being created

மேலாங்கோடு மகாதேவர் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "{{being created}} This page is being created by User:Arulj7978 Category:Tamil Content")
 
No edit summary
Line 2: Line 2:
This page is being created by [[User:Arulj7978]]

கன்னியாகுமரி மாவட்டம் மேலாங்கோடு ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் காலகாலர் லிங்க வடிவில் உள்ளார். [[சிவாலய ஓட்டம்]] நிகழும் பன்னிரு சிவாலயங்களில் எட்டாவது ஆலயம்.

== இடம் ==
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமம் மேலங்கோடு. நாஞ்சில் நாட்டில் மேலாங்கோடு என்னும் பெயர் இசக்கியம்மனுடன் தொடர்புடையது. மேலாங்கோடு யட்சிகளின் ஊர் என்ற பொருளில் கதைகள் உள்ளன.

மேலாங்கோடு கோவிலுகாக மட்டுமே பெயர் பெற்ற ஊர். இங்கு மக்கள் குடியிருக்க வில்லை. சிவன் கோவிலுடன்சகோதரிகள் என அறியப்படும்  இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் இங்கு உள்ளன.
== மூலவர் ==
மூலவர் காலகாலர் 60 செ.மீ உயர லிங்க வடிவில் உள்ளார். லிங்கம் சரிந்த நிலையில் உள்ளது. லிங்கத்தின் உச்சி பகுதி அரைவட்ட கோள வடிவில் இல்லமல் சற்று குவிந்து உள்ளது. மூலவருக்கு வெள்ளி கவசம் உண்டு.
== தொன்மம் ==
மார்கண்டேயன் கதையுடன் தொடர்புடைய கதையை கோவிலின் தலபுராணமாக கூறப்படுகிறது.
மிருகண்ட முனிவர் குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவன் தவத்திற்கு இரங்கி அறிவும் பக்தியும் உள்ள ஒரு மகன் வேண்டுமா இல்லை அறிவில்லாத பண்பற்ற பல குழந்தைகள் வேண்டுமா என்று கேட்டதுடன் ஒரு குழந்தை பிறந்தால் 16 ஆண்டும் பல குழந்தை பிறந்தால் பல ஆண்டும் உயிர் வாழும் என்று சொன்னார். முனிவர் ஒரு குழந்தை கேட்டார்.
சிவனிடம் வரம்பெற்று பிறந்த மகன் மார்கண்டேயன் சகல வேதங்களையும் கற்று வளர்ந்தான்.  தந்தையின் வரத்தின் செய்தி அறிந்திருந்த மார்கண்டேயன் 16 வயட்தில் சிவனே கதி என்று கிடந்தான். குறித்த காலத்தில் காலன் பாசக்கயிற்றை வீச மார்கண்டேயன் லிங்கத்தை கட்டிப்பிடிதான். லிங்கம் மார்கண்டேயனுடன் அசைந்து லிங்கம் சரிந்தது. உடனே லிங்கம் பிளந்து திரிசூலத்துடன் சிவன் வெளிப்பட்டு காலனை சூலத்தால் குத்தினான். மார்கண்டேயன் உயிர் பிழைத்தான்.
சிவலிங்கம் சரிந்து இருப்பதற்கு இது காரணமாக சொல்லபடுவதுடன் காலனின் பாசக்கயிற்றின் தடம் லிங்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
== கோவில் அமைப்பு ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:51, 11 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் மேலாங்கோடு ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் காலகாலர் லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் எட்டாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமம் மேலங்கோடு. நாஞ்சில் நாட்டில் மேலாங்கோடு என்னும் பெயர் இசக்கியம்மனுடன் தொடர்புடையது. மேலாங்கோடு யட்சிகளின் ஊர் என்ற பொருளில் கதைகள் உள்ளன.

மேலாங்கோடு கோவிலுகாக மட்டுமே பெயர் பெற்ற ஊர். இங்கு மக்கள் குடியிருக்க வில்லை. சிவன் கோவிலுடன்சகோதரிகள் என அறியப்படும் இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் இங்கு உள்ளன.

மூலவர்

மூலவர் காலகாலர் 60 செ.மீ உயர லிங்க வடிவில் உள்ளார். லிங்கம் சரிந்த நிலையில் உள்ளது. லிங்கத்தின் உச்சி பகுதி அரைவட்ட கோள வடிவில் இல்லமல் சற்று குவிந்து உள்ளது. மூலவருக்கு வெள்ளி கவசம் உண்டு.

தொன்மம்

கோவில் அமைப்பு