under review

தா.வே. வீராசாமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(One intermediate revision by the same user not shown)
Line 12: Line 12:
கோவை  பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் (1967-69), 1969 முதல் 1972 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், 1972 முதல் 1973 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், 1973 முதல் 1975 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.  

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா.வே. வீராசாமி டிசம்பர் 1995-ல் பணியமர்த்தப்பட்டார். [[பாரதிதாசன்]] படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்டதால் பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரின் மாணவர் அறிவழகன் ஜெயகாந்தன் ஆய்வடங்கள் நூலை வெளியிட்டார்.  
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா.வே. வீராசாமி டிசம்பர் 1995-ல் பணியமர்த்தப்பட்டார். [[பாரதிதாசன்]] படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்டதால் பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரின் மாணவர் அறிவழகன் 'ஜெயகாந்தன் ஆய்வடங்கள்' நூலை வெளியிட்டார்.  
== பொறுப்புகள் ==
== பொறுப்புகள் ==
* 1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.  
* 1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.  
Line 20: Line 20:
* 1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர்.  
* 1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தா. வே. வீராசாமி அவர்கள் 1949-ல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார்.  தா. வே. வீராசாமி அவர்கள் இருபத்திமூன்றுக்கும் அதிகமான நூல்களை எழுதினார். இரு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து  இருந்தன.  
தா. வே. வீராசாமி 1949-ல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார்.  தா. வே. வீராசாமி அவர்கள் இருபத்திமூன்றுக்கும் அதிகமான நூல்களை எழுதினார். இரு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து  இருந்தன.  

பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி தா.வே. வீராசாமி அவர்களின் வரலாற்றை நூலாக எழுதினார். இந்நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக உள்ளன.  
பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி தா.வே. வீராசாமியின் வாழ்க்கை வரலாற்றைஎழுதினார். இந்நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக உள்ளன.  
===== மொழிபெயர்ப்பு =====
===== மொழிபெயர்ப்பு =====
தா.வே. வீராசாமி அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் புத்த தேவ போஸ் என்னும் நூலை மொழிபெயர்த்தார். அதுபோல் நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.  
தா.வே. வீராசாமி தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் 'புத்த தேவ போஸ்' என்னும் நூலை மொழிபெயர்த்தார். நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.  
== மறைவு ==
== மறைவு ==
தா.வே. வீராசாமி தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு ஜூலை 11, 1997-ல் இயற்கை எய்தினார்.  
தா.வே. வீராசாமி தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு ஜூலை 11, 1997-ல் காலமானார்.  
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* உழைப்பின் வெற்றி (1962)
* உழைப்பின் வெற்றி (1962)

Revision as of 21:31, 27 March 2024

தா.வே. வீராசாமி

தா.வே. வீராசாமி (பிப்ரவரி 1, 1931 - ஜூலை 11, 1997) எழுத்தாளர், பேராசிரியர், அகராதிக்கலை வல்லுநர், பதிப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். நாவல்கள் குறித்த திறனாய்வு நூல்களை எழுதினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

தா.வே. வீராசாமி திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வேங்கடாசலம், தெய்வானை அம்மாள் இணையருக்கு பிப்ரவரி 1, 1931-ல் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தை இயற்கை எய்திய காரணத்தால் தமையன் தா.வே. சுந்தரம் அவர்களால் வளர்க்கப்பட்டார். தாராபுரம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். அப்பள்ளியில் பணியாற்றிய கா. காழிப்பனாரிடம் தமிழ் பயின்றார். காழிப்பனார் சீர்திருத்தக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தா.வே. வீ. பள்ளியிறுதி வகுப்பினை 1948-ல் நிறைவு செய்தார். பள்ளிக் கல்வி வரைதான் தொடர் படிப்பு இருந்தது. 1958-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக வித்துவான் தேர்வில் தேறினார். 1959-ல் இளங்கலைத் தமிழ் பயின்றார். 1961-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம் பெற்றார். வ.ஐ. சுப்பிரமணியம் இவரின் ஆசிரியர். இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் இவரின் நண்பர்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியத்தை நெறியாளராகக் கொண்டு, 'பெரியபுராணம் இலக்கணம் - சொல்லடைவுகள்' (Grammatical Study of Periyapuranam with Index) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார் (1962- 1966).

தனிவாழ்க்கை

தா.வே. வீராசாமி ஜூலை 8, 1957-ல் இராமலெட்சுமியை மணந்தார். மகள் மணிமேகலை, மகன் கண்ணப்பன்.

