being created

திற்பரப்பு மகாதேவர் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "{{being created}} This page is being created by User:Arulj7978 Category:Tamil Content")
 
No edit summary
Line 2: Line 2:
This page is being created by [[User:Arulj7978]]

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் வீரபத்திரர். [[சிவாலய ஓட்டம்]] நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும். 

== இடம் ==
கோதை ஆற்றின் கரையில் திற்பரப்பு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. ஓடி வந்து இங்கு 15 மீ உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. மார்த்தாண்டத்திலிருந்து 18 கி.மீ. வடக்கில் திருவட்டாறு – களியல் சாலையில் உள்ளது. கோதை ஆற்றின் கரையில் அருவிக்கு தெற்கில் ஆலயம் உள்ளது.

== பெயர் ==
ஸ்ரீவிலாசம் என்னும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து திற்பரப்பு என்னும் சொல் வந்ததாக கூறுகின்றனர். ஸ்ரீ – திரு; விசாலம் – பரப்பு. மனதிற்கு ரம்யத்தை தரும் இடம் என்பது பொருள். இது மலையாள இலக்கிய ஆசிரியர்கள் தரும் விளக்கம்.
== மூலவர் ==
கோவிலின் மூலவர் வீரபத்திரர் லிங்க வடிவில் உள்ளார். ஜடாதரர் என்றும் மகாதேவர் என்றும் அழைக்கபடுகிறார். மூலவர் வழக்கத்துக்கு மாறாக மேற்கு நோக்கி இருக்கிறார். நந்தி மூலவருக்கு நேர் எதிரில் அமராமல் சற்று விலகி உள்ளது.
== தொன்மம் ==
திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவ புராணம் சார்ந்த வாய்மொழி கதையே உள்ளது.
சிவனின் பேச்சை மதிக்காமல் பார்வதி தட்சனின் யாகத்துக்கு செல்கிறாள். சிவன் தனது அம்சமான வீரபத்திரனை அனுப்புகிரான். தட்சனின் யாகத்தை அழித்து ஆவேசமுடன் இருக்கும் வீரபத்திரன் அமைதியடைய வேண்டி நதியை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறான். காளியும் உடன் வந்து தியானத்தில் அமருகிறாள்.
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்க மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார் வீரபத்திரர். மூலவர் மேற்கு நோக்கி இருப்பதற்கு இந்த தொன்மமே காரணமாக சொல்ல படுகிறது. இத்தொன்மபடி நந்தி நதியை மறைகாமல் இருக்கவே சற்று விலகி இருக்கிறது.
== கோயில் அமைப்பு ==
திற்பரப்பு சிவன் கோவில் இரண்டு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் உள்ளது. நான்குபுறமும் 4.50 மீ கருங்கல் மதிலால் சூழ்ந்துள்ளது. நான்கு புறமும் வாசல்கள் உண்டு. மேற்கு வாசலில் மணிமண்டபம் உள்ளது.
மேற்கு பிராகாரதில் 1995ல் நிறுவப்பட்ட 16 மீ. உயரமுள்ள செப்பு கொடிமரம் உள்ளது. தென்மேற்கில் சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. சாஸ்தா பூரணை மற்றும் புஷ்கலையுடன் சுகாசனத்தில் உள்ளார்.
இப்பிராகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோயில், முருகன் கோயில், மணமேடை ஆகியவை உள்ளன. கிருஷ்ணன் கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். எதிரில் முருகன் கோயில் உள்ளது.
கிழக்கு வெளி பிராகாரதின் வாசலில் 8 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இவ்வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிராகாரத்தில் ஆஞ்சநேயர் பெயரில் பரிவார கோவில் உள்ளது. இக்கோயிலின் பொதிகை கட்டுமானத்தை கொண்டு இது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அ.கா. பெருமாள் யூகிக்கிறார். இக்கோவிலின் சுற்றிலும் 12 தூண்களை கொண்ட சிறு உட்பிராகார சுற்று மண்டபம் உள்ளது. இக்கோவிலின் மூலவர் வடிவமற்றவர். இது சிவனாக இருக்கலாம் என்று அ.கா. பெருமாள் கூறுகிறார்.
தெற்கு பிராகாரத்தில் பத்திரகாளி கோயில், ஊட்டுப்புரை, ஒடுக்குப்புரை, சமயலறை ஆகியவை உள்ளன.
மேற்கு வெளிப்பிராகாரத்தில் கிழக்கு நோக்கி ஜுரதேவர் ஆலயம் உள்ளது. முன்மண்டபம் ஒன்று இருபுறம் பெரிய திண்ணைகளுடன் 20 தூண்களுடன் உள்ளது. தூண்களில் சிற்ப்பங்கள் உள்ளன. முன்மண்டபத்தின் வழிப்பாதையில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தென்புற திண்ணையில் கிழக்கு நோக்கி பார்வதி கோயில் உள்ளது. வடக்கு திண்ணையில் விநாயகர் கோயிலும் விளக்கு மண்டமம் செல்ல திட்டிவாசலும் உள்ளன.
முன்மண்டபத்தை அடுத்து வாத்திய மண்டபமும் இரண்டு பக்கங்களிலும் சிறு மண்டபங்களும் உள்ளன. இந்த மண்டப தூண்களில் சைவ மரபை ஒட்டிய வேலைபாடிலாத துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மேலும் கிருஷ்ணன், ஆஞ்சநேயர், விநாயகர், நின்ற கோலத்தில் தேவி சிற்பங்களும் உள்ளன.
வாத்திய மண்டபத்தை அடுத்து 16 தூண்கள் கொண்ட பூஜா மண்டபம் உள்ளது. பூஜா மண்டபம் கேரள பாணி ஓட்டு பணியால் ஆனது. மேல்கூரையில் மரதாலான நவகிரக உருவங்கள் உள்ளன. இதன் எதிரே கருவறை உள்ளது.
பூஜா மண்டபம் மற்றும் கருவறையை சுற்றி 23 தூண்களை கொண்ட திருச்சுற்று மண்டபம் உள்ளது. மண்டபத்தின் தென்பகுதியில் இருந்து வெளிபிராகாரம் செல்ல திட்டிவாசல் உள்ளது. மண்டபதின் பிறபகுதிகளில் சிறிய அறைகள் உள்ளன. தென்மேற்கில் உள்ள ஒரு அறையில் அருவி அருகே உள்ள குகைக்கு செல்லும் பாதை உள்ளது.
திருச்சுற்று மண்டபத்திற்கும் பூஜா மண்டபத்திற்க்கும் தரைமட்ட அளவில் நந்தி உள்ளது.
ஸ்ரீகோவில் வட்ட வடிவில் உள்ளது. கூம்பு வடிவ விமானம் செப்பு தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. விமானத்தின் உட்புறம் செவ்வக வடிவில் உள்ளது. கூரையில் மூன்று கும்பங்கள் உள்ளன. 13 நாக சிற்ப்பங்கள் காணப்படுகின்றன.
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:19, 3 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் வீரபத்திரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் மூன்றாவது ஆலயம் ஆகும்.

