under review

நா. எத்திராஜ்: Difference between revisions

From Tamil Wiki
(Added language category)
(Changed incorrect text: ==உசாத்துணை ==)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 3: Line 3:


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தஞ்சை நா. எத்திராஜ் என்னும் நா. எத்திராஜ், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் வே. நாயினா நாயுடு-தனலட்சுமி இணையருக்கு, பிப்ரவரி 10, 1927 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை விழுப்புரம, மயிலாடுதுறைப் பள்ளிகளில் படித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தஞ்சை நா. எத்திராஜ் என்னும் நா. எத்திராஜ், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் வே. நாயினா நாயுடு-தனலட்சுமி இணையருக்கு, பிப்ரவரி 10, 1927 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை விழுப்புரம், மயிலாடுதுறைப் பள்ளிகளில் படித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.


== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
Line 9: Line 9:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
நா. எத்திராஜ், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். [[சுதேசமித்திரன்]], [[கிராம ஊழியன் (சிற்றிதழ்)|கிராம ஊழியன்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], சௌராஷ்டிரமணி போன்ற பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. பல்வேறு தீபாவளி மலர், பொங்கல் மலர் இதழ்களில் எத்திராஜின் படைப்புகள் இடம்பெற்றன. எத்திராஜின் முதல் நூல் 'இளையபாரதம்' 1956-ல் வெளியானது. பணியில் இருந்த காலத்தில் 7 நூல்கள், 13 வானொலி நாடங்கள், 4 மேடை நாடகங்களை எழுதினார். பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மொழி பெயர்ப்புகள் உள்ளிட்ட நான்கு நூல்களை இந்திய அரசின் நூல் வெளியீட்டுத் துறை வெளியிட்டது. தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘நெஞ்சையள்ளும் தஞ்சை' என்ற நூலை  எழுதி வெளியிட்டார்.
நா. எத்திராஜ், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். [[சுதேசமித்திரன்]], [[கிராம ஊழியன் (சிற்றிதழ்)|கிராம ஊழியன்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], 'சௌராஷ்டிரமணி' போன்ற பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. பல்வேறு தீபாவளி மலர், பொங்கல் மலர் இதழ்களில் எத்திராஜின் படைப்புகள் இடம்பெற்றன. எத்திராஜின் முதல் நூல் 'இளையபாரதம்' 1956-ல் வெளியானது. பணியில் இருந்த காலத்தில் 7 நூல்கள், 13 வானொலி நாடங்கள், 4 மேடை நாடகங்களை எழுதினார். பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மொழி பெயர்ப்புகள் உள்ளிட்ட நான்கு நூல்களை இந்திய அரசின் நூல் வெளியீட்டுத் துறை வெளியிட்டது. தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘நெஞ்சையள்ளும் தஞ்சை' என்ற நூலை  எழுதி வெளியிட்டார்.
[[File:Na. Ethiraj Books.jpg|thumb|நா. எத்திராஜ் நூல்கள்]]
[[File:Na. Ethiraj Books.jpg|thumb|நா. எத்திராஜ் நூல்கள்]]


==நாடகம் ==
==நாடகம் ==
நா. எத்திராஜ், ‘சேகர் பி.ஏ.' என்றொரு வானொலி நாடகத்தை 1948-ல் எழுதி அரங்கேற்றினார். 'கிண்ணம் கவிழ்ந்தது' எனும் நாடகம் 'சுதேசமித்திரன்' இதழில் வெளி வந்தது. [[டி.என். சுகி சுப்பிரமணியன்|சுகி சுப்பிரமணியன்]], [[எம்.வி. வெங்கட்ராம்|எம்.வி.வெங்கட்ராம்]] வலியுறுத்தலினால் வரலாற்று நாடகங்கள் எழுதுவதில் அதிகக் கவனம் செலுத்தினார். திருச்சி வானொலி நிலையம் இவருடைய 13 நாடகங்களை ஒலிபரப்பியது.
நா. எத்திராஜ், ‘சேகர் பி.ஏ.' என்றொரு வானொலி நாடகத்தை 1948-ல் எழுதி அரங்கேற்றினார். 'கிண்ணம் கவிழ்ந்தது' எனும் நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளி வந்தது. [[டி.என். சுகி சுப்பிரமணியன்|சுகி சுப்பிரமணியன்]], [[எம்.வி. வெங்கட்ராம்|எம்.வி.வெங்கட்ராம்]] வலியுறுத்தலினால் வரலாற்று நாடகங்கள் எழுதுவதில் அதிகக் கவனம் செலுத்தினார். திருச்சி வானொலி நிலையம் இவருடைய 13 நாடகங்களை ஒலிபரப்பியது.


