first review completed

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்: Difference between revisions

From Tamil Wiki
(Language template added)
No edit summary
Line 6: Line 6:
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
[[File:Madhanasundhara vilasam 1.jpg|thumb]]
[[File:Madhanasundhara vilasam 1.jpg|thumb]]
இந்நூல் இரண்டாம் சிவாஜி மன்னரின் உத்தரவின் பெயரில் அருணாசலக்கவி இயற்றினார்.
இந்நூல் இரண்டாம் சிவாஜி மன்னரின் உத்தரவின் பெயரில் [[அருணாசலக் கவிராயர்|அருணாசலக்கவி]] இயற்றினார்.


== காலம் ==
== காலம் ==
இந்நூல் இரண்டாம் சிவாஜியின் ஆணைப்படி எழுதப்பட்டுள்ளது என்ற குறிப்பால் இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு. இரண்டாம் சிவாஜி காலம் பொ.யு. 1696 – 1726.
இந்நூல் இரண்டாம் சிவாஜியின் ஆணைப்படி எழுதப்பட்டுள்ளது என்ற குறிப்பால் இதன் காலம் 18-ஆம் நூற்றாண்டு. இரண்டாம் சிவாஜியின் காலம் பொ.யு. 1696 – 1726.


== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==
Line 37: Line 37:
<references />
<references />


{{Ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:30, 20 August 2023

Madhanasundhara vilasam.jpg

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் மராட்டியர் ஆட்சியில் எழுதப்பட்ட நாடக நூல்.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

ஆசிரியர்

Madhanasundhara vilasam 1.jpg

இந்நூல் இரண்டாம் சிவாஜி மன்னரின் உத்தரவின் பெயரில் அருணாசலக்கவி இயற்றினார்.

காலம்

இந்நூல் இரண்டாம் சிவாஜியின் ஆணைப்படி எழுதப்பட்டுள்ளது என்ற குறிப்பால் இதன் காலம் 18-ஆம் நூற்றாண்டு. இரண்டாம் சிவாஜியின் காலம் பொ.யு. 1696 – 1726.

நூல் அமைப்பு

இந்நூல் சிவபெருமான் அருள் பெற்ற மக்களின் விளையாட்டைப் பாடுவது. மதனசுந்தரப் பெருமாளை குலத் தெய்வமாக கொண்ட சோழ மன்னனின் நான்கு பிள்ளைகளின் விளையாட்டு, சிவபெருமானிடம் கொள்ளும் பக்தி, சோழ மன்னனின் பிரார்த்தனைக்கு இணங்கி சிவன் பிள்ளைகளை வாழ்த்துவதுமாய் அமைந்தது இந்நாடகம். இதில் வரும் சோழேந்திரன் என்னும் பெயர் சோழ மன்னனை குறிப்பதில்லை என கி.வா. ஜகந்நாதன் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகள் நால்வரும் முதலில் கழற்சிக்காய் விளையாட்டை தொடங்குகின்றனர். [1] பின் கழற்சிக்காய் ஊசல் என்ற விளையாட்டை ஆடினர். ஒரு கழற்சிக்காயை கோட்டில் வைத்து அதன் மேல் வேறொரு கழற்சிக்காயை ஏற்றி இதனை விளையாடுவர். அதன் பின் பந்து விளையாட்டை தொடங்கி ஆனைபந்து, குதிரைப்பந்து என விளையாடினர். ஒருவன் கிட்டியினால் பந்தை அடிக்க அனைவரும் கிட்டிப்பந்து விளையாடத் தொடங்கினர். பின் பாண்டி விளையாட்டு, சில்லை வீசிக் காலால் எற்றிடும் விளையாட்டு, ஒவ்வொரு பகுதியாக தாண்டி பின் காலில் மொச்சிக் கட்டிக் கொள்வர், உப்புக்கோடு, நாலூமூலை தாச்சி, கண்ணாமூச்சி ஆகியன விளையாடினர்.

இறுதியாக நால்வரும் சேர்ந்து கொப்பி தட்டிப் பாடி விளையாடினர். இதில் மதனசுந்தரேசப் பெருமாளை புகழ்ந்து பாடுவர். தன் பிள்ளைகள் இப்படி விளையாடுவதைக் கண்ட அரசன், ”தன் குழந்தைகளுக்கு தீர்க்காயுளும், மற்ற நலங்களும் அருள வேண்டும்” என வேண்டுவார். மன்னரின் வேண்டுதலுக்கு இணங்க சிவன் தன் உமையோடு எழுந்தருளி மன்னரின் குழந்தைகளை வாழ்த்துவார் என நூல் அமைந்துள்ளது.

முதலில் கணபதி அகவல் உள்ளது, தொடர்ந்து கதாசங்கிரக அகவல்[2] இடம்பெற்றிருக்கும். அதன் பின் நாடகம் தொடங்கும்.

இந்நூலில் பல விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

நாடக வடிவம்

மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் நாடகத்தில் 6 விருத்தங்கள், 1 அகவல், 1 கொச்சகம், 16 சிந்துக்கள், 4 வசனப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கழற்சிக்காயில் விழும் எண்களுக்கு ஏற்ப ஒன்றுக்கு சிவன், இரண்டிற்கு சக்தி, மூன்றுக்கு மும்மூர்த்திகள், நான்கிற்கு சதுர்வேதங்கள், ஐந்திற்கு பஞ்சபூதங்கள், ஆறுக்கு சாஸ்திரங்கள், ஏழு கடல்களையும், எட்டு திக்கியங்களையும், நவ ரத்தினங்களையும், பத்து திசைகளையும் சொல்லி பாடுவதாய் அமைந்த விளையாட்டு
  2. கதையின் சுருக்கப்பாடல். கதைகளை நாடகமாக நிகழ்த்துபவர்கள் முதலில் கதை முழுவதையும் தெரிவிக்கும் ஒரு பாடலை பாடுவர். இதனை நிருபணம் என்பர்.



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.