first review completed

வெய்யோன் (வெண்முரசு நாவலின் ஒன்பதாம் பகுதி): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:

[[File:51YGNcBGtJL.jpg|thumb|'''வெய்யோன்''' (‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி)]]

'''வெய்யோன்'''<ref>[https://venmurasu.in/veyyon/chapter-1 வெண்முரசு - வெய்யோன் - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> (‘[[வெண்முரசு]]’ நாவலின் ஒன்பதாம் பகுதி) கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் விவரிக்கிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

== பதிப்பு ==
== பதிப்பு ==
====== இணையப் பதிப்பு ======
====== இணையப் பதிப்பு ======
‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதியான ‘வெய்யோன்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

====== அச்சுப் பதிப்பு ======
====== அச்சுப் பதிப்பு ======
கிழக்கு பதிப்பகம் வெய்யோனை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [[ஜெயமோகன்]]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
பிறந்தது முதலேயே கர்ணனின் உள்ளத்தில் புறக்கணிப்பின் சுடர் ஏற்றப்பட்டுவிட்டது. தந்தை-தாய் யாரென அறியாத பிறப்பு; சாபத்தோடு கூடிய வில்வித்தைக் கல்வி; கொடையாகப் பெற்ற அங்கநாட்டு அரசுரிமை; அவனை மிகுதியாக விரும்புவதாலும் அவனைச் சூரியனின் மகன் என நம்புவதாலுமே அவனிடமிருந்து விலகியிருக்கும் முதல் மனைவி (சூதர்குலப் பெண்); அவனை மிகுதியாக வெறுப்பதாலும் அவனைச் ‘சூதன் மகன்’ என நினைப்பதாலுமே அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் இரண்டாம் மனைவி (கலிங்கநாடு இளவரசி) என அவன் அடைந்த ஒவ்வொன்றும் அவனுக்குக் கசப்பையே தருகின்றது. கர்ணனின் உள்ளம் அடைந்ததெல்லாமே கசப்புகள்தான். இவ்வாறு அவனுக்கு நேரும் சூழல்களாலேயே அவனுள் சுடர்ந்த அந்தச் சுடர் பெருநெருப்பாக மாறிவிட்டது. அவனுடைய வளர்ப்புத் தாய், தந்தை ஆகியோரின் கண்ணீரும் அவனைச் சூழந்திருப்பவர்களின், அவன் கண்ணுக்குப்படும் தொலைவில் இருக்கும் எளியவர்களின் கண்ணீரும் அவனுள் எரியும் அந்தச் சுடருக்கு எண்ணெய்யாக அமைந்துவிடுகின்றன.  பிறரின் கண்ணீரைக் காணச் சகிக்காதவன் கர்ணன். அதற்காகவே அவன் அவர்களிடம் அடிபணிந்துவிடுகிறான். பிறரின் கண்ணீரால் அவன் உள்ளத்தில் கருணை மிகுதியாகவே கசியத் தொடங்கிவிடுகிறது. இந்திரப்பிரஸ்தம் செல்லும் வழியில் நாகர்களின் மூதன்னை திரியையின் கண்ணீரே அவனுள் எரிந்துகொண்டிருந்த பெருந்தீக்குத் தீராத எண்ணெய்யாக வார்க்கப்பட்டுவிட்டது. ஒளிக்கு இருள் விடுத்த பேரழைப்பு அது. அதற்குச் செவிமடுத்தான் கர்ணன். அடுத்த கணமே ஒட்டுமொத்த வாழ்வும் பிறிதொன்றாக மாறிவிட்டது அவனுக்கு.
தந்தை-தாய் யாரென அறியாத பிறப்பு; சாபத்தோடு கூடிய வில்வித்தைக் கல்வி; கொடையாகப் பெற்ற அங்கநாட்டு அரசுரிமை; அவனை மிகுதியாக விரும்புவதாலும் அவனைச் சூரியனின் மகன் என நம்புவதாலுமே அவனிடமிருந்து விலகியிருக்கும் முதல் மனைவி (சூதர்குலப் பெண்); அவனை மிகுதியாக வெறுப்பதாலும் அவனைச் ‘சூதன் மகன்’ என நினைப்பதாலுமே அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் இரண்டாம் மனைவி (கலிங்கநாடு இளவரசி) என  விரியும் சூழல்கள் மூலம் கர்ணனின் உள்ளம் அடையும் கசாப்பை வெய்யோன் நாவல் பேசுகிறது. இந்திரப்பிரஸ்தம் செல்லும் வழியில் நாகர்களின் மூதன்னை திரியை உடனான சந்திப்பு கர்ணனின் பாதையை முற்றாக மாற்றுவதையும், நாகர்களின் இறுதிக் குழந்தையான அஸ்வசேனனைக் கையிலெடுத்து கர்ணன் வஞ்சினம் உரைப்பதையும்  நாவல் விரிவாகப் பேசுகிறது.  

