being created

பொன்மனை மகாதேவர் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 14: Line 14:

பொன்மனை முன்பு அடர்ந்த காடாக இருக்கையில் இப்பகுதியில் காணிக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். திப்பிலான் என்பவன் ஒருநாள் மரம் வெட்டி கொண்டிருந்தபோது வெட்ட்றுவாள் கல்லில் பட்டு கல்லில் ரத்தம் கசிந்தது. ஊரார் வந்து புதர்களை அகற்றி பார்க்கையில் சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அங்கே கோவில் கட்டி பூஜை செய்து வழிபட்டனர். கோவில் காணிகாரன் பெயரில் தீம்பிலான் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு பின்னர் தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் ஆனது. தீம்பிலான் வெட்டிய தடம் சிவலிங்கதில் காணப்படுவதாக நம்பப்படுகிறது.  

== கோவில் அமைப்பு ==
கோவில் ஒரு ஏக்கர் பரப்பு கொண்டது. கோவிலை சுற்றிய பகுதிகளும் குளமும் கோவிலுக்கு சொந்தமானவை.
கிழக்கு பார்த்த கோவிலின் முன் பகுதி யானை நுளையும் உயரமுள்ள தோரண வாயில் கேரள பாணி ஓட்டு கூரையால் ஆனது. கிழக்கு வெளிபிராகாரத்தில் கேரள பாணி கல்விளக்கு உள்ளது. வடகிழக்கில கோவில் அலுவலகம் உள்ளது. நடுவில் 1994 நிறுவப்பட்ட 40 அடி உயரமுள்ள செம்புத்தகடு வேய்ந்த கொடிமரம் உள்ளது. தென்கிழக்கில் நாகர் சிற்ப்பங்கள் உள்ளன.
மேற்கு வாசலும் தோரண வாயிலும் உண்டு. வடமேற்கு மூலையில் யட்சி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வடக்கு வாசலும் உள்ளது.
சதுர அமைப்பில் உள்ள கோவிலின் நடுவில் கருவறையும் எதிரே நந்தி மண்டபமும் உள்ளன. சுற்றி சுற்று மண்டபங்கள் உள்ளன. வெளி பிராகாரம் கருங்கல் பாவப்பட்டுள்ளது.
முன்வாசலை கடந்து தெற்கும் வடக்கும் 16 தூண்கள் கொண்ட இரண்டு கல்மண்டபங்கள் தரைமட்டத்திலிருந்து 25 செ.மீ. உயரமுடையத்தில் உள்ளன. தூண்களில் சிற்பங்கள் இல்லை. தூண்களின் அமைப்பை கொண்டு 19 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அ.கா. பெருமாள் ஊகிகிறார்.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:22, 8 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் சுயம்பு லிங்கமாக உள்ளார். தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் என்பது ஆவணங்களில் உள்ள அதிகாரபூர்வ பெயர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஐந்தாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் பொன்மனை பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஊர். குலசேகரம் அரசமூடு சட்ந்திப்பில் இருந்து சுருளோடு செல்லும் சாலையில் 5 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி(கோதையாறு) ஆற்றின் இடது பக்கம் உள்ளது. பழையாற்றின் ஒரு பிரிவு இவ்வூரை ஒட்டி செல்கிறது.

மூலவர்

மூலவர் தீம்பிலான்குடி மகாதேவர் லிங்க வடிவில் உள்ளர். தலைப்பகுதியில் வெட்டுபட்ட அடையாளம் உள்ளது. கருவறை சிவலிங்கதிற்கு ஆவுடையார் கிடையாது. அஷ்டபந்தன பிரதிஷ்டை செய்யப்படாத சுயம்பு லிங்கமாகும்.

தொன்மம்

பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலின் தலபுராணம் வாய்மொழி கதையாக உள்ளது.

பொன்மனை முன்பு அடர்ந்த காடாக இருக்கையில் இப்பகுதியில் காணிக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். திப்பிலான் என்பவன் ஒருநாள் மரம் வெட்டி கொண்டிருந்தபோது வெட்ட்றுவாள் கல்லில் பட்டு கல்லில் ரத்தம் கசிந்தது. ஊரார் வந்து புதர்களை அகற்றி பார்க்கையில் சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்தனர். அங்கே கோவில் கட்டி பூஜை செய்து வழிபட்டனர். கோவில் காணிகாரன் பெயரில் தீம்பிலான் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டு பின்னர் தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் ஆனது. தீம்பிலான் வெட்டிய தடம் சிவலிங்கதில் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

கோவில் அமைப்பு