விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள்
விடுதலைக்கு முன்பாகத் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகின. 1918 தொடங்கி, தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் பலவும் பேசாப் படங்கள் என்னும் சலனப் படங்களே. 1918-ல் வெளியான ‘கீசக வதம்’ தான் தமிழின் முதல் சலனத் திரைப்படமாகக் கருதப்படுகிறது. 1931 தொடங்கி பேசாப் படங்களின் எண்ணிக்கை குறைந்து பேசும் படங்கள் அதிகம் வெளியாகத் தொடங்கின.
சலனப் படங்கள்
தமிழில் வெளியான முதல் சலனப் படம் கீசக வதம் (1918). தமிழில் முதன் முதலில் அம்முயற்சியை மேற்கொண்டவர் ஆர். நடராஜ முதலியார். அதனைத் தொடர்ந்து ‘திரௌபதி வஸ்திராபரணம்’, ‘மஹிராவணன்’, ‘மார்க்கண்டேயன்’ போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
தணிக்கை முயற்சிகள்
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில், தணிக்கை வாரியம் காவல்துறை ஆணையாளர்களால் செயல்படுத்தப்பட்டது. 1918-ம் ஆண்டு ஆரம்பித்த இத்தணிக்கைச் செயல்பாடுகள், சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் (1920) கடுமையாக்கப்பட்டன. அதனால் சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டன. தேசியக் கருத்துக்களையோ, காந்திய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரித்த காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, புராணக் கதைகளையும், நாடகம் மற்றும் மாயாஜாலம் சார்ந்த சாகசக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் அதிகம் தயாரிக்க முன் வந்தனர்.
பேசும் படங்கள்
தமிழின் முதன்முதலில் வெளிவந்த பேசும் படமாக 1931-ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ திரைப்படம் கருதப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்பாக, அதே ஆண்டில், ‘குறத்திப் பாட்டும், டான்ஸூம்’ என்னும் குறும்படம் வெளியானது. நான்கு ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படமாகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ‘ராமாயணம்’, ‘காலவா’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘கிருஷ்ண லீலா’ போன்ற படங்கள் வெளியாகின. அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான ‘வள்ளி திருமணம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘பிரகலாதா’, ‘நந்தனார்’, ‘கோவலன்’ போன்றவையும் திரைப்படங்களாக வெளிவந்தன.
தடைகளும் விலக்குகளும்
தொடக்க காலத்தில், புராண, வரலாற்றுப் படங்களே அதிகம் வெளிவந்தன. பின்னரே சமூகம் சார்ந்த, மக்களின் பிரச்சனைகளைப் பேசும் மேனகா, ராஜாம்பாள், டம்பாச்சாரி போன்ற நாவல்களாக, நாடகங்களாக வெளிவந்து வெற்றிபெற்ற துப்பறியும் கதைகள் சில திரைப்படங்களாக வெளிவரத் தொடங்கின.
சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தியாகபூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் அரசு விலகியதால், ஆங்கிலேய அரசு தியாகபூமி போன்ற திரைப்படங்களுக்கு தடை விதித்தது. தணிக்கை முறையைக் கடுமையாக்கியது. போர்க்காலத்தில் கச்சா ஃபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தது. விடுதலைக்குப் பின்னர் அதிகத் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின.
விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
நாடு விடுதலை அடைந்த ஆகஸ்ட் 1947-க்கு முன்பாகச் சுமார் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றின் பட்டியல் இது.