இதனை நான் நாகபாசனின் சொல்லைக்கொண்டே கூற விரும்புகிறேன். நாகபாசனன் கர்ணனிடம் தன் குலத்தை முற்றழித்த பாண்டவர்களை முற்றழிக்க வேண்டும் என்று கோருகிறான். அதற்கு நாகபாசனன் கூறும் காரணம், “மண்ணில் எக்கண்ணீரும் மறுநிகர் வைக்கப்படாது போகலாகாது. அதன்பின் அறமென்பதில்லை” என்பதுதான்.  அதற்காகவே, அந்த அறத்தை நிலைநாட்டுவதற்காகவே, அந்தக் கண்ணீருக்கு மறுநிகர் வைக்கப்பட்டதே, கர்ணனின் வஞ்சம். கர்ணன், நாகர்களின் இறுதிக் குழந்தையான அஸ்வசேனனைக் கையிலெடுத்து, “இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக! இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்று வஞ்சினம் உரைக்கிறான்.
வெய்யோனில் துரியோதனனின் உளவிரிவு முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திரபிரஸ்த  ஒளிகோள் விழாவுக்கு பீமன்வந்து அழைத்ததும் தன் வஞ்சம் அனைத்தையும் மறந்து மனவிரிவு கொண்டு மூத்த சகோதரனாக, புதிய மனிதனாக துரியோதனன் மாற்றமடைந்து விழாவுக்கு செல்வதும், அங்கு திரெளபதியால் அவமானப்பட்டதாக உணர்ந்து மீள முடியாத வஞ்சத்திற்கு திரும்புவதும் விவரிக்கப்படுகிறது.   

வெய்யோனில் துரியோதனனின் உளவிரிவுதான் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளது. பீமன் அஸ்தினபுரியின் அரசவைக்கு வந்து, இந்திரப்பிரஸ்தம் ஒளிகோள்விழாவுக்கு அழைப்புவிடுக்கும் போது, சகுனியும் கனிகரும் எழுப்பிய வினாக்களுக்கு இறுதி விடையாகத் துரியோதனன், “அத்தனை ஐயங்களுக்கும் முடிவாக என் சொல் இதுவே. இன்று இவ்வாறு என் இளையவனே இங்கு வந்து என்னை அழைக்காவிட்டாலும்கூட, ஓர் எளிய அமைச்சர் வந்து என்னை அழைத்திருந்தாலும்கூட என் குருதியர் எழுப்பிய அப்பெருநகரம் எனக்குப் பெருமிதம் அளிப்பதே. அங்குச் சென்று அவர்களின் வெற்றியைப் பார்ப்பது எனக்கு விம்மிதமளிக்கும் தருணமே. பாரதவர்ஷத்தின் முகப்பிலேற்றிய சுடரென அந்நகர் என்றும் இருக்க வேண்டும். அதற்கென வாளேந்தி உறுதி கொள்வதில் எனக்கு எவ்வித தாழ்வுமில்லை” என்கிறான். அவன் ஒவ்வொரு சொல்லும் நம் மனத்தில் அவனை திருதராஷ்டிரருக்கு இணையாகவே வைத்துவிடுகிறது. திருதராஷ்டிரரின் விரிந்தமனம் போலவே துரியோதனனின் மனமும் மிகவும் விரிந்து மலர்ந்திருக்கிறது.  தன்னுடைய எல்லாப் பிழைகளுக்கும் ஒட்டுமொத்தமாக மனம்திறந்து பாண்டவர்களிடம் மன்னிப்புக் கோரும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட துரியோதனன் கர்ணனிடம், “இன்று காலை என்னருகே யயாதியும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் விசித்ரவீரியரும் நின்றிருப்பதை உணர்ந்தேன். ஐயமே இல்லை. இன்று நான் அவர்களின் மானுட வடிவமே” என்று கூறுகிறான். இவ்வாறு, மனத்தளவில் முற்றிலும் மாறிவிட்ட துரியோதனன், தன் ஆசான் பலராமரின் முன்னிலையில் பாண்டவர்களிடம் மன்னிப்புக்கோர தருணம் நோக்குகிறான். ஆனால், ஊழ் அவனை அத்தகைய சூழலிலிருந்து விலக்கிவிடுகிறது. வழக்கம்போல தன்னுடைய உணர்ச்சிமேலீட்டால் கர்ணனின் அறிவுரைகளை, சொற்களைப் புறக்கணித்து வெண்பளிங்குத் தரையில் உருவாக்கப்பட்டிருந்த உண்மைத் தடாகத்தை ‘மாயத் தடாகம்’ எனத் தவறுதலாக நினைத்து, கால்வைத்து சறுக்குகிறான். அடுத்தகணமே தூய்மை அடைந்திருந்த அவன் மனம் முழுமையாகவே அழுக்காகிறது. அவன் நிலையழிகிறான். அந்தச் சறுக்கல்தான் அவனுக்கு ஊழ் அளித்த சாபம். அதிலிருந்து அவன் விடுபடவேயில்லை.  
திரௌபதி துர்வாச மாமுனிவரின் சொல்லை ஏற்று, இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் பாண்டவர்களைக்கொண்டு குளிர்மழைக் காண்டவத்தை அழித்தல், நாகர்களின் இடப்பெயர்வு, இந்திரப்பிரஸ்தத்தில் கலிங்கச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட ஜலவிஹாரத்தில் (நீர்மாளிகை) நிகழ்த்தப்பட்ட ஆடிப்பாவை நிகழ்ச்சி எனக் கதை நகர்கிறது.  