ஆசிரியப்பணி

தா.வே. வீராசாமிக்கு 1951-53-ல் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயிலவும் பணியாற்றவும் வாய்ப்பு அமைந்தது. 1953-58 வரை கோவை இராமலிங்கம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1958 முதல் 1968 வரை கோவை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் (1967-69), 1969 முதல் 1972 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், 1972 முதல் 1973 வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், 1973 முதல் 1975 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்திற்குப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பேராசிரியர் தா.வே. வீராசாமி டிசம்பர் 1995-ல் பணியமர்த்தப்பட்டார். பாரதிதாசன் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து நூல் வெளியிட்டதால் பல்கலைக்கழகம் அவருக்குப் பணி ஆணை வழங்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பணியாற்றினார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரின் மேற்பார்வையில் பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரின் மாணவர் அறிவழகன் 'ஜெயகாந்தன் ஆய்வடங்கள்' நூலை வெளியிட்டார்.

பொறுப்புகள்

  • 1975 முதல் 1983 வரை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.
  • 1983 முதல் 1991 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பியல் துறைப் பேராசிரியராகவும், பெருஞ்சொல்லகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் கூடுதல் பணியாற்றியவர்.
  • 1992 முதல் 1993 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்தார்.
  • 1994 முதல் 1995 வரை திருவனந்தபுரம் உலகத் திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளியின் சிறப்புநிலை ஆய்வாளராக பணியாற்றினார்.
  • 1995 முதல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றிப் பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவுக்கு அடைவு தயாரித்து வழங்கியவர்.

இலக்கிய வாழ்க்கை

தா. வே. வீராசாமி 1949-ல் எழுத்தராகத் தம் பணியைத் தொடங்கினார். தா. வே. வீராசாமி அவர்கள் இருபத்திமூன்றுக்கும் அதிகமான நூல்களை எழுதினார். இரு நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இவர்தம் பணிக்காலத்தில் நாவல்கள் குறித்த ஆய்வுகள் முதன்மையிடத்தில் இருந்ததால் இவரின் நூல்கள், கட்டுரைகள் யாவும் நாவல்கள் குறித்து இருந்தன.

பேராசிரியர் சோ. பாண்டிமாதேவி தா.வே. வீராசாமியின் வாழ்க்கை வரலாற்றைஎழுதினார். இந்நூலில் தா.வே. வீராசாமி குறித்த விரிவான செய்திகளும் அவரின் படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும் விரிவாக உள்ளன.

மொழிபெயர்ப்பு

தா.வே. வீராசாமி தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். சாகித்ய அகாதெமிக்காக அலாகரஞ்சன் தாஸ் குப்தாவின் 'புத்த தேவ போஸ்' என்னும் நூலை மொழிபெயர்த்தார். நேருவின் வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்துள்ளார்.

மறைவு

தா.வே. வீராசாமி தாம் முன்னாளில் பயின்ற பள்ளியில் சிறப்பு விருந்தினராகச் சென்று, உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு ஜூலை 11, 1997-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • உழைப்பின் வெற்றி (1962)
  • வெற்றியின் இருமுகம் (1969)
  • பொன்குஞ்சு (1970)
  • தமிழ்ச்சுடர் (1970)
  • பட்டறையிலே பாரதிதாசன் (1971)
  • தமிழ் நாவல் – ஓர் முன்னோட்டம் (1973)
  • Tamil An Intensive Course (Co – Author) 1973
  • ஆய்வுக் கதிர் (1974)
  • தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம் (ப.ஆ.) (1975)
  • தமிழ் இலக்கியக் கொள்கை தொகுதி 1 (1975)
  • கல்கி அகிலன் படைப்புக்கலை (1977)
  • தமிழ் சமூக நாவல்கள் (1978)
  • தமிழ் நாவல் வகைகள் (1979)
  • தமிழ் நாடக வரலாற்றில் பாரதிதாசன் (1981)
  • தந்திவனப் புராணம் (ப.ஆ) (1981)
  • தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வம் (1981)
  • பாரதி இலக்கியம்: ஒரு பார்வை (1982)
  • புத்த தேவ போஸ் (1982)
  • பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி (1986)
  • தமிழ் நாவல் இயல்(1986)
  • பெருஞ்சொல் அகராதி தொகுதி 1 (1988)
  • தமிழ்க் காப்பியக்கொள்கை- கம்பராமாயணம், வில்லிபாரதம் (1988)
  • அகராதிக் கலை (1989)
  • தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (1985)
  • பாரதிதாசன் கவிதைகளில் அருஞ்சொல்லகராதி (மணிமேகலை வெண்பா) 1996

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.