being created

சாமுவேல் சத்தியநாதன்

From Tamil Wiki
Revision as of 20:34, 14 July 2022 by ASN (talk | contribs)
சாமுவேல் சத்தியநாதன்

சாமுவேல் சத்தியநாதன் (1860-1906) கல்வியாளர்; எழுத்தாளர்; சமூகப் பணியாளர். கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்றவர். W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதனின் மகன். கிருபா பாய் - கமலா ஆகியோரின் கணவர். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் தத்துவத் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். நேஷனல் மிஷினரி கவுன்சிலின் உருவாக்கத்திற்கு உழைத்தவர். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் சென்னை ராஜதானியில் நிலவிய கல்விச் சூழல்கள் குறித்து மிக விரிவாக ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

சாமுவேல் சத்தியநாதன்,  W.T.சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இணையருக்கு மகனாக, திருநெல்வேலியில், 1860=ல் பிறந்தார். திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியையும், சென்னை, வேப்பேரியில் உள்ள ஆங்கிலிகன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வியையும் நிறைவு செய்தார். 1878-ல், W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இங்கிலாந்திற்குச் சென்றபோது கேம்பிரிட்ஜில் உள்ள கார்பஸ் க்ரிஸ்டி கல்லூரியில் சாமுவேல் சேர்க்கப்பட்டார். அதன் ஃபெல்லோஷிப் பெற்றதுடன்  கணிதமும் மன இயல் மற்றும் நீதி சாஸ்திரமும் பயின்று இரண்டு பட்டங்கள் பெற்றார். உயரிய பட்டமான L.L.D. பட்டம் பெற்றார். 1883-ல் இந்தியா திரும்பினார்.

கிருபா பாயுடன் திருமண வாழ்க்கை

கிருபா பாய் சத்தியநாதன்

அரசுத் துறை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது சாமுவேலுக்கு. இதே காலகட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த கிருபா பாயுடன் சாமுவேலுக்குக் காதல் முகிழ்த்தது. 1883-ல் அவர்கள் திருமணம் நடந்தது.சாமுவேலுக்கு ஊட்டியில் உள்ள ப்ரீக்ஸ் நினைவுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியற்றும் வாய்ப்பு வந்தது. மனைவியுடன் அங்கு சென்று வசித்தார். ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்படிருந்த கிருபா பாய்க்கு அங்கு தகுந்த  சிகிச்சை அளித்தார் சாமுவேல். உடல் நலம் தேறிய கிருபா பாய், அங்குள்ள இஸ்லாமிய மக்கள் கல்வி பெறுவதற்காகப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். 1884-ல், ராஜமுந்திரியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சாமுவேல்  தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மனைவியுடன் ராஜமுந்திரி சென்று வசித்தார். அங்கு அடிக்கடி நோய்வாய்ப்பட்டார் கிருபா பாய். தகுந்த சிகிச்சை அளித்து வந்தார் சத்தியநாதன் என்றாலும் நோய் முழுமையாகக் குணமாகவில்லை.

இந்நிலையில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி கிடைத்தது சாமுவேல் சத்தியநாதனுக்கு. அங்கு மனைவியையும் அழைத்துச் சென்றார். அங்கு கிருபா பாயின் உடல் நிலை சற்று மேம்பட்டது. தனது ஓய்வு நேரங்களில் அக்காலத்தில் வெளிவந்த சில ஆங்கில இதழ்களில் ’An Indian Lady’ என்ற பெயரில் கிருபா பாய் கட்டுரைகள் எழுதி வந்தார். கிருபாய்க்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வம் அறிந்து அவரை எழுதத் தூண்டினார் சாமுவேல்.

1886-ல், சாமுவேலுக்கு சென்ப்னை ராஜதானியின் பொதுக் கல்வி இயக்குநரகத்தின் தனி உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியில் தர்க்கவியல் மற்றும் தத்துவத்துறையின் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் அவர்கள் சென்னைக்கு வந்து வசித்தனர். இக்கால கட்டத்தில் தான் சகுணா என்ற நாவலை எழுதினார் கிருபா பாய். அது 1887-1888-ல் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1892-ல், ஆங்கிலத்தில் அது, ‘Saguna: A Story of Native Christian Life’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது. ஒரு விதத்தில் அது கிருபா பாயின் சுய சரிதமே!

இந்நிலையில் தனது ஒரு வயது மகளை இழந்தார் கிருபா பாய். அது அவர் உடல் நலனையும் மனதையும் வெகுவாகப் பாதித்தது. அதனால் சாமுவேல் அவரை பம்பாய்க்கு அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு தன் பழைய உறவினர்களைக் கண்டு சற்று ஆறுதல் பெற்றார் கிருபா. மீண்டும் சென்னைக்குத் திரும்பி நாவல் முயற்சியில் ஈடுபட்டார். அவ்வப்போது சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றபடியே “கமலா : ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்” என்ற நாவலை எழுதத் தொடங்கினார். ’கமலா’ நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போதே உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் சாமுவேல் கிருபாவை குன்னூருக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்தார். சிகிச்சைகளுடன் மருத்துவமனையில் இருந்தபடியே நாவல் அத்தியாயங்களை எழுதினார் கிருபா. ஆனால் கிருபா பாயின் நோய்த் தீவிரம் குறையவில்லை. அவருக்கு உதவி செய்து வந்த சகோதரியும் காலமானார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் கிருபா பாய். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்றாலும் பலனில்லாமல் ஆகஸ்ட் 3, 1894-ல் கிருபா பாய் காலமானார்.

கிருபா பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கணவர் சாமுவேல் சத்தியநாதனால் சென்னை புரசைவாக்கத்தில், அவரது மகளது சமாதியின் அருகே ஒரு சமாதி அமைக்கப்பட்டது. அதில் அவரது வாழ்க்கையை நினைவு கூரும் வகையில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டது. கிருபா பாயின் இரு நாவல்களையும் அவரது மறைவிற்குப் பின்னர் சாமுவேல் பவுல் தமிழில் மொழிபெயர்த்தார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.