ந. பிச்சமூர்த்தி

From Tamil Wiki
Na Pichamurthy.jpg

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் (கு.ப. ராஜகோபாலன்) இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர்; கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார். கு.ப.ரா.வின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

தனி வாழ்க்கை

வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை உடைய ந.பிச்சமூர்த்தி, 1900ம் வருடம், ஆகஸ்ட் 15 ம் தேதி, கும்பகோணத்தில் நடேச தீட்சிதர், காமாட்சியம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விடவே, பெற்றோர் இவருக்கு பிச்சை என்று பெயரிட்டுஅழைத்தனர். இந்த பெயரே பின்னாளில் ந.பிச்சமூர்த்தி ஆகியது.

ந.பிச்சமூர்த்தி யின் தந்தை, இவருக்கு ஏழு வயதாகும் போது இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி, கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் தத்துவம் படித்தார். பின் சென்னையில் சட்டம் படித்து விட்டு, 1924ம் ஆண்டு முதல் 1938 வரை கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப பணியாற்றினார்.

1924ம் ஆண்டு, சாரதா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னும் துறவு வாழ்க்கையை விரும்பி அலைந்திருக்கிறார். 1935ம் ஆண்டு, திருவண்ணாமலையில் ரமண மகிரிஷையையும் சித்தர் குழந்தைசாமியையும் சந்தித்து துறவு நிலை அருளுமாறு வேண்ட, அவர்கள் இவருக்கு மண வாழ்வே ஏற்றது என்று கூறிவிட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய படைப்புகள்

இலக்கிய இடம்

வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ரா.வுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். பிச்சமூர்த்தியின் கதைகள் கு.ப.ரா.வின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் உள்ளன. எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. பிற்காலத்தில் உருவான இத்தயை கதைகளுக்கு அவரே முன்னோடி எனலாம்.

படைப்புகள்

கவிதை

சிறுகதைகள்

கட்டுரைகள்

நாடகங்கள்

இறுதிக்காலம்

உசாத்துணைகள்