under review

பண்டமாறான் ஜகன்மாதா திருக்கோயில் (மலேசிய இந்திய திருநங்கைகளின் ஆலயம்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed to template)
Line 42: Line 42:
* <nowiki>https://www.thestar.com.my/news/nation/2007/07/24/devotees-from-malaysia-and-singapore-fulfil-vows-to-deity-for-transsexuals</nowiki>
* <nowiki>https://www.thestar.com.my/news/nation/2007/07/24/devotees-from-malaysia-and-singapore-fulfil-vows-to-deity-for-transsexuals</nowiki>
* Mdm.Saira Banu, Personal Communication, September 18, 2022.
* Mdm.Saira Banu, Personal Communication, September 18, 2022.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Ready for Review]]
{{ready for review}}
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 11:56, 25 September 2022

பண்டமாறான் ஜெகன்மாதா

பண்டமாறான் ஜெகன்மாதா ஆலயம், மலேசிய இந்திய திருநங்கைகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், அச்சமூகத்தினரின் முதன்மையான கூடு களமாகவும் திகழ்கிறது. இக்கோயில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்தில் அமைந்துள்ளது. பண்டமாறான் ஜெகன்மாதா ஆலயத்தைத் திருநங்கைகளும் பொதுமக்களும் 'பாஹூச்சாரா ஆலயம்' என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் திருநங்கை சமூகத்தின் முக்கியப் பண்பாட்டு மற்றும் வாழ்வியல் களமாகத் திகழ்கிறது.

ஆலய வரலாறு

சிலாங்கூரிலுள்ள கிள்ளான் துறைமுகத்தில் அமைந்திருக்கும் பண்டமாறான் எனும் இடத்தில் அமைந்துள்ளதால் பண்டமாறான் ஜெகன்மாதா ஆலயம் என்றே இக்கோயில் அடையாளம் குறிப்பிடப்படுகிறது. பாஹுச்சாரா என்ற பெயரைப் பவுத்ரமாதா என்று அழைக்கும் திருநங்கைகள், அது வடமொழி பெயராகியதால், உச்சரிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தைக் கருத்தில் கொண்டு ஜெகன்மாதா என்ற பெயரில் ஆலயத்தை எழுப்பியுள்ளனர். முழுவதுமாக திருநங்கை சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில் அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்பொழுது பரமேஸ்வரி (சின்னூர் அம்மா) எனும் திருநங்கை அம்மையாரால் புரணமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில், எம். ஆஷா தேவி என்பவரால் வித்திடப்பட்டதாகும்.

ஆஷா தேவி

மலேசிய இந்திய திருநங்கைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போராடிய எம். ஆஷா தேவி அம்மையார் முதன் முதலாக பாஹுச்சாரா தேவியினுடைய சித்திரத்தை மட்டுமே தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பூசை செய்து வந்துள்ளார். இப்பூசையின்பால் ஈர்க்கப்பட்ட பரமேஸ்வரி தன்னுடைய முழு முயற்சியினால் இன்னும் பல திருநங்கைகளின் ஆதரவோடு தற்போது இருக்கக்கூடிய ஆலயத்தை எழுப்பினார். இது பரமேஸ்வரி அம்மையாரின் கணவரின் விருப்பத் தெய்வமான வீர வேட்டைக்காரர் முனியாண்டி எனும் ஆலயத்தோடு இணைந்து அமைந்துள்ளது.

தற்போது பண்டமாறான் ஆலயத்தில் இருக்கின்ற பாஹுச்சாரா தேவியினுடைய சுதைச் சிற்பம் புதியது. தொடக்கத்தில் கிள்ளானில் அமைந்துள்ள ஜாலான் காவாட்டில் உள்ள ஒரு திருநங்கையின் வீட்டிலுள்ள பூசை அறையில் தேவியின் ஐம்பொன் சிலை மட்டும் வைக்கப்பட்டுப் பூசைகள் செய்யப்பட்டு வந்தது. பாஹுச்சாரா தேவிக்கு முதல் திருவிழாவும் அங்கு கொண்டாடப்பட்டுள்ளது. ஐம்பொன் சிலை தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. இதுவே மலேசியாவில் முதல் பாஹுச்சாரா தேவியினுடைய சிலை. மறுவருடம் அவ்விடத்திற்கு அருகிலிருந்த மாரியம்மன் கோயிலில் தேவியின் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே தேவியின் ஆலயத்தை எழுப்ப தற்போது உள்ள இடம் கிடைத்தது. அப்போதுதான் இந்தச் சுதைச் சிற்பம் எழுப்பப்பட்டது. குஜராத்திலுள்ள தேவியின் ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு பரமேஸ்வரி அம்மையார் அச்சிலையில் சிறிய மாறுதல்களையும் செய்தார்.