இடம்

கோதை ஆற்றின் கரையில் திற்பரப்பு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. ஓடி வந்து இங்கு 15 மீ உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. மார்த்தாண்டத்திலிருந்து 18 கி.மீ. வடக்கில் திருவட்டாறு – களியல் சாலையில் உள்ளது. கோதை ஆற்றின் கரையில் அருவிக்கு தெற்கில் ஆலயம் உள்ளது.

பெயர்

ஸ்ரீவிலாசம் என்னும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து திற்பரப்பு என்னும் சொல் வந்ததாக கூறுகின்றனர். ஸ்ரீ – திரு; விசாலம் – பரப்பு. மனதிற்கு ரம்யத்தை தரும் இடம் என்பது பொருள். இது மலையாள இலக்கிய ஆசிரியர்கள் தரும் விளக்கம்.

மூலவர்

கோவிலின் மூலவர் வீரபத்திரர் லிங்க வடிவில் உள்ளார். ஜடாதரர் என்றும் மகாதேவர் என்றும் அழைக்கபடுகிறார். மூலவர் வழக்கத்துக்கு மாறாக மேற்கு நோக்கி இருக்கிறார். நந்தி மூலவருக்கு நேர் எதிரில் அமராமல் சற்று விலகி உள்ளது.

தொன்மம்

திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவ புராணம் சார்ந்த வாய்மொழி கதையே உள்ளது.

சிவனின் பேச்சை மதிக்காமல் பார்வதி தட்சனின் யாகத்துக்கு செல்கிறாள். சிவன் தனது அம்சமான வீரபத்திரனை அனுப்புகிரான். தட்சனின் யாகத்தை அழித்து ஆவேசமுடன் இருக்கும் வீரபத்திரன் அமைதியடைய வேண்டி நதியை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறான். காளியும் உடன் வந்து தியானத்தில் அமருகிறாள்.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்க மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார் வீரபத்திரர். மூலவர் மேற்கு நோக்கி இருப்பதற்கு இந்த தொன்மமே காரணமாக சொல்ல படுகிறது. இத்தொன்மபடி நந்தி நதியை மறைகாமல் இருக்கவே சற்று விலகி இருக்கிறது.

கோயில் அமைப்பு