==பொறுப்பு ==
==பொறுப்புகள் ==


*புரோபஸ் கிளப் செயலாளர், தலைவர்
*புரோபஸ் கிளப் செயலாளர், தலைவர்
*மானம்புச்சாவடி கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புத் தலைவர்
*மானம்புச்சாவடி கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புத் தலைவர்
*தஞ்சை மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட அமைப்பின் மேனாள் தலைவர்
*தஞ்சை மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட அமைப்பின் மேனாள் தலைவர்
*[[இராமலிங்க வள்ளலார்|வள்ளலார்]] அருட்பணி மன்ற செயலாளர்
*வள்ளலார் அருட்பணி மன்ற செயலாளர்
*தஞ்சை மூத்த குடிமக்கள் சங்கம் உறுப்பினர்
*தஞ்சை மூத்த குடிமக்கள் சங்கம் உறுப்பினர்
*ஓய்வு ஊதியம் பெறுவோர் சங்க உறுப்பினர்
*ஓய்வு ஊதியம் பெறுவோர் சங்க உறுப்பினர்
*[[அகஸ்தியர் கதை|அகத்தியர்]] சன்மார்க்க சங்க உறுப்பினர்
*அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்
*முத்தமிழ் மன்ற உறுப்பினர்
*முத்தமிழ் மன்ற உறுப்பினர்
*உலகத் [[திருக்குறள்]] பேரவை உறுப்பினர்
*உலகத் திருக்குறள் பேரவை உறுப்பினர்
*கம்பன் கழக உறுப்பினர்
*கம்பன் கழக உறுப்பினர்
*மணல்மேடு இராமகிருஷ்ணா பேரவை உறுப்பினர்
*மணல்மேடு இராமகிருஷ்ணா பேரவை உறுப்பினர்
Line 35: Line 35:
*தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - கப்பலின் வரலாறு (1990)
*தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - கப்பலின் வரலாறு (1990)
*தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - வரலாற்று நாடகங்கள் (1992)
*தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - வரலாற்று நாடகங்கள் (1992)
*அண்ணல் [[காந்தி]]யடிகள் விருது
*அண்ணல் காந்தியடிகள் விருது
*குறள் நெறிச் செல்வர் விருது
*குறள் நெறிச் செல்வர் விருது
*தஞ்சை எழுத்தாளர் விருது
*தஞ்சை எழுத்தாளர் விருது
Line 93: Line 93:
*சரித்திர நாடகங்கள்
*சரித்திர நாடகங்கள்


==உசாத்துணை ==
== உசாத்துணை ==


*நா. எத்திராஜ் வாழ்க்கை வரலாறு, ப. இராசமாணிக்கம், கலைஞன் பதிப்பக வெளியீடு, 2021
*நா. எத்திராஜ் வாழ்க்கை வரலாறு, ப. இராசமாணிக்கம், கலைஞன் பதிப்பக வெளியீடு, 2021
Line 100: Line 100:
*[https://www.google.co.in/search?q=inauthor:%22%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%22&sca_esv=598312327&hl=en&tbm=bks&ei=9I2jZdOfJrjLseMP7sOc4Ac&start=0&sa=N&ved=2ahUKEwjT6cemrtyDAxW4ZWwGHe4hB3w4ChDy0wN6BAgPEAQ&biw=1130&bih=486&dpr=1.21 நா. எத்திராஜ் நூல்கள்: கூகிள் புக்ஸ்]
*[https://www.google.co.in/search?q=inauthor:%22%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%22&sca_esv=598312327&hl=en&tbm=bks&ei=9I2jZdOfJrjLseMP7sOc4Ac&start=0&sa=N&ved=2ahUKEwjT6cemrtyDAxW4ZWwGHe4hB3w4ChDy0wN6BAgPEAQ&biw=1130&bih=486&dpr=1.21 நா. எத்திராஜ் நூல்கள்: கூகிள் புக்ஸ்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:48, 5 March 2024

நா. எத்திராஜ்

நா. எத்திராஜ் (தஞ்சை நா. எத்திராஜ்) (பிறப்பு: பிப்ரவரி 10, 1927) எழுத்தாளர். நாடக ஆசிரியர். தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றினார். வரலாறு சார்ந்து பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். குறள் நெறிச் செல்வர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை நா. எத்திராஜ் என்னும் நா. எத்திராஜ், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் வே. நாயினா நாயுடு-தனலட்சுமி இணையருக்கு, பிப்ரவரி 10, 1927 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை விழுப்புரம், மயிலாடுதுறைப் பள்ளிகளில் படித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நா. எத்திராஜ், தஞ்சாவூரில், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் இளநிலை எழுத்தராகப் பணியாற்றினார். கண்காணிப்பாளராகப் பதவி உயர்வுபெற்றார். 1985-ல் பணி ஓய்வு பெற்றார். மனைவி: அம்சவள்ளி. இவர்களுக்கு நைனாராஜ், மல்லிகா என ஒரு மகன், ஒரு மகள்.