திரௌபதி துர்வாச மாமுனிவரின் சொல்லை ஏற்று, இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் பாண்டவர்களைக்கொண்டு குளிர்மழைக் காண்டவத்தை அழித்தல், நாகர்களின் இடப்பெயர்வு, இந்திரப்பிரஸ்தத்தில் கலிங்கச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட ஜலவிஹாரத்தில் (நீர்மாளிகை) நிகழ்த்தப்பட்ட ஆடிப்பாவை நிகழ்ச்சி எனக் கதை நிகர்கிறது.  
பானுமதியின் ஆலோசனையை ஏற்று, துரியோதனனும் கர்ணனும் சிவதரும் இணைந்து கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள்களைச் சிறையெடுப்பது, சிவதர் மட்டும் அகப்பட்டுக் கொள்ள  மூன்றுமாதங்களுக்குப் பின்னர் ஈட்டுச்செல்வம் செலுத்தப்பட்டு மீட்கப்படுவதும்  இந்தச் சிறையெடுப்பு நிகழ்வில் துரியோதனனின் தங்கை துச்சளையின் கணவரும் சிந்துநாட்டு அரசருமான ஜயத்ரதனுக்கு கர்ணன் பாடம் புகட்டுவதும் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.  

பானுமதியின் ஆலோசனையை ஏற்று, துரியோதனனும் கர்ணனும் சிவதரும் இணைந்து கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள்களைச் சிறையெடுக்கின்றனர்.  சிவதர் மட்டும் அகப்பட்டுக் கொள்கிறார். சிவதர் சிறைப்பட்டு, வாளால் வெட்டுண்டு, மூன்றுமாதங்களுக்குப் பின்னர் ஈட்டுச்செல்வம் செலுத்தப்பட்டு, மீட்கப்படுகிறார். இந்தச் சிறையெடுப்பு நிகழ்வில் துரியோதனனின் தங்கை துச்சளையின் கணவரும் சிந்துநாட்டு அரசருமான ஜயத்ரதனுக்குக் கர்ணன் மிகச் சரியாகப் பாடம்புகட்டுகிறான்.
இந்திரப்பிரஸ்தம் செல்லும்போது அஸ்தினபுரியின் படகில் துரியோதனனுக்கும் மகத மன்னருக்கும் நடைபெறும் மல்யுத்தம். கர்ணனின் இரண்டாம் மனைவியின் ஆணையைக் கர்ணனிடம் இறுமாப்புடன் கூறிய கலிங்கச் சேடியைப் பார்த்து கௌரவர் சுஜாதன் வஞ்சினம் உரைப்பது. துச்சளையும் ஜயத்ரதரும் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது அவர்களை வரவேற்பதற்காகக் கௌரவர்களின் பிள்ளைகள் ஏறத்தாழ 800பேர் கோட்டைவாயிலுக்குச் செல்வது. மண்ணுக்குள் இருக்கும் நாகர்களின் உலகம், கர்ணன் மகத மன்னருடன் நட்புக்கொள்ளுதல். எளிய மக்களுள் சிலர் அவ்வப்போது கர்ணனின் மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் காணுதல். துச்சளை-கர்ணன் இடையிலான அண்ணன் - தங்கை உறவுமுறை. அணுக்கர் சிவதரின் பேச்சை மீறி கர்ணன் அழையா விருந்தினராக இந்திரப்பிரஸ்தத்துக்குச் சென்று சில நிகழ்வுகளால் அவமானப்படுதல். கர்ணன் பேரரசி குந்தி தேவியின் அழைப்பினைப் புறக்கணித்தல். கௌரவர்களின் பிள்ளைகளோடு இணைந்து பீமன் ஏரியில் நீர்விளையாட்டை மேற்கொள்ளுதல். ‘அனுமன் ஆலயத்தில் இருக்கும் யாராலும் தூக்கமுடியாத, வழக்கமான