நினைவுச்சின்னம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நினைவுச்சின்னம் ( ) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய நாவல். மலேசியா வழியாக ஜப்பானியர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமைத்த சயாம் மரண ரயில்")
 
No edit summary
Line 1: Line 1:
நினைவுச்சின்னம் ( ) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய நாவல். மலேசியா வழியாக ஜப்பானியர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமைத்த சயாம் மரண ரயில்
நினைவுச்சின்னம் ( 2005) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய நாவல். மலேசியா வழியாக ஜப்பானியர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாக்கிய சயாம் மரண ரயில் என அழைக்கப்படும் ரயில்பாதை அமைப்பதற்காக கட்டாய உழைப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிர்துறந்த தமிழர்களின் வரலாற்றை இந்நாவல் சொல்கிறது.
 
== வரலாற்றுப் பின்புலம் ==
[[சயாம் மரண ரயில்பாதை]] என அழைக்கப்படும் ரயில்பாதையை 1942ல் ஜப்பானியர் அமைத்தனர்.  ஜப்பானியர் இரண்டாம் உலகப்போரின் இரண்டாம் கட்டத்தில் 1942ல் மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷாரை தோற்கடித்து சிங்கப்பூரையும் மலேசிய மையநிலத்தையும் கைப்பற்றினர். அந்நிலப்பகுதியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால் துறைமுகத்தில் இருந்து உள்நாடுகளுக்கு செல்லும் ரயில் இணைப்பு தேவை என உணர்ந்தனர். மேலும் சயாம் (தாய்லாந்து) நாட்டில் உள்ள பாங்காங் துறைமுகத்தில் இருந்து பர்மா வழியாக இந்தியா வரை ஓர் இருப்புப்பாதை போடப்பட்டால் தரைவழியாகப் படைகளைக் கொண்டுசென்று இந்தியாவை கைப்பற்றலாம் என திட்டமிட்டனர். ஆகவே பாங்காங் முதல் பர்மாவின் ரங்கூன் வரை ஒரு ரயில்பாதை போடப்பட்டது.
 
மிகக்குறுகிய காலத்தில் இந்த ரயில்பாதை போடப்பட்டது. சிறைக்கைதிகளுடன் மலேசியாவில் இருந்து வலுக்கட்டயாமாக அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை வரச்செய்யும்பொருட்டு தோட்டங்கள் செயற்கையாக மூடப்பட்டன. முற்றிலும் எதிர்மறையான சூழலில் கடுமையான மழையிலும், மலேரியா போன்ற நோய்களிலும், மிகக்குறைவான உணவாலும் பல்லாயிரம் தமிழ் உழைப்பாளிகள் அந்த ரயில்பாதைப்பணியில் உயிர்துறந்தனர்.1945 ல் மீண்டும் பர்மாவும் தாய்லாந்தும் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டன. மலேசியத் தொழிலாளர்கள் திரும்பிச்சென்றனர். நினைவுச்சின்னம் இந்த வரலாற்றுப்பின்னணியில் எழுதப்பட்டது
 
== முன்னோடி நாவல் ==
சயாம் மரண ரயில்பாதையின் வரலாற்றுப் பின்னணியில் சயாம் மரணரயில் என்னும் நாவல் ஆர்.சண்முகம் எழுதி வெளியாகியிருக்கிறது.
 
== எழுத்து, வெளியீடு ==
1990 மயில் என்னும் மலேசிய வார இதழில் இப்ந்நாவல் தொடராக வெளிவந்தது. 2005ல் இது ஒரு தமிழினி பதிப்பக வெளியீடாக நூல்வடிவம் கொண்டது
 
== கதைச்சுருக்கம் ==

Revision as of 23:57, 7 June 2022

நினைவுச்சின்னம் ( 2005) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய நாவல். மலேசியா வழியாக ஜப்பானியர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாக்கிய சயாம் மரண ரயில் என அழைக்கப்படும் ரயில்பாதை அமைப்பதற்காக கட்டாய உழைப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிர்துறந்த தமிழர்களின் வரலாற்றை இந்நாவல் சொல்கிறது.

வரலாற்றுப் பின்புலம்

சயாம் மரண ரயில்பாதை என அழைக்கப்படும் ரயில்பாதையை 1942ல் ஜப்பானியர் அமைத்தனர். ஜப்பானியர் இரண்டாம் உலகப்போரின் இரண்டாம் கட்டத்தில் 1942ல் மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷாரை தோற்கடித்து சிங்கப்பூரையும் மலேசிய மையநிலத்தையும் கைப்பற்றினர். அந்நிலப்பகுதியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால் துறைமுகத்தில் இருந்து உள்நாடுகளுக்கு செல்லும் ரயில் இணைப்பு தேவை என உணர்ந்தனர். மேலும் சயாம் (தாய்லாந்து) நாட்டில் உள்ள பாங்காங் துறைமுகத்தில் இருந்து பர்மா வழியாக இந்தியா வரை ஓர் இருப்புப்பாதை போடப்பட்டால் தரைவழியாகப் படைகளைக் கொண்டுசென்று இந்தியாவை கைப்பற்றலாம் என திட்டமிட்டனர். ஆகவே பாங்காங் முதல் பர்மாவின் ரங்கூன் வரை ஒரு ரயில்பாதை போடப்பட்டது.

மிகக்குறுகிய காலத்தில் இந்த ரயில்பாதை போடப்பட்டது. சிறைக்கைதிகளுடன் மலேசியாவில் இருந்து வலுக்கட்டயாமாக அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை வரச்செய்யும்பொருட்டு தோட்டங்கள் செயற்கையாக மூடப்பட்டன. முற்றிலும் எதிர்மறையான சூழலில் கடுமையான மழையிலும், மலேரியா போன்ற நோய்களிலும், மிகக்குறைவான உணவாலும் பல்லாயிரம் தமிழ் உழைப்பாளிகள் அந்த ரயில்பாதைப்பணியில் உயிர்துறந்தனர்.1945 ல் மீண்டும் பர்மாவும் தாய்லாந்தும் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டன. மலேசியத் தொழிலாளர்கள் திரும்பிச்சென்றனர். நினைவுச்சின்னம் இந்த வரலாற்றுப்பின்னணியில் எழுதப்பட்டது

முன்னோடி நாவல்

சயாம் மரண ரயில்பாதையின் வரலாற்றுப் பின்னணியில் சயாம் மரணரயில் என்னும் நாவல் ஆர்.சண்முகம் எழுதி வெளியாகியிருக்கிறது.

எழுத்து, வெளியீடு

1990 மயில் என்னும் மலேசிய வார இதழில் இப்ந்நாவல் தொடராக வெளிவந்தது. 2005ல் இது ஒரு தமிழினி பதிப்பக வெளியீடாக நூல்வடிவம் கொண்டது

கதைச்சுருக்கம்