under review

வண்டிமலைச்சி அம்மன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 59: Line 59:
* [https://www.youtube.com/watch?v=U4PgK7encI4 வண்டிமலைச்சியம்மன் கும்பாபிஷேகம்]
* [https://www.youtube.com/watch?v=U4PgK7encI4 வண்டிமலைச்சியம்மன் கும்பாபிஷேகம்]
* [https://www.youtube.com/watch?v=u1kHli3L-10 அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சி அம்மன் சமேத வண்டிமலையான் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா]
* [https://www.youtube.com/watch?v=u1kHli3L-10 அருள்மிகு ஸ்ரீ வண்டிமலைச்சி அம்மன் சமேத வண்டிமலையான் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா]
{{first review completed}}
 
 
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:48, 28 August 2022

VandiMalaichi .jpg
வண்டிமலைச்சி1

வண்டிமலைச்சி அம்மன் திருநெல்வேலி, கன்னயாகுமரி மாவட்ட வழிங்களில் வழிபாட்டில் உள்ள நாட்டுப்புறத் தெய்வம். கைக்கோள முதலியார் இனத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறாள்.படுத்த கோலத்தில் இருக்கும் சிலை பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பெரும்பாலும் அருகே வண்டிமலையனின் சிலையும் இருக்கும்.

தொன்மங்கள்

Vma1.jpg

ஏழு அண்ணன் கதை

வண்டி மலையச்சி ஏழு சகோதரர்களுக்கு இளையவள். வண்டி மலையன் மீது காதல் கொண்டாள். ஏழு அண்ணன்களும் அவள் காதலுக்கு மறுப்பு சொல்லவே கோபம் கொண்ட வண்டி மலையச்சி வீட்டை விட்டுச் சென்றாள்.

வண்டி மலையச்சி வீட்டை விட்டுச் சென்றதும் வண்டிமலையனும் உடன் சேர்ந்துக் கொண்டான். இருவரும் சிறிது தூரம் சென்றதும் பசி பொறுக்க முடியாமல் தவித்தனர். இவர்கள் பசியைக் கண்ட நெசவு செய்யும் கைக்கோள முதலியார்கள் பசைக்கஞ்சி கொடுத்தனர். அவர்களிடம் பசியாறிச் சென்ற இருவரையும் ஏழு அண்ணன்மார்களும் தேடிக் கொன்றனர்.

பலியான இடத்தில் இருந்து வஞ்சினம் கொண்டு கிளம்பிச் சென்ற வண்டி மலையச்சி ஏழு அண்ணன்களையும் பழிவாங்கி,அவர்கள் குருதி குடித்து பின்னர் அடங்கினாள். அங்கிருந்து திரும்பி தன் பசியைப் போக்கிய முதலியார் வீட்டின் முன் காவல் தெய்வமாக அமர்ந்து அவர்கள் குறைகளைப் போக்கினாள்.

தாருகன் வதை கதை

காளியால் கொல்லப்பட்ட தாருகன் மேலிருந்து கீழே பூலோகத்தில் விழுந்தான். அவன் உடம்பிலிருந்து வழிந்த குருதியை வாரி வண்டியில் இடவும் அக்குருதியில் இருந்து வண்டி மலையன் பிறந்தான். அவனுக்குத் துணையாக அருகில் வண்டி மலையச்சியும் பிறந்தாள்.

இவர்கள் இருவரும் முப்புராதிகளுடன் சேர்ந்து அவர்கள் இட்ட பணியைச் செய்து வந்தனர். (முப்புராதி அம்மன் கதைப்பாடல்)

அஷ்ட கன்னிகள் கதை

Vma2.jpg
பிறப்பு

பூமிக்கு கீழே உள்ள நாகர் உலகத்தில் மாணிக்கப்புற்று ஒன்றில் நாகராஜனும், நாககன்னிகையும் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். இதனைப் போக்க இருவரும் குழந்தை வரம் வேண்டி சிவனிடம் தவம் புரிந்தனர். இவர்களின் தவவல்லமை நாளுக்கு நாள் கூடவே சிவன் வீற்றிருக்கும் கயிலை மலை முழுவதும் இருளடையத் தொடங்கியது. அதைக் கண்ட சிவபெருமான் தன் தவத்தில் இருந்து எழுந்தார். கயிலை இருளாவதற்கான காரணத்தை நந்தி தேவரிடம் உசாவி அறிந்தார்.