தேவியின் உருவமைப்பு

ஐம்பொன் சிலை

தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐம்பொன் சிலையில் பாஹுச்சாரா தேவி  தன்னுடைய இடது கையில் சூலம் பிடித்திருப்பார். தேவியின் மகுடத்திற்கு பின்னால் தீ ஜுவாலை இருக்கும். ஆலயம் உருவான பிறகு பாஹுச்சாரா தேவி சேவலின் மீது அமர்ந்தவாறு இருக்கும் சிலை வடிக்கப்பட்டுள்ளார். இச்சிலை கிழக்கு நோக்கி உள்ள பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. வலது இடது கைகளில் அபயமுத்திரை காட்டியும், வலது புற மேற்கையில் வாள் பிடித்தும், இடது புற மேற்கையில் ஏடு பிடித்தபடியும் அமர்ந்தநிலையில் தேவி காட்சி தருகிறார். தன்னுடைய வலது காலை இடது காலின் மீது போட்டிருக்கிறார்.

பூசை

தேவிக்கு மிகவும் சிறிய அளவிலான பூசைகளே தொடக்கத்தில் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆஷா தேவி அம்மையார் தொடக்கத்தில் வெறும் பழங்களை மட்டுமே படையலாக வைத்துப் பூசை செய்தார். குங்கிலியம் சேர்த்த தூபம் மட்டுமே பெரிய அளவில் காட்டி இத்தேவிக்குப் பூசை நடந்தது. மந்திர உச்சாடனங்கள் ஏதும் அப்போது பயன்படுத்தப்படவில்லை. பின்னர், ஆலயம் உருவான பிறகும் தேவிக்கு மற்ற ஆலயங்களைப் போல் நித்திய பூசைகள் ஏதும் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போதே அவை நடைபெற்று வருகின்றன. அதோடு, இந்த தேவிக்கு உரிய மந்திரங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் மற்ற அம்மன்களுக்குப் பொதுவாக பயன்படுத்தப்படும் மந்திரங்களே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேவிக்குரிய மந்திரங்களைத் திருநங்கைகள் முழுவதுமாக அறிந்து கொள்ளாதது காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆணுறுப்பு அறுவைச் சிகிச்சை செல்லும் திருநங்கைகள் மட்டுமே இந்த அம்மனுக்குப் படையல் வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். அப்படையல்களிலும் அதிகப்படியாக பழங்களே இடம்பெறுகின்றன.

கோயில் திருவிழா

பண்டமாறான் ஜெகன்மாதா ஆலயத் திருவிழா பலரும் அறியும்வண்ணம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பாஹுச்சாரா நவமி என்ற நாளில் குஜராத்தில் இந்த அம்மனுக்கு விழாக்கள் செய்யப்படுகின்றன. ஆனால், மலேசியாவில் திருநங்கைகள் தங்களுடைய வேலை நாட்களைக் கருதி, தங்களுக்கு வசதிப்படும் நாட்களில் திருவிழாவினை மேற்கொள்கின்றனர். குஜராத்தில் செய்யப்படும் வழிபாடுகள் போலல்லாமல், துர்க்கைக்குப் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் கூறப்பட்டு அம்மனுக்குரிய சடங்குகளே திருவிழாவின் போது செய்யப்படுகின்றன.

திருவிழா ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. முகூர்த்தக் காலும் ஊன்றப்படுகிறது. ஆனால், பக்தர்களின் வசதியைக் கருதி பல மாதங்களுக்குப் முன்பிருந்தே கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீச்சட்டி அல்லது பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விரதங்களை மேற்கொள்கின்றனர். இரண்டாம் நாள், சிறப்புப் பூசைகளோடு அன்னதானம் வழங்கப்படுகிறது. மூன்றாம் நாளே பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி போன்றவைகளைத் தூக்கி வந்து அம்மனுக்குச் செலுத்துகிறார்கள். மாரியம்மனுக்கு எடுக்கப்படுவது போல கரகமும் எடுக்கப்படுகிறது. நான்காம் நாளன்று சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன. இறுதி நாளான ஐந்தாம் நாளன்று, காவல் தெய்வமான வீரர் வேட்டைக்காரர் முனியாண்டிக்குப் பூசைகள் செய்யப்பட்டுத் திருவிழா நிறைவுப்பெறுகிறது. அன்று, அன்னதானமும் வழங்கப்படுகிறது. தேவிக்கு தேரிழுக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

மாற்றங்கள்

சமீப காலமாக திருவிழாவின்போது ஐயர்களே யாகம் போன்றவற்றை வளர்த்துக், கலசம் தூக்கி, அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்து வைக்கிறார்கள். திருநங்கைகள் தற்போது நேரடியாக பாஹுச்சாராவிற்கு பூசைகள் திருவிழாக்களைச் செய்து வைப்பதில்லை. முந்தையக் காலங்களைப் போல் அல்லாமல், தற்பொழுது திருவிழாக்களில் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அதிகம் கலந்து கொள்கின்றனர்.

