under review

பன்னிரு படைக்களம் (வெண்முரசு நாவலின் பத்தாம் பகுதி): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 21: Line 21:
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*[https://www.jeyamohan.in/146508/ 'பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
*[https://www.jeyamohan.in/146508/ 'பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
== இணைப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:57, 5 July 2023

பன்னிரு படைக்களம் ('வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி)

பன்னிரு படைக்களம்[1] ('வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதி) சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணராலும் மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதைச் சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இது நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் பத்தாம் பகுதியான 'பன்னிரு படைக்களம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மார்ச் 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூன் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

பன்னிரு படைக்களத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் சூதாட்ட நிகழ்வே பன்னிருபடைக்களத்தின் மையப்புள்ளி. ஒட்டுமொத்த மகாபாரதக் கதைமாந்தர்களின் எண்ணவோட்டம் திசைமாறும் பெருந்திருப்புமுனையாக இந்தச் சூதாட்டக்களமே அமைந்து விடுகிறது. அந்த வகையில், இந்தப் 'பன்னிருபடைக்களம்’ ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் வெண்முரசு நாவலுக்கும் கதையோட்ட மையத்தையும் கதையின் முக்கிய திருப்பத்தையும் கொண்டுள்ளது. பன்னிருபடைக்களத்தில் சேதிநாட்டரசர் சிசுபாலனின் முழு வாழ்வும் கூறப்படுகிறது நான்கு வேதங்களுக்கு மாற்றாக நாகவேதத்தை நிலைநாட்டும் வேள்வியை . மகதநாட்டு மன்னர் ஜராசந்தன் நடத்த முயற்சிப்பதும், அதைத் தடுக்க இளைய யாதவரும் பீமனும் மகதநாட்டுக்குள் புகுதலும் ஜராசந்தன் தன்னிலை உணர்ந்து தன்னுடைய பொறுப்புகளைத் தன் மகனிடம் ஒப்படைத்தலும் 'இளைய யாதவர்தான் பரம்பொருள்’ என்று ஜராசந்தன் உய்த்துணர்தலும், ஜராசந்தன்-பீமன் மல்யுத்தமும் நாவலில் காட்டப்பட்டுள்ளது. ஜராசந்தனைக் கொன்ற பின்னர் இளைய யாதவர் மகத நாட்டை ஜராசந்தனின் மகனிடமே ஒப்படைத்தலும் ஜராசந்தனின் மரணத்துக்குப் பிழையீடு செய்ய சிசுபாலன் வஞ்சினம் கொள்வதும் கூறப்படுகிறது. விதுரரால் அஸ்தினபுரிக்கு அழைக்கப்படும் யுதிஷ்ட்ரர் சூதாட்ட நிகழ்விற்கு ஒப்புக்கொள்வதும், அது தொடர்பாக அவர் பிற பாண்டவர்களுடன் நிகழ்த்தும் உரையாடலும் இந்த நாவலில் விரிவாக வருகிறது. நகுலனுடனான உரையாடல் யுதிஷ்ட்ரரை நிலையிழக்கச் செய்வதும் பிறருடனான உரையாடலில் அவர் தன் தரப்பாக ஒரு நியாயத்தைப் பேச முடிவதும் நாவலில் விரிவாகக் காட்டப்படுகிறது. படைக்கள சூதாட்டத்தை நிறுத்த பிற பாண்டவர்கள் மட்டுமன்றி திருதராஷ்டிரரின் அணுக்கரான விப்ரரின் முயற்சியும் தோல்வியுறுவதும், முதலில் சூதாட்டத்தை விரும்பாத திருதராஷ்டிரர் விப்ரரின் இறப்புக்குப் பின் மனம் மாறி சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறார். சூதாட்டக்களத்தில் கௌரவர் விகர்ணனுடன் மகிடன் முதலானவர்கள் மனத்தளவில் உரையாடுவதும் தர்மருடன் தெய்வங்கள் மாறி மாறி உரையாடுவதும் இந்த நாவலின் நாடகீயத் தருணங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. திரௌபதியின் ஆடைபறிப்பு நிகழ்வும் திரௌபதியின் மானம் காக்கப்படும் தருணமும் புதிய கோணத்தில் நாவலில் காட்டப்பட்டுள்ளது. பன்னிருபடைக்களத்திற்கு மற்றொரு சிறப்பு 'இரட்டையர்கள்’. சமக்ஞை-சாயை, ரம்பன் -– கரம்பன், நரன் -– நாரணன், ஹம்சன் -– டிம்பகன், சலன் - – அசலன், அணிகை –- அன்னதை, அஸ்வினி - தேவர்கள் எனப் பன்னிருபடைக்களம் நெடுகிலும் இரட்டையர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வரலாறும் வாழ்வனுபவங்களும் அதிகற்பனையாக விவரிக்கப்பட்டு ஊழின் சூதாட்டக் களமாக நாவலில் தொடர்ந்து வருகின்றன.

கதை மாந்தர்

தருமர், திரௌபதி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் திருதராஷ்டிரர், துரியோதனன், துச்சாதனன், விகர்ணன், பீமன், நகுலன் மற்றும் சமக்ஞை-சாயை, ரம்பன் -– கரம்பன், நரன் -– நாரணன், ஹம்சன் -– டிம்பகன், சலன் - – அசலன், அணிகை –- அன்னதை, அஸ்வினி - தேவர்கள் ஆகிய இரட்டையர்களும் துணைமைக் கதைமாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page