கதாயுதத்தைவிடப் பதினெட்டு மடங்கு பெரியதான கதாயுதத்தை ஏந்துபவனால் இந்த அஸ்தினபுரி முற்றழியும்’ என்று கூறும் கௌரவர் குண்டாசியின் ‘தீர்க்கதரிசனம்’. நாகர்களின் இறுதி மகவான அஸ்வசேனனைக் கொல்லுமாறு இளைய யாதவர் கூறியும் அர்ஜுனன் அவனைக் கொல்லாதிருத்தல் என கதையோட்டக் காட்சிகள் இந்த வெய்யோனில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
 
இந்திரப்பிரஸ்தம் செல்லும்போது அஸ்தினபுரியின் படகில் துரியோதனனுக்கும் மகத மன்னருக்கும் நடைபெறும் மல்யுத்தம். கர்ணனின் இரண்டாம் மனைவியின் ஆணையைக் கர்ணனிடம் இறுமாப்புடன் கூறிய கலிங்கச் சேடியைப் பார்த்து கௌரவர் சுஜாதன் வஞ்சினம் உரைப்பது. துச்சளையும் ஜயத்ரதரும் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது அவர்களை வரவேற்பதற்காகக் கௌரவர்களின் பிள்ளைகள் ஏறத்தாழ 800பேர் கோட்டைவாயிலுக்குச் செல்வது. மண்ணுக்குள் இருக்கும் நாகர்களின் உலகம், கர்ணன் மகத மன்னருடன் நட்புக்கொள்ளுதல். எளிய மக்களுள் சிலர் அவ்வப்போது கர்ணனின் மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் காணுதல். துச்சளை-கர்ணன் இடையிலான அண்ணன் - தங்கை உறவுமுறை. அணுக்கர் சிவதரின் பேச்சை மீறிய கர்ணன் அழையா விருந்தினராக இந்திரப்பிரஸ்தத்துக்குச் சென்று சில நிகழ்வுகளால் அவமானப்படுதல். கர்ணன் பேரரசி குந்தி தேவியின் அழைப்பினைப் புறக்கணித்தல். கௌரவர்களின் பிள்ளைகளோடு இணைந்து பீமன் ஏரியில் நீர்விளையாட்டை மேற்கொள்ளுதல். ‘அனுமன் ஆலயத்தில் இருக்கும் யாராலும் தூக்கமுடியாத, வழக்கமான கதாயுதத்தைவிடப் பதினெட்டு மடங்கு பெரியதான கதாயுதத்தை ஏந்துபவனால் இந்த அஸ்தினபுரி முற்றழியும்’ என்று கூறும் கௌரவர் குண்டாசியின் ‘தீர்க்கதரிசனம்’. நாகர்களின் இறுதி மகவான அஸ்வசேனனைக் கொல்லுமாறு இளைய யாதவர் கூறியும் அர்சுனன் அவனைக் கொல்லாதிருத்தல் எனச் சிறந்த கதையோட்டக் காட்சிகள் இந்த வெய்யோனில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
 
இதில் ஓர் அங்கத நாடகம் இடம்பெற்றுள்ளது. திரௌபதியையும் பாண்டவர்களையும் இளைய யாதவரையும் எள்ளிநகையாடும் நோக்கில் தொடங்கும் இந்த நாடகம், உள்ளீடாக இந்திரப்பிரஸ்தத்தின் பெருமையைப் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய மன்னர்களுக்கும் அறிவிக்கும் வகையில் மலர்கிறது. இதுவும் திரௌபதியின் திட்டமிட்ட செயல்தான். இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழா கலைநிகழ்வுகளுள் ஒன்றாக இந்த நாடகத்தைத் திரெளபதி அரங்கேற்றிவிடுவது அவளுடைய மிகச் சிறந்த அரசுசூழ்தலாகவே அமைகிறது.  

