under review

அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்

From Tamil Wiki

தமிழில் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தாங்கி வரும் இதழ்கள் அலோபதி மருத்துவ இதழ்கள் எனப்படுகின்றன.

தமிழில் அலோபதி மருத்துவ இதழ்கள்

இரேனியஸ்‌ பாதிரியார், 1818-ல், கிறிஸ்தவ அறிவுப் பரப்பும்‌ சங்கம்‌ Society for propagating christian knowlodge மூலம் காலரா நோய்‌ பற்றிய துண்டறிக்கையை வெளியிட்டார். பெர்சிவல்‌ பாதிரியார்‌ 1855-ம்‌ ஆண்டு தினவர்த்தமானி இதழைத்‌ தொடங்கினார்‌. தினவர்த்தமானி அறிவியல்‌ கட்டுரைகளையும்‌, சுகாதாரம்‌, பொது மருத்துவம்‌ பற்றிய கட்டுரைகளையும்‌ வெளியிட்டது. தினவர்த்தமானியைத்‌ தொடர்ந்து ஜனவிநோதினி இதழ்‌ 1870-ல் வெளிவந்தது. சுமார்‌ இருபது ஆண்டுகள்‌ வெளிவந்த ஜனவிநோதினி இதழில்‌ தொற்று நோய்த்‌ தடுப்புமுறை, கள்ளுண்ணாமை போன்ற நோய்த்‌ தடுப்புகளைப்‌ பற்றிய கட்டுரைகள்‌ வெளியாகின. மருத்துவம்‌, சுகாதாரம்‌ பற்றிய அறிவியல்‌ கருத்துக்களை வாழ்வியல்‌ நெறிகளுடன்‌ இணைத்து ஜனவிநோதினி வெளியிட்டது. தொடர்ந்து ‘விவேகசுந்தரம்’ இதழும் 1892- வெளிவந்த ’விவேகசிந்தாமணி’ இதழும் மருத்துவம், சுகாதாரம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டன. தமிழின் முதல்‌ மருத்துவ இதழாக ’அகத்திய வர்த்தமானி' கருதப்படுகிறது. இது சென்னையிலிருந்து வெளிவந்தது. தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் வெளியாகின.

அலோபதி மருத்துவ இதழ்கள் பட்டியல்

கீழ்காணும் இதழ்கள் அலோபதி மருத்துவச் செய்திகளைத் தமிழில் வழங்கின. இவற்றில் சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சுகஜீவனி 1887
வைத்திய போதினி 1895
வைத்திய விசயன் 1898
சுகாதார போதினி 1906
ஆரோக்கிய போதினி 1908
வைத்திய போதினி 1910
வைத்திய கலாநிதி 1913
ஆரோக்கியமும் சிசுவின் வாழ்க்கையும் 1923
ஆரோக்கிய தீபிகை 1924
வைத்தியக் களஞ்சியம் 1930
ஆரோக்கிய சிந்தாமணி 1930
ஆத்மரட்சா 1933
ஆரோக்கியம் 1962
உடல் நலம் 1966
மருத்துவ முரசு 1966
ஆர்கனன் 1969
A.M.T.C. அலோபதி மெடிக்கல் ஜெர்னல் 1973
நல் வாழ்வு 1978
ஆரோக்கிய மலர் 1980
இருமலர் 1980
உங்கள் உடல் நலம் 1991
மருத்துவ அறிவியல் மலர் 1991
ப்யூட்டி ஹெல்த் 1992
உங்கள் நலம் நாடும் ஹெல்த் 1992
பியூட்டி அண்டு ஹெல்த் 1992
மருத்துவ அறிவியல் மலர் 1992
ஹெல்த் 1993
ஆரோக்கிய மருத்துவம் 1994
உங்கள் ஆரோக்கியம் 1995
ஹலோ டாக்டர் 1996
ஹெல்த் டாக்டர் 1996
உங்கள் ஹெல்த் டுடே 1996
மீனாட்சி மருத்துவ மலர் 1996
ஆரோக்கிய வாழ்வு 1996
பேமிலி ஹெல்த் 1997
ஹெல்த் டைப் ஃபேமிலி ஹெல்த் 1997
புதிய மருந்து உலகம் 1997
உங்கள் ஹெல்த் 2001
ஹெல்த் பாயிண்ட் 2002
குமுதம் ஹெல்த் 2002
மெடிகேர் டைஜஸ்ட் 2002
டாக்டர் விகடன் 2002
குங்குமம் டாக்டர் 2005

உசாத்துணை


✅Finalised Page