நாகராஜனும், நாககன்னிகையும் குழந்தைப் பேறு பெற்று வாழ இருவருக்கும் வரமருள்வதற்காக கயிலையை விட்டுச் சென்றார். சிவன் கயிலையை விட்டு செல்வதறிந்த பார்வதி தானும் உடன் வர வேண்டி பணிந்தாள். சிவன் பார்வதியிடம், 'தேவி கயிலையை இருள் சூழ்ந்துள்ளது. சிவன் சக்தி என நாம் இருவரும் கயிலையை விட்டுச் சென்றால் கயிலை மொத்தமாக இருண்டுவிடும். நீ இங்கு இரு. நான் வரமருளிவிட்டுத் திரும்பி வருகிறேன்’ என்றார். சிவனின் சொல் கேட்காமல் பார்வதி உடன் செல்ல பிடிவாதமாக இருந்தாள். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பார்வதி வாதம் செய்யும் தோறும் சிவனின் கோபம் கூடியது. சிவனின் கோபம் உச்சம் அடைந்த போது தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறி பார்வதியை எரித்து எட்டு முட்டைகளாக மாற்றியது. சிவன் அந்த எட்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு நாக தம்பதியரிடம் சென்றார். நாகக்கன்னிகையின் கையில் எட்டு முட்டைகளையும் கொடுத்து, 'இதனை நாற்பத்தியோரு நாட்கள் பாதுகாத்து வந்தால் உங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்’ என்றருளி மறைந்தார்.

அஷ்டக்கன்னிகள்

சிவனின் சொல் கேட்டு நாகராஜனும், நாககன்னிகையும் எட்டு முட்டைகளையும் பாதுகாத்து வந்தனர். நாற்பத்தியோராம் நாள் முடிவில் அதிலிருந்து எட்டுக் கன்னிகைகள் வெளிவந்தனர். முதல் முட்டையிலிருந்து வண்டிமலைச்சி வெளிவந்தாள். அவளைத் தொடர்ந்து முத்தாரம்மன், மூன்றாவதாக முப்பிடாதி, நான்காவது முட்டையில் இருந்து சந்தனமாரி வெளிவந்தாள். அக்னிமாரி ஐந்தாவது முட்டையில் இருந்து வெளிவந்தாள், தொடர்ந்து கருங்காளி, பத்திரகாளி, உச்சினி மாகாளி என அடுத்தடுத்த முட்டையிலிருந்து வந்தனர்.

நாகத் தம்பதியர் இவர்கள் எட்டு பேரையும் நல்ல முறையில் வளர்த்தனர். பருவமடைந்த கன்னிகைகள் மனதில் அவர்கள் பிறப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. பெற்றோர் இருவரும் நாகப் பிறவிகளாக இருக்க அவர்கள் உடல் மட்டும் எப்படி மனித உருக்கொண்டது என எண்ணினர். அவர்கள் சந்தேகத்தை பெற்றோரிடமே நேரடியாகக் கேட்டனர். நாக தம்பதியர் அதனை சொல்ல மறுக்கவே எட்டு பேரும் தனித்தனியாக சிவனை நோக்கித் தவமிருந்தனர்.

மகிஷன் வதம்

எட்டு கன்னியரின் தவத்தின் பொருட்டு சிவன் மீண்டும் கயிலையை விட்டு வந்தார். எட்டு பேரிடமும் அவர்களின் பிறப்பின் ரகசியத்தைப் பற்றிச் சொன்னார். மேலும் சிவன் எட்டு பேருக்கும் மகிஷனின் கதையைச் சொல்லலானார்.

பூலோகத்தில் மச்சரிசி வனத்தில் எருமைத்தலையும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரன் ஆட்சி செய்து வந்தான். தன் தவத்தின் வல்லமையால் சிவனிடம் தனக்கு தேவர்கள், ஆண்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான். சிவனின் வரம் கிடைத்ததும் தனக்கு சாகா வரம் கிடைத்தது என்றெண்ணி மகிழ்ந்தான். ஆணவம் தலைக்கேறவே தேவருலகம் சென்று இந்திரனை போருக்கு அழைத்தான். இதனை அறிந்த இந்திரன் அங்கிருந்து தப்பி கயிலைக்குச் சென்று சிவனிடம் முறையிட்டான்.

இச்செய்தியை சிவன் எட்டு கன்னிகைகளிடம் கூறி, "பார்வதிக்கு தான் அளித்த எட்டு சாபங்களின் பயனாகப் பிறந்த உங்கள் எட்டு பேரால் தான் மகிஷாசுரன் அழிக்கப்படுவான்." எனக் கூறினார். அதனைக் கேட்ட எட்டுக் கன்னியரும், "நாங்கள் அவ்வாறு மகிஷனை அழித்து கயிலை திரும்பினால் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணந்துக் கொள்ள வேண்டும்" என வேண்டினர். சிவன், "எட்டு கன்னியரின் வேண்டுதல் நிறைவேற்றப்படும் வென்று வாருங்கள்" எனச் சொல்லி மறைந்தார்.

சிவன் சொல்லைக் கேட்ட எட்டு கன்னியரும் நாகருலகத்தில் இருந்து புறப்பட்டனர். சிவன் கொடுத்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வண்டிமலைச்சி தலைமையில் எட்டு பேரும் பூலோகம் சென்றனர். எட்டு கன்னியருக்கும், மகிஷனுக்கு நீண்ட போர் நிகழ்ந்தது. எட்டாவது நாள் போரில் மகிஷனின் தலையை வண்டி மலைச்சி கொய்தாள்.

