under review

புகழ்ச்சி மாலை

From Tamil Wiki
Revision as of 09:24, 5 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புகழ்ச்சி மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவர வஞ்சிப்பாவால் பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை. ஆண்களைப் பாடுவது நாமமாலை.

இதன் இலக்கணத்தை கூறும் இலக்கண விளக்க நூற்பா:

மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம் என நவில்வர்
                                       - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

பன்னிரு பாட்டியல்

வெள்ளடி இயலான் புணர்ப்போன் குறிப்பின்
தள்ளா இயலது புகழ்ச்சி மாலை.’
                                      பன்னிரு பாட்டியல்-287

என்று புகழ்ச்சி மாலைக்கு இலக்கணம் கூறுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page