பாஹூச்சாரா தேவியின் புராண கதைகள்

  • இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பெசாராஜி எனும் இடத்தில் பாஹூச்சாரா தேவியின் பழமையான ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கி.பி 1839 அல்லது 1783 முதற்கொண்டு அங்கே அமைந்துள்ளது. பாஹூச்சாரா தேவி பற்றிய பல்வேறு புராண மற்றும் நாட்டார் கதைகள் அவளுடைய வரலாற்றினைக் கூறுபவையாக அமைந்துள்ளன. சாரன் (Charan) என்ற குலத்தில் பிறந்த பாபல் மற்று டேத்தா என்ற தம்பதியினருக்குப் பிறந்த பெண்ணாக இத்தேவி கூறப்படுகிறாள். அவள் தன்னுடைய தங்கையோடு காட்டு வழியில் பயணிக்கும் பாபிகா எனும் திருடனால் தாக்கப்பட்டுள்ளாள். அவனிடத்தில் சரணடையக் கூடாது என்ற நோக்கில் தன்னுடைய மார்பகங்களைக் கத்தியால் அறுத்துக்கொண்டு அத்திருடனை ஆண்மையற்றவனாகப் போகும்படி சாபமிட்டுள்ளாள். இச்சாபம் அவன் பாஹூச்சாரா மாதாவை வழிபட்டு ஒரு பெண் போலவே நடந்து கொண்டால்தான் தீரும் என்றும் வழிமுறை கூறியுள்ளாள். இந்த நம்பிக்கையே திருநங்கைகள் இத்தேவியைத் தங்களுக்குக் காவலாக எண்ணி வழிபடக் காரணமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது (அன்கித் சர்மா, 2016).
  • இத்தேவி தன்னுடைய கொடுமைக்காரக் கணவனின் ஆணுறுப்பை அறுத்த இளவரசி என்று கூறுகிறது. திருமண ஆன நாள் முதலே இளவரசியை நேசிக்காத அவன் இரவு நேரங்களில் காட்டிற்குச் சென்று தன்னுடைய பெண்தன்மையை வெளிப்படுத்திக் கொள்வான் எனவும் அக்கதை கூறுகின்றது (பதேல் & கௌசிக், 2012).
  • பாஹுச்சாரா மாதாவிடம் குழந்தை வரம் கேட்ட ஓர் அரசனுக்கு ஆண்மையற்ற ஒரு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ஜேதோ என்று பெயரிட்டுள்ளனர். அவனது கனவில் பின்னாளில் தோன்றிய பாஹூச்சாரா மாதா, அவனைத் தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டு ஒரு பெண்ணாக வந்து தனக்குச் சேவைச் செய்யும்படி கட்டளையிட்டுள்ளாள். அவனும் அவளுடைய வாக்கை ஏற்றுக்கொண்டு தன்னுடைய சாபத்தை நீக்கிக் கொண்டதாக அக்கதை நிறைவுப்பெறுகிறது. ஆண்மையற்ற ஒருவன் கனவில் பாஹூச்சாரா வந்து அழைப்பு விடுக்கும் பொழுது அவன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாக்கினை உதாசீனம் செய்தால் ஏழு பிறவிகளுக்கும் ஆண்மையற்றவனாகப் பிறக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் திருநங்கைகள் கொண்டுள்ளனர் (நந்தா, 1998).
  • மலேசியாவில் இத்தேவிக் குறித்த புராணங்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

இலக்கியத்தில்

எழுத்தாளர் ம. நவீன் எழுதிய 'சிகண்டி' நாவலில் பண்டமாறான் ஜெகன்மாதா ஆலயம் ஒரு கதைக்களமாக வருகிறது. இக்கோயில் திருவிழா குறித்த வர்ணனைகளும் இடம்பெறுகின்றன. மேலும் ஆஷா தேவி அவர்களின் ஆளுமை ஈபு எனும் கதாபாத்திரம் மூலம் ஆங்காங்கு புனைவாக்கப்பட்டுள்ளது. இந்நாவல் ஆஷா தேவி அவர்களுக்கே சமர்பணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்

  • ஆஷா; இனி - ம. நவீன்
  • Sharma, A.(2016, July, 16). Bahuchara Mata: The Goddess of Hijra Community.Hindu God
  • Ganesh. https://www.hindugodganesh.com/bahuchara-mata
  • Patel, K.(2012, June, 27). Bahuchara Mata Temple. Gujarat Tourist Guide.
  • https://gujarattouristguide.blogspot.com/2012/06/bahuchara-mata-temple.html
  • Nanda, Serena.(1998). Neither Man nor woman: The Hijras of India. 2
  • nd ed. Wadsworth Publishing.
  • Balan, S. (2014) Identity construction of Malaysian Indian transgenders. Journal of Indian
  • Culture and Civilization, 1. pp. 1-11.
  • Muthiah, W.(2007, July, 24). Devotees from Malaysia and Singapore fulfil vows to deity for
  • transsexuals.The Star.
  • https://www.thestar.com.my/news/nation/2007/07/24/devotees-from-malaysia-and-singapore-fulfil-vows-to-deity-for-transsexuals
  • Mdm.Saira Banu, Personal Communication, September 18, 2022.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.