மகிஷனை வென்ற அஷ்ட கன்னியர் கயிலையை நோக்கி விரைந்தனர். அவர்கள் வருவதை தன் தவத்தால் அறிந்த சிவபெருமான் பிரம்மாவை அழைத்து, "பிரம்ம தேவா, நீ அவர்கள் வரும் வழியில் உள்ள வண்டு மலைக்குச் சென்று எட்டு வண்டுகளைப் பிடித்து எட்டுக் குழந்தைகளாக மாற்றி அவர்கள் வரும் வழியில் கண்ணில் படும்படி போட்டு விடு" என்றார். சிவன் சொல் படி பிரம்மனும் செய்தார்.

எட்டுக் கன்னியரும் தாங்கள் வரும் வழியில் வண்டுமலை அடுத்து குழந்தை அழும் சத்தம் கேட்டு நின்றனர். தாய்மையுணர்வு கொண்ட கன்னியர்கள் அந்த எட்டுக் குழந்தைகளை எடுத்துக் கொண்டு கயிலை விரைந்தனர். கையில் குழந்தையுடன் கன்னியர்களைக் கண்ட சிவபெருமான், "கன்னியர்களைக் குழந்தையுடன் வந்த பெண்களை என்னால் மணம் செய்துக் கொள்ள முடியாது" என மறுத்தார். சிவன் சொல்லால் ஏமாற்றமடைந்த கன்னியர்கள் கயிலையை விட்டு பூலோகம் சென்றனர். கன்னியரின் செயல் கண்ட சிவபெருமான் கயிலையில் உள்ள வேள்வித் தீயில் இருந்து தர்ப்பை ஒன்றை எடுத்து பூலோகத்தில் வீசினார். அதிலிருந்து வண்டிமலையன், வைரவன், அரசமகன் இருளப்பன், சட்டநாதன், சடுகநாதன், சங்கிலிவாய்ப் பூதத்தான், எண்ணிறந்த பேய்ப்படை, இருபத்தியொரு வாதைகள் தோன்றினர். அவர்கள் யாவரும் எட்டுக் கன்னியருக்குத் துணையாக பூலோகம் சென்றனர்.

அவர்கள் எல்லோரும் பூலோகம் வந்ததை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு மனிதர்கள் அச்சப்படும் படியான செயல்களைச் செய்தனர். அவர்கள் செயலால் அச்சமடைந்த மக்கள் பூசாரியை அழைத்துக் குறிகேட்டனர். பூசாரி வந்திருக்கும் எட்டுக் கன்னியர்களையும் அவர்களின் துணை வாதைகளையும் அறிந்தார். அச்சப்பட்டு நின்ற மக்களிடம், "கயிலையிலிருந்து அஷ்ட கன்னியரும் அவர்களின் துணை வாதைகளும் வந்துள்ளனர். அவர்களுக்கு கோவில் கட்டி வழிபட்டால் பயம் நீங்கும்" என்றார். இதனைக் கேட்டவர்கள் வண்டி மலையச்சிக்கு நாகலாபுரத்தில் கோவில் எழுப்பினர். அங்கிருந்து தாங்கள் இடம்பெயர்ந்த இடத்திலெல்லாம் வண்டி மலையச்சிக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.

சிலை வடிவம்

Vma.jpg

வண்டி மலையச்சி கோவிலில் வண்டி மலையனுடன் கிடந்த நிலையில் (சயன நிலையில்) அமைத்திருப்பாள்.

வழிபாடு

ஆடி, ஆவணி மாதங்களில் செவ்வாய்கிழமை பொங்கல் வைத்து வழிபடுவர். திங்கட்கிழமை வன்னிகுளம் கருப்பசாமிக் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வண்டி மலையனையும், மலையச்சியையும் அழைத்து வருவர். செவ்வாய் இரவு மாரியம்மன் கோவிலில் இருந்து கும்பம் கொண்டு வருவர். அன்று பொங்கல் வைத்து கோழி, சேவல் இறைச்சியுடன் படைப்பு வைப்பார்கள். மாவிளக்கு கொண்டு வருவார்கள். புதன் மாலை மஞ்சள் நீராட்டு முடிந்த பின் பள்ளயம் பிரித்துக் கொடுத்து வழிபடுவர்.

வழிபடும் ஊர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம், அயன் பொம்மையாபுரம் போன்ற ஊர்களில் வண்டி மலைச்சியம்மனும், வண்டி மலையனும் கிடந்த கோலத்தில் மல்லாந்து படுத்தப்படி உள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள நாட்டார்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வண்டி மலையன் உருவம் உள்ளது.

குமரி மாவட்டத்தில் வேளாளர்குடியினர் இவர்கள் இருவருக்கும் பூசை செய்கின்றனர். இங்கே கார்த்திகை மாதத்தில் திருவிழா நடைபெறும். சுசீந்திரம், தாழக்குடி கோவில்களிலும் இதுவே நடைமுறை.

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page