இதில் ஓர் அங்கத நாடகம் இடம்பெற்றுள்ளது. திரௌபதியையும் பாண்டவர்களையும் இளைய யாதவரையும் எள்ளிநகையாடும் நோக்கில் தொடங்கும் இந்த நாடகம், உள்ளீடாக இந்திரப்பிரஸ்தத்தின் பெருமையைப் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய மன்னர்களுக்கும் அறிவிக்கும் வகையில் மலர்கிறது.  இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழா கலைநிகழ்வுகளுள் ஒன்றாக இந்த நாடகத்தைத் திரெளபதி அரங்கேற்றிவிடுவது அவளுடைய  அரசுசூழ்தலாகவே நாவலில் அமைகிறது.  
== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==
கர்ணன் முதன்மைக் கதைமாந்தராகவும் துரியோதனன், திரௌபதி, மகத மன்னன் ஜராசந்தன், நாகர்களின் மூதன்னை திரியை, சிவதர், அஸ்வசேனன், துச்சளை, ஜயத்ரதன், இளைய யாதவர், அர்சுணன், குந்தி, பீமன், சுஜாதன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://venmurasudiscussions.blogspot.com/ வெண்முரசு விவாதங்கள் (venmurasudiscussions.blogspot.com)]

* [https://www.jeyamohan.in/146506/ ‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]

* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]

== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
<references />
<references />
{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:36, 26 April 2022

வெய்யோன் (‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி)

வெய்யோன்[1] (‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி) கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் விவரிக்கிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதியான ‘வெய்யோன்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் வெய்யோனை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

தந்தை-தாய் யாரென அறியாத பிறப்பு; சாபத்தோடு கூடிய வில்வித்தைக் கல்வி; கொடையாகப் பெற்ற அங்கநாட்டு அரசுரிமை; அவனை மிகுதியாக விரும்புவதாலும் அவனைச் சூரியனின் மகன் என நம்புவதாலுமே அவனிடமிருந்து விலகியிருக்கும் முதல் மனைவி (சூதர்குலப் பெண்); அவனை மிகுதியாக வெறுப்பதாலும் அவனைச் ‘சூதன் மகன்’ என நினைப்பதாலுமே அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் இரண்டாம் மனைவி (கலிங்கநாடு இளவரசி) என விரியும் சூழல்கள் மூலம் கர்ணனின் உள்ளம் அடையும் கசாப்பை வெய்யோன் நாவல் பேசுகிறது. இந்திரப்பிரஸ்தம் செல்லும் வழியில் நாகர்களின் மூதன்னை திரியை உடனான சந்திப்பு கர்ணனின் பாதையை முற்றாக மாற்றுவதையும், நாகர்களின் இறுதிக் குழந்தையான அஸ்வசேனனைக் கையிலெடுத்து கர்ணன் வஞ்சினம் உரைப்பதையும் நாவல் விரிவாகப் பேசுகிறது.

வெய்யோனில் துரியோதனனின் உளவிரிவு முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திரபிரஸ்த ஒளிகோள் விழாவுக்கு பீமன்வந்து அழைத்ததும் தன் வஞ்சம் அனைத்தையும் மறந்து மனவிரிவு கொண்டு மூத்த சகோதரனாக, புதிய மனிதனாக துரியோதனன் மாற்றமடைந்து விழாவுக்கு செல்வதும், அங்கு திரெளபதியால் அவமானப்பட்டதாக உணர்ந்து மீள முடியாத வஞ்சத்திற்கு திரும்புவதும் விவரிக்கப்படுகிறது.

திரௌபதி துர்வாச மாமுனிவரின் சொல்லை ஏற்று, இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் பாண்டவர்களைக்கொண்டு குளிர்மழைக் காண்டவத்தை அழித்தல், நாகர்களின் இடப்பெயர்வு, இந்திரப்பிரஸ்தத்தில் கலிங்கச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட ஜலவிஹாரத்தில் (நீர்மாளிகை) நிகழ்த்தப்பட்ட ஆடிப்பாவை நிகழ்ச்சி எனக் கதை நகர்கிறது.