எண் | ஆண்டு | திரைப்படம் |
---|---|---|
1 | 1931 | காளிதாஸ் |
2 | 1932 | காலவா |
சம்பூர்ண ஹரிச்சந்திரா | ||
பாரிஜாத புஷ்பஹாரம் | ||
ராமாயணம் | ||
3 | 1933 | சத்தியவான் சாவித்திரி |
நந்தனர் | ||
பிரகலாதா | ||
வள்ளி | ||
வள்ளி திருமணம் | ||
ஸ்ரீ கிருஷ்ணலீலா | ||
4 | 1934 | கோவலன் |
சக்குபாய் | ||
சதி சுலோச்சனா | ||
சீதா கல்யாணம் | ||
சீதா வனவாசம் | ||
தசாவதாரம் | ||
திரௌபதி வஸ்திராபகரணம் | ||
பவளக்கொடி | ||
பாமாவிஜயம் | ||
லவகுசா | ||
ஸ்ரீ கிருஷ்ணமுராரி | ||
ஸ்ரீனிவாச கல்யாணம் | ||
5 | 1935 | அதிரூப அமராவதி |
அல்லி அர்ஜுனா | ||
குலேபகாவலி | ||
கோபாலகிருஷ்ணா | ||
கௌசல்யா | ||
சந்திரசேனா | ||
சாரங்கதரா | ||
சுபத்ரா பரிணயம் | ||
மேனகா | ||
டம்பாச்சாரி | ||
ராஜாம்பாள் | ||
பட்டினத்தார் | ||
6 | 1936 | அலிபாதுஷா |
இந்திர சபா | ||
இரு சகோதரர்கள் | ||
உஷா கல்யாணம் | ||
கருட கர்வபங்கம் | ||
கிருஷ்ண நாரதி | ||
கிருஷ்ண அர்ஜுனா | ||
சத்யசீலன் | ||
சதிலீலாவதி | ||
சந்திரகாந்தா | ||
சந்திரமோகன் | ||
சந்திரஹாசா | ||
சீமந்தினி | ||
தர்மபத்தினி | ||
தாராச சங்கம் | ||
நவீன சாரங்கதரா | ||
நளாயினி | ||
பக்த குசேலர் | ||
பட்டினத்தார் | ||
பதிபக்தி | ||
பாதுகா பட்டாபிஷேகம் | ||
பாமா பரிணயம் | ||
பார்வதி கல்யாணம் | ||
மகாபாரதம் | ||
மனோகரா | ||
மிஸ்.கமலா | ||
மீராபாய் | ||
மூன்று முட்டாள்கள் | ||
மெட்ராஸ் மெயில் | ||
ராஜா தேசிங்கு | ||
ருக்மணி கல்யாணம் | ||
லீலாவதி | ||
சுலோசனா | ||
வசந்தசேனா | ||
விஸ்வாமித்ரா | ||
வீர அபிமன்யு | ||
7 | 1937 | அம்பிகாபதி |
அருணகிரிநாதர் | ||
ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்) | ||
கவிரத்ன காளிதாஸ் | ||
கிருஷ்ண துலாபாரம் | ||
கௌசல்யா பரிணயம் | ||
சதி அகல்யா | ||
சதி அனுசுயா | ||
சாமுண்டீஸ்வரி | ||
சிந்தாமணி | ||
சுந்தரமூர்த்தி நாயனார் | ||
சேத பந்தன் | ||
டேஞ்சர் சிக்னல் | ||
தேவதாஸ் | ||
நவயுவன் (கீதாசாரம்) | ||
நவீன நிருபமா | ||
பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி) | ||
பக்த அருணகிரி | ||
பக்த துளதிதாஸ் | ||
பக்த புரந்தரதாஸ் | ||
பக்த ஜெயதேவ் | ||
பத்மஜோதி | ||
பஸ்மாசூர மோகினி | ||
பாலயோகினி | ||
பாலாமணி | ||
மின்னல் கொடி | ||
மிஸ் சுந்தரி | ||
மைனர் ராஜாமணி | ||
ராஜசேகரன் | ||
ஏமந்த சோணகிரி | ||
ராஜபக்தி | ||
ராஜமோகன் | ||
வல்லாள மகாராஜா | ||
விக்ரம ஸ்திரீ சாகசம் | ||
விப்ரநாரயணா | ||
விராட பருவம் | ||
ஹரிஜனப் பெண் லட்சுமி | ||
8 | 1938 | அதிருஷ்ட நட்சத்திரம் |
அனாதைப் பெண் | ||
என் காதலி | ||
ஏசுநாதர் | ||
கண்ணப்ப நாயனார் | ||
கந்தலீலா | ||
கம்பர் அல்லது கல்வியின் வெற்றி) | ||
கிராம விஜயம் | ||
குற்றவாளி | ||
சுவர்ணலதா | ||
சேவாசதனம் | ||
தசாவதாரம் | ||
தட்ச யக்ஞம் | ||
தாயுமானவர் | ||
பக்த துகாரரம் | ||
துளசி பிருந்தா | ||
தெனாலிராமன் | ||
தேசமுன்னேற்றம் | ||
நந்தகுமார் | ||
பக்த நாமதேவர் | ||
