being created

சுபா: Difference between revisions

From Tamil Wiki
(page updated by ASN and Being Created)
(Para Added)
Line 19: Line 19:

சுபா, 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை, 600-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டனர். இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள், சுற்றுலாப் பயணக் கட்டுரைகளை எழுதினர்.

== ஆன்மிகம் ==
சுபா 'காஷ்யபன்’ என்றபேரில்  ஆன்மிக ஆசிரியர்கள், திருத்தலங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்கள் .ஆன்மிக ஆசிரியர் ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் அவரை தமிழில் பரவலாக அறிமுகம் செய்தது.

== வானொலி ==
== வானொலி ==
சுபா, 1975-ல், சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினர். இளைய பாரதம் நிகழ்ச்சிக்காகப் பல உரைச் சித்திரங்களைத் தயாரித்தளித்தனர். கிராமங்களில் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய நேர்காணல்களை அளித்தனர். பல விழா நிகழ்வுகளைப் பதிவு செய்து ஒலிபரப்பினர். 1983 வரை சென்னை வானொலியில் பகுதி நேரமாகப் பணியாற்றினர்.

== இதழியல் ==
 
== பதிப்பு ==
 
== திரைப்படம் ==

== ஆன்மிகம் ==
== தொலைக்காட்சி ==
சுபா 'காஷ்யபன்’ என்றபேரில்  ஆன்மிக ஆசிரியர்கள், திருத்தலங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்கள் .ஆன்மிக ஆசிரியர் ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் அவரை தமிழில் பரவலாக அறிமுகம் செய்தது.
 
== விருதுகள் ==

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 30: Line 40:

சுபாவின் கதைகள் குற்றப்புலனாய்வின் அறிவியல்முறைமைகளை கூடுமானவரை கடைப்பிடிப்பவை என்றும், வாசகர்களில் அடுத்த படிநிலைகளிலுள்ளவர்களுக்கானவை என்றும் மதிப்பிடப்படுகிறது. நகர்ப்புறக்குற்றங்களை புலனாய்வு செய்யும் படைப்புகள் இவை

== நூல்கள் ==

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 00:01, 25 March 2024

சுபா (டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன்) தமிழில் துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளுமை. டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன் என்னும் இருவரின் கூட்டு. இருவரின் பெயர்களின் முதலெழுத்துக்களாலானது சுபா என்னும் பெயர். தமிழில் துப்பறியும் கதைகளை எழுதியவர்களில் இவர்கள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான மூவரில் ஒருவர் என மதிப்பிடப்படுகிறார்கள்.

பிறப்பு, கல்வி

டி.சுரேஷ், ஏப்ரல் 15, 1955 அன்று, பூனாவில், தண்டபாணி - பார்வதி இணையருக்குப் பிறந்தார். மதுரை அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை கற்றார். பூனா சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கற்றார். மேல்நிலைக் கல்வியை மைலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஏ.என். பாலகிருஷ்ணன், பிறப்பு: பிப்ரவரி 2, 1955 அன்று, கும்பகோணத்தில் நரசிம்மன் – கமலா இணையருக்குப் பிறந்தார். ஹிந்து சீனியர் செகண் டரி பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில்  இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். முதுகலை இந்திக்குச் சமமான பிரவின் ஏழாவது ஸ்டேஜ் வரை கற்றார்.

தனி வாழ்க்கை

டி.சுரேஷ் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி: ஜெயந்தி. மகள்: கிருத்திகா. மகன்: சு. ஜெய்கிருஷ்ணா.

ஏ.என். பாலகிருஷ்ணன் பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி: யசோதா. மகள்: ஸ்ரீவைஜெயந்தி. மகன்: ஸ்ரீகமல்குமார்.

இலக்கியவாழ்க்கை

சுரேஷ், கண்ணன் சிறுவர் இதழில் சிறுகதைகள் எழுதினார். கண்ணனில் பணியாற்றிய ‘லெமன்’ சுரேஷை ஊக்குவித்தார். தொடர்ந்து த. சுரேஷ் என்ற பெயரில் சில சிறுகதைகளை, நாடகங்களை எழுதினார்.

சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தி. ஜானகிராமன், கல்கி, சுஜாதா எழுத்துக்களால் ஈர்கப்பட்டனர். இருவரும் இணைந்து சுபா என்ற பெயரில் எழுதினர். கல்கி மர்மச் சிறுகதைப் போட்டியில் சுபா எழுதிய ’விசித்திர உறவுகள்’ என்னும் முதல் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. 1979-ல், தினமணி கதிர் தீபாவளி மலரில் எழுதிய சிறுகதை ‘அவர்கள் வயதுக்கு வரவில்லை’. தொடர்ந்து பல சிறுகதைகளையும், நாவல்களையும், குறு நாவல்களையும் எழுதினர்.

முதல் நாவல், ‘மயான பிரசவங்கள்’, சுஜாதா மாத இதழில் வெளிவந்தது. முதல் குறுநாவல் ‘குயில் முட்டை’யும் சுஜாதா இதழில் வெளியானது. முதல் தொடர் ‘மேலே சில கழுகுகள்’ சாவி இதழில் வெளியானது. தொடர்ந்து மாலைமதி, ராணிமுத்து, குங்குமச்சிமிழ், பாக்கெட் நாவல் எனப் பல மாத இதழ்களின் சுபாவின் நாவல்கள் வெளியாகின. சுபாவின் நாவல்களை வெளியிடுவதற்கென்றே எஸ்.பி. ராமுவால் ‘சூப்பர் நாவல்’ கொண்டுவரப்பட்டது.

சுபா, 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை, 600-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டனர். இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள், சுற்றுலாப் பயணக் கட்டுரைகளை எழுதினர்.

ஆன்மிகம்

சுபா 'காஷ்யபன்’ என்றபேரில் ஆன்மிக ஆசிரியர்கள், திருத்தலங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்கள் .ஆன்மிக ஆசிரியர் ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் அவரை தமிழில் பரவலாக அறிமுகம் செய்தது.

வானொலி

சுபா, 1975-ல், சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினர். இளைய பாரதம் நிகழ்ச்சிக்காகப் பல உரைச் சித்திரங்களைத் தயாரித்தளித்தனர். கிராமங்களில் வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய நேர்காணல்களை அளித்தனர். பல விழா நிகழ்வுகளைப் பதிவு செய்து ஒலிபரப்பினர். 1983 வரை சென்னை வானொலியில் பகுதி நேரமாகப் பணியாற்றினர்.

இதழியல்

பதிப்பு

திரைப்படம்

தொலைக்காட்சி

விருதுகள்

இலக்கிய இடம்

தமிழில் குற்றப்புலனாய்வு எழுத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சுபா. முதல் தலைமுறையில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் , ஆரணி குப்புசாமி முதலியார் ,ஜெ.ஆர். ரங்கராஜுஆகியோர் முதன்மையானவர்கள். இரண்டாம் தலைமுறையில் மேதாவி, ரா.கி.ரங்கராஜன் , தமிழ்வாணன் போன்றவர்களும் மூன்றாவது தலைமுறையில் புஷ்பா தங்கதுரை ,சுஜாதா , ராஜேந்திரகுமார் போன்றவர்களும் தமிழில் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதியவர்கள். நான்காம் தலைமுறையில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதுபவர்களில் முதன்மையானவர்கள்.

சுபாவின் கதைகள் குற்றப்புலனாய்வின் அறிவியல்முறைமைகளை கூடுமானவரை கடைப்பிடிப்பவை என்றும், வாசகர்களில் அடுத்த படிநிலைகளிலுள்ளவர்களுக்கானவை என்றும் மதிப்பிடப்படுகிறது. நகர்ப்புறக்குற்றங்களை புலனாய்வு செய்யும் படைப்புகள் இவை

நூல்கள்

உசாத்துணை

உங்கள் ரசிகன் கட்டுரை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.