறவினனாகவும், தலைவனாகவும் விளங்கியவன். பிடியானை ஒன்று மிதித்ததால் உண்டான விழுப்புண்ணிலிருந்து வழுதுணங்காய் போலத் தோன்றிய தழும்பின் காரணமாக தழும்பன் என்று அழைக்கப்பட்டான். இதனால் இவன் சொன்ன சொல் தவறாதவன் என்பதால் இவன் வாய்மொழித் தழும்பன் எனவும் போற்றப்படுகிறான். நக்கீரரின் அகப்பாடல்களில் தூங்கல் பாடிய தழும்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். தூங்கலோரியோர் என்ற புலவரும் இவனைப் பாடினார். அகநானூற்றிலும்(227), நற்றிணையிலும்(300) இவனைப் பற்றிய பாடல் உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page