பக்த மீரா | ||
பஞ்சாப் கேசரி | ||
பாக்ய லீலா | ||
பூகைலாஸ் | ||
போர்வீரன் மனைவி என்னும் அசட்டு வீரன் மனைவி | ||
மட சாம்பிராணி | ||
மயூரத்துவஜா | ||
மாயா | ||
முட்டாள் மாப்பிள்ளை | ||
யயாதி | ||
ராமானுஜர் | ||
ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்) | ||
வனராஜ கர்சன் | ||
வாலிபர் சங்கம் | ||
விப்ர நாராயணா | ||
விஷ்ணு லீலா | ||
வீர ஜெகதீஸ் | ||
ஜலஜா | ||
ஷோக் சுந்தரம் | ||
9 | 1939 | அடங்காபிடாரி |
அதிர்ஷ்டம் | ||
ஆனந்த ஆஸ்ரமம் | ||
கிராத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்) | ||
குமார குலோத்துங்கன் | ||
சக்திமாயா | ||
சங்கராச்சாரியார் | ||
சந்தனத்தேவன் | ||
சாந்த சக்குபாய் | ||
சிரிக்காதே | ||
சீதா பஹரணம் | ||
சுகுண சரசா | ||
சைரந்திரி (கீசக வதம்) | ||
சௌபாக்யவதி | ||
தியாகபூமி | ||
திருநீலகண்டர் | ||
பக்த குமணன் (ராஜயோகி) | ||
பம்பாய் மெயில் | ||
பாண்டுரங்கன் | ||
பாரத் கேசரி | ||
பிரகலாதா | ||
புலிவேட்டை | ||
மதுரை வீரன் | ||
மன்மத விஜயம் | ||
மாணிக்கவாசகம் | ||
மாத்ருபூமி | ||
மாயா மச்சீந்திரா | ||
மாயா மச்சீந்திரா | ||
மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் | ||
ரம்பையின் காதல் | ||
ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்) | ||
ராமலிங்க சுவாமிகள் | ||
வீர கர்ஜனை | ||
வீர சமணி | ||
10 | 1940 | அபலை |
இரண்டு அணா | ||
உத்தமபுத்திரன் | ||
ஊர்வசி சாகசம் | ||
காளமேகம் | ||
கிருஷ்ணன் தூது | ||
சகுந்தலை | ||
சத்யவாணி | ||
சதி மகானந்தா | ||
சதி முரளி | ||
சந்திரகுப்த சாணக்யா | ||
டாக்டர் | ||
தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்) | ||
தறுதலை தங்கவேலு | ||
தானசூர கர்ணா | ||
திருமங்கை ஆழ்வார் | ||
திலோத்தமா | ||
தேச பக்தி | ||
நவீன தெனாலிராமன் | ||
நவீன விக்ரமாதித்தன் | ||
நீலமலை குகை | ||
பக்த கோரகும்பர் | ||
பக்த சேஹா | ||
பக்த துளதிதாஸ் | ||
பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) | ||
பரசுராமர் | ||
பாக்கியதாரா | ||
பாலபக்தன் | ||
பால்ய விவாகம் | ||
புத்திமான் பலவான் ஆவான் | ||
பூலோகரம்பை | ||
போலி பாஞ்சாலி | ||
மணிமேகலை (பாலசன்யாசி) | ||
மீனாட்சி கல்யாணம் | ||
மும்மணிகள் | ||
ராஜயோகம் | ||
வாமன அவதாரம் | ||
வாயாடி | ||
விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) | ||
விமோசனம் | ||
ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை | ||
ஜெயக்கொடி | ||
ஜெயபாரதி | ||
ஷியாம் சுந்தர் | ||
ஷைலக் | ||
ஹரிஜன சிங்கம் | ||
ஹரிஹரமாயா | ||
11 | 1941 | அசோக் குமார் |
அப்பூதி | ||
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் | ||
ஆஷாடபூதி | ||
ஆர்யமாலா | ||
இழந்த காதல் | ||
கச்சதேவயானி | ||
கதம்பம் | ||
காமதேனு | ||
கிருஷ்ணகுமார் | ||
குமாஸ்தாவின் பெண் | ||
கோதையின் காதல் | ||
சந்திர ஹரி | ||
சபாபதி | ||
சாந்தா | ||
சாவித்திரி | ||
