standardised

ஹோமியோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Link Created; Final Check)
 
mNo edit summary
Line 95: Line 95:
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32684-2017-03-16-14-47-51 மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32684-2017-03-16-14-47-51 மருத்துவத் தமிழ் உரைநடைப்போக்கு]


{{Ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:33, 7 October 2022

ஹோமியோபதி மருத்துவம் குறித்த செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் ஹோமியோபதி இதழ்கள் எனப்படுகின்றன. சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம் போலவே ஹோமியோபதி மருத்துவமும் குறிப்பிடத்தகுந்த ஒரு மருத்துவ முறையாகப் பின்பற்றப்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவம்

ஹோமியோபதி மருத்துவமுறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாகும். சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம் போலவே ஹோமியோபதி மருத்துவமும் தமிழகத்தில் பலரால் பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமன் இம்முறையை உருவாக்கினார். எது மருந்தாகப் பயன்படுகிறதோ அதுவே நோயை உண்டாக்கும் கூறுகளையும் பெற்றிருக்கும் என்பதே ஹோமியோபதியின் அடிப்படை.

தமிழில்‌ தோன்றிய ஹோமியோ மருத்துவத்தின்‌ முதல்‌ இதழ்‌, ‘ஹோமியோபதி’ என்பதாகும். இதன்‌ ஆசிரியர்‌ டாக்டர்‌ வி.ஆர்‌. மூர்த்தி. மேலைநாடுகளுக்குச்‌ சென்று மருத்துவம்‌ கற்று வந்த பின், ஹோமியோபதி மருத்துவம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வதற்காக ‘ஹோமியோபதி’ என்ற இதழை, கும்பகோணத்தில், 1947-ல் தொடங்கினார்.

ஹோமியோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்

கீழ்காணும் இதழ்கள் ஹோமியோபதி மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஹோமியோபதி 1947
ஹோமியோபதி மித்திரன் 1951
தி வாய்ஸ் ஆஃப் ஹோமியோபதி 1956
ஹோமியோபதி மித்ரன் (2) 1956
ஹோமியோ பிரகடனம் 1958
அர்கனான் 1961
சகவழி 1977
ஹோமியோபதி தொண்டன் 1977
ஹோமியோ அறிவியல் 1981
ஜுபிடரின் மருத்துவ மஞ்சரி 1982
ஹானிமன் 1982
ஈஸ்டர்ன் ஹோமியோ ஸ்டார் 1985
ஹோமியோ நண்பன் 1992
உங்கள் ஹோமியோபதி நண்பன் 1992
ஆரோக்கிய மருத்துவம் 1994
மனிதனை நலமாக்குவது ஹோமியோபதி 1997
உண்மை ஹோமியோபதி 1997
ஹோமியோபதிச் சுடர் 2001
மாற்று மருத்துவம் -
ஹோமியோ முரசு -  
ஜீவன்ஸ் ஐடியல் க்யூர்ஸ் -
ரிசர்ச் ஜெர்னல் ஆஃப் ஹோமியோபதி -
ஹோமியோபதி – தி ஃப்ரெண்ட் ஆஃப் ஹெல்த் -
ஹோமியோபதி ஃபார் ஆல் -
வைட்டல் இன்ஃபார்மர் -

பிற மருத்துவ இதழ்கள்

சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் இவற்றோடு கூடவே ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், மலர் சிகிச்சை மருத்துவம், காந்த சிகிச்சை மருத்துவம், யோகா மருத்துவம் என பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. அந்தந்த மருத்துவ முறைகளின் சார்பாகப் பல இதழ்களும் வெளியாகி வருகின்றன.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.