பானுமதியின் ஆலோசனையை ஏற்று, துரியோதனனும் கர்ணனும் சிவதரும் இணைந்து கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள்களைச் சிறையெடுப்பது, சிவதர் மட்டும் அகப்பட்டுக் கொள்ள மூன்றுமாதங்களுக்குப் பின்னர் ஈட்டுச்செல்வம் செலுத்தப்பட்டு மீட்கப்படுவதும் இந்தச் சிறையெடுப்பு நிகழ்வில் துரியோதனனின் தங்கை துச்சளையின் கணவரும் சிந்துநாட்டு அரசருமான ஜயத்ரதனுக்கு கர்ணன் பாடம் புகட்டுவதும் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.

இந்திரப்பிரஸ்தம் செல்லும்போது அஸ்தினபுரியின் படகில் துரியோதனனுக்கும் மகத மன்னருக்கும் நடைபெறும் மல்யுத்தம். கர்ணனின் இரண்டாம் மனைவியின் ஆணையைக் கர்ணனிடம் இறுமாப்புடன் கூறிய கலிங்கச் சேடியைப் பார்த்து கௌரவர் சுஜாதன் வஞ்சினம் உரைப்பது. துச்சளையும் ஜயத்ரதரும் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது அவர்களை வரவேற்பதற்காகக் கௌரவர்களின் பிள்ளைகள் ஏறத்தாழ 800பேர் கோட்டைவாயிலுக்குச் செல்வது. மண்ணுக்குள் இருக்கும் நாகர்களின் உலகம், கர்ணன் மகத மன்னருடன் நட்புக்கொள்ளுதல். எளிய மக்களுள் சிலர் அவ்வப்போது கர்ணனின் மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் காணுதல். துச்சளை-கர்ணன் இடையிலான அண்ணன் - தங்கை உறவுமுறை. அணுக்கர் சிவதரின் பேச்சை மீறி கர்ணன் அழையா விருந்தினராக இந்திரப்பிரஸ்தத்துக்குச் சென்று சில நிகழ்வுகளால் அவமானப்படுதல். கர்ணன் பேரரசி குந்தி தேவியின் அழைப்பினைப் புறக்கணித்தல். கௌரவர்களின் பிள்ளைகளோடு இணைந்து பீமன் ஏரியில் நீர்விளையாட்டை மேற்கொள்ளுதல். ‘அனுமன் ஆலயத்தில் இருக்கும் யாராலும் தூக்கமுடியாத, வழக்கமான கதாயுதத்தைவிடப் பதினெட்டு மடங்கு பெரியதான கதாயுதத்தை ஏந்துபவனால் இந்த அஸ்தினபுரி முற்றழியும்’ என்று கூறும் கௌரவர் குண்டாசியின் ‘தீர்க்கதரிசனம்’. நாகர்களின் இறுதி மகவான அஸ்வசேனனைக் கொல்லுமாறு இளைய யாதவர் கூறியும் அர்ஜுனன் அவனைக் கொல்லாதிருத்தல் என கதையோட்டக் காட்சிகள் இந்த வெய்யோனில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

இதில் ஓர் அங்கத நாடகம் இடம்பெற்றுள்ளது. திரௌபதியையும் பாண்டவர்களையும் இளைய யாதவரையும் எள்ளிநகையாடும் நோக்கில் தொடங்கும் இந்த நாடகம், உள்ளீடாக இந்திரப்பிரஸ்தத்தின் பெருமையைப் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய மன்னர்களுக்கும் அறிவிக்கும் வகையில் மலர்கிறது. இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழா கலைநிகழ்வுகளுள் ஒன்றாக இந்த நாடகத்தைத் திரெளபதி அரங்கேற்றிவிடுவது அவளுடைய அரசுசூழ்தலாகவே நாவலில் அமைகிறது.  

கதை மாந்தர்

கர்ணன் முதன்மைக் கதைமாந்தராகவும் துரியோதனன், திரௌபதி, மகத மன்னன் ஜராசந்தன், நாகர்களின் மூதன்னை திரியை, சிவதர், அஸ்வசேனன், துச்சளை, ஜயத்ரதன், இளைய யாதவர், அர்சுணன், குந்தி, பீமன், சுஜாதன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.