இலக்கிய வாழ்க்கை

நா. எத்திராஜ், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், கிராம ஊழியன், கல்கி, 'சௌராஷ்டிரமணி' போன்ற பல இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. பல்வேறு தீபாவளி மலர், பொங்கல் மலர் இதழ்களில் எத்திராஜின் படைப்புகள் இடம்பெற்றன. எத்திராஜின் முதல் நூல் 'இளையபாரதம்' 1956-ல் வெளியானது. பணியில் இருந்த காலத்தில் 7 நூல்கள், 13 வானொலி நாடங்கள், 4 மேடை நாடகங்களை எழுதினார். பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மொழி பெயர்ப்புகள் உள்ளிட்ட நான்கு நூல்களை இந்திய அரசின் நூல் வெளியீட்டுத் துறை வெளியிட்டது. தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘நெஞ்சையள்ளும் தஞ்சை' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

நா. எத்திராஜ் நூல்கள்

நாடகம்

நா. எத்திராஜ், ‘சேகர் பி.ஏ.' என்றொரு வானொலி நாடகத்தை 1948-ல் எழுதி அரங்கேற்றினார். 'கிண்ணம் கவிழ்ந்தது' எனும் நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளி வந்தது. சுகி சுப்பிரமணியன், எம்.வி.வெங்கட்ராம் வலியுறுத்தலினால் வரலாற்று நாடகங்கள் எழுதுவதில் அதிகக் கவனம் செலுத்தினார். திருச்சி வானொலி நிலையம் இவருடைய 13 நாடகங்களை ஒலிபரப்பியது.

பொறுப்புகள்

  • புரோபஸ் கிளப் செயலாளர், தலைவர்
  • மானம்புச்சாவடி கிளை நூலக வாசகர் வட்ட அமைப்புத் தலைவர்
  • தஞ்சை மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட அமைப்பின் மேனாள் தலைவர்
  • வள்ளலார் அருட்பணி மன்ற செயலாளர்
  • தஞ்சை மூத்த குடிமக்கள் சங்கம் உறுப்பினர்
  • ஓய்வு ஊதியம் பெறுவோர் சங்க உறுப்பினர்
  • அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்
  • முத்தமிழ் மன்ற உறுப்பினர்
  • உலகத் திருக்குறள் பேரவை உறுப்பினர்
  • கம்பன் கழக உறுப்பினர்
  • மணல்மேடு இராமகிருஷ்ணா பேரவை உறுப்பினர்
  • மனிதவள மேம்பாட்டுச் சங்க உறுப்பினர்
  • நகைச்சுவை மன்ற உறுப்பினர்

விருதுகள்

  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - கப்பலின் வரலாறு (1990)
  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு - வரலாற்று நாடகங்கள் (1992)
  • அண்ணல் காந்தியடிகள் விருது
  • குறள் நெறிச் செல்வர் விருது
  • தஞ்சை எழுத்தாளர் விருது
  • சிறந்த மூத்த குடிமகன் விருது
  • லண்டன் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டும் 25 பவுண்டு பரிசும்

ஆவணம்

நா. எத்திராஜின் வாழ்க்கை வரலாற்றை ப. இராசமாணிக்கம் நூலாக எழுதியுள்ளார். கலைஞன் பதிப்பகம் அதனை வெளியிட்டுள்ளது.

மதிப்பீடு

நா. எத்திராஜ் பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். நாடகங்களிலும், வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அதிக கவனம் செலுத்தினார். தஞ்சை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • இளையபாரதம்
  • பெர்னாட்ஷாவின் வாழ்வும் வாக்கும்
  • பாரதத்தின் வீரப்பெண்கள்
  • புகழ்பெற்ற நீதிபதிகள்
  • சரித்திர வீரர் சர்ச்சில் வாழ்க்கை வரலாறு
  • நீச்சல் வீரர் மிகிர்சென் வாழ்க்கை வரலாறு
  • டென்னிஸ் கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு
  • கப்பலின் வரலாறு: தோற்றமும் வளர்ச்சியும்
  • நெஞ்சையள்ளும் தஞ்சை
  • ஸ்ரீ சக்கரதாரியின் சுதர்சனச் சக்கரம்
  • அப்துல்லா: ஓர் இந்தியச் சிறுவனின் சாகசக் கதைகள்
  • கருணை மனம் வேண்டும்
  • பல்லவப் பேரரசு வரலாறு
  • முகலாய மாமன்னர்கள் வரலாறு
  • தமிழக மராட்டிய வரலாறு
  • பார் புகழ் ஞானிகள்
  • இணையற்ற இந்திய ராணிகள்
  • விஜய நகரப் பேரரசு வரலாறு
  • தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு
  • தமிழ் நேசச் செல்வர்கள்
  • மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு
  • இந்திய வரலாற்றில் சமயங்கள்
  • முத்தமிழ்க் கடவுள் முருகன்
  • தேவதாசி
  • மக்கள் மறவா மாமன்னர்கள்
  • இணைந்தோம் முன்னேறினோம்
  • காரணக் கதைகள்
  • கல்லுக்குள் ஈரம்
  • வரலாற்றை மாற்றிய சந்திப்புகள்
  • கன்னிப் போர்
  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்தியப் பெண்மணிகள்
  • பாரதத்தின் வீரப் பெண்கள்
  • கருணைக்கப்பால்
  • இதயம் கவரும் இந்தியக் கலாச்சாரம்
நாடகங்கள்
  • சேகர் பி.ஏ.
  • கிண்ணம் கவிழ்ந்தது
  • வரலாற்று நாடகங்கள்
  • சரித்திர நாடகங்கள்

உசாத்துணை


✅Finalised Page