தக்கையின் மீது நான்கு கண்கள்

From Tamil Wiki
தக்கையின்மீது நான்கு கண்கள்

தக்கையின் மீது நான்கு கண்கள் (1974 ) சா.கந்தசாமி எழுதிய சிறுகதைத் தொகுப்பு. தமிழ் நூல்களின் அட்டை வடிவமைப்பில் ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது.

வெளியீடு

தக்கையின் மீது நான்கு கண்கள் சா.கந்தசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. க்ரியா பதிப்பகம் இதை 1974ல் வெளியிட்டது.

உள்ளடக்கம்

தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழு சிறுகதைகள், 1970 ல் கசடதபற இதழில் வெளிவந்தவை.

வடிவமைப்பு

கே. எம். ஆதிமூலம் தக்கையின்மீது நான்கு கண்கள் நூலுக்கு அட்டைப்படம் வரைந்திருந்தார். தமிழ் நாட்டார்மரபை நவீன ஓவியமாக மறு ஆக்கம் செய்திருந்த அந்த ஓவியம் தமிழ் இலக்கியச் சூழலில் கவனிக்கப்பட்டது. அட்டை வடிவமைப்பில் அது ஒரு தொடக்கமாக ஆகியது

மொழியாக்கம்

தக்கையின் மீது நான்கு கண்கள் – ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இந்தியா இதழில் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

திரைப்படம்

தக்கையின் மீது நான்கு கண்கள் இந்திய தூர்தர்சன் தொலைக்காட்சியில் 'நவீன இலக்கியம்' என்ற தொடரில் இயக்குநர் வசந்தால் குறும்படமாக்கப் பட்டது. தேசிய திரைப்பட விழாவில் சிறந்த குறும்படம் என்று விருது பெற்றது.

உசாத்துணை