being created

மங்கலங்கிழார்

From Tamil Wiki
Revision as of 08:24, 4 April 2024 by Tamizhkalai (talk | contribs)

மங்கலங்கிழார் (இயற்பெயர்:குப்பன், குப்புசாமி) (1895 - ஆகஸ்ட் 31, 1953) தமிழறிஞர்.

பிறப்பு, கல்வி

குப்பன் தமிழ்நாடு வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் இணையருக்கு 1895-ல் பிறந்தார். இயற்பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். , தமக்கையின் கணவர் மரணமடைந்ததால் பள்ளிக் கல்வி இடை நின்றது.

தமக்கையார் குடும்பத்தைக் காப்பாற்ற தச்சுத்தொழில் செய்தார். ஓய்வு நேரங்களில் தமிழறிஞர் டி.என்.சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்து பயின்றார். மே.வீ. வேணுகோபாலப்பிள்ளையிடமும், கா.ர.கோவிந்தராச முதலியாரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் கற்றார். வ.உ. சிதம்பரனாருடன் நட்பு கொண்டு அவருடன் இணைந்து திருக்குறள் பயின்றார்.

தனி வாழ்க்கை

கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் தமது தந்தையார் பார்த்த ‘ஊர்மணியக்காரர்’ பணியைத் தாமே ஏற்றார்.

1922-ல், திருவள்ளூரைச் சேர்ந்த கமலம்மாளை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

விருதுகள், பரிசுகள்

நூல்கள்

  • தவளமலைச் சுரங்கம்
  • தமிழ்ப் பொழில்
  • சிறுவர் சிறுகதைகள்
  • வடவெல்லை
  • தமிழ்நாடும் வடவெல்லையும்
  • சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
  • நளவெண்பா - விளக்க உரை
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண வினா - விடை
  • நன்னூல் உரை மற்றும்
  • தனிக் கட்டுரைகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.