சுபத்ரா அர்ஜீனா | ||
சூர்யபுத்திரி | ||
தயாளன் | ||
தர்மவீரன் | ||
திருவள்ளுவர் | ||
நவீன மார்க்கண்டேயா | ||
பக்த கௌரி | ||
பிரேமபந்தன் | ||
மணிமாலை | ||
மதனகாமராஜன் | ||
மந்திரவாதி | ||
மானசதேவி | ||
மைனரின் காதல் | ||
ராவண விஜயம் | ||
ராஜா கோபிசந்த் | ||
ரிஷ்யசிருங்கர் | ||
வனமோகினி | ||
வேணுகானம் | ||
வேதவதி அல்லது சீதா ஜனனம் | ||
12 | 1942 | அல்லி விஜயம் |
அனந்தசயனம் | ||
ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்) | ||
ஆனந்தன் | ||
என் மனைவி | ||
கங்காவதார் | ||
கண்ணகி | ||
காலேஜ் குமாரி | ||
கிருஷ்ணபிடாரன் | ||
கிழட்டு மாப்பிள்ளை | ||
சதி சுகன்யா | ||
சம்சாரி | ||
சன்யாசி | ||
சிவலிங்க சாட்சி | ||
சோகா மேளர் | ||
தமிழறியும் பெருமாள் | ||
திருவாழத்தான் | ||
நந்தனார் | ||
நாரதர் | ||
பஞ்சாமிர்தம் | ||
பிருத்விராஜ் | ||
பூகைலாஸ் | ||
மனமாளிகை | ||
மனோன்மணி | ||
மாயாஜோதி | ||
ராஜசூயம் | ||
13 | 1943 | அசட்டுப்பிள்ளை |
அருந்ததி | ||
உத்தமி | ||
காரைக்கால் அம்மையார் | ||
குபேர குசேலா | ||
சிவகவி | ||
தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) | ||
திவான்பகதூர் | ||
தேவகன்யா | ||
மங்கம்மா சபதம் | ||
14 | 1944 | தாசி அபரஞ்சி |
பக்த ஹனுமான் | ||
பர்த்ருஹரி | ||
பிரபாவதி | ||
பூம்பாவை | ||
ராஜ ராஜேஸ்வரி | ||
ஜகதலப்பிரதாபன் | ||
ஹரிதாஸ் | ||
15 | 1945 | என் மகன் |
கண்ணம்மா என் காதலி | ||
கலிகால மைனர் | ||
சாலிவாகனன் | ||
சூரப்புலி | ||
சௌ சௌ | ||
பக்த காளத்தி | ||
பரஞ்சோதி | ||
பர்மா ராணி | ||
பள்ளி நாடகம் | ||
மஹா மாயா | ||
மானசம்ரக்ஷணம் | ||
மீரா | ||
16 | 1946 | அர்த்தநாரி |
ஆரவல்லி சூரவல்லி | ||
உதயணன் வாசவதத்தா | ||
குண்டலகேசி | ||
குமரகுரு | ||
சகடயோகம் | ||
சுபத்ரா | ||
முருகன் | ||
ராம் ரஹிம் | ||
ருக்மாங்கதன் | ||
லவங்கி | ||
வால்மீகி | ||
விகடயோகி | ||
வித்யாபதி | ||
விஜயலட்சுமி | ||
17 | 15/08/1947 வரை | கங்கணம் |
கடகம் | ||
சண்பகவல்லி | ||
சித்ரபகாவலி | ||
குண்டலகேசி | ||
சுலோசனா | ||
சுறுசுறுப்பு | ||
சுலோசனா | ||
தாய்நாடு | ||
துளசி ஜலந்தர் | ||
தெய்வ நீதி | ||
நாம் இருவர் | ||
ராமராஜ்ஜியம் | ||
ருக்மாங்கதன் | ||
பக்த துளதிதாஸ் | ||
உதயணன் வாசவதத்தா | ||
பிரம்மரிஷி விஸ்வாமித்ரா | ||
பொன்னுருவி | ||
மலைமங்கை | ||
ராஜகுமாரி | ||
ஜம்பம் | ||
ஜீவஜோதி | ||
ஸ்ரீலட்சுமி விஜயம் |
உசாத்துணை
- சாதனைகள் படைத்த தமிழ் வரலாறு, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், சிவகாமி பப்ளிஷர்ஸ், சென்னை.
- அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், சுவாசம் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: செப்டம்பர் 2022.
- Memories of Madras, Randor Guy, Creative Workshop, Chennai-600 086, First Edition: Aug, 2016
- தமிழ்த் திரைப்படங்கள் பட்டியல் தமிழ் திரை உலகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.