under review

கோகுல் பிரசாத்: Difference between revisions

From Tamil Wiki
Line 23: Line 23:
* [https://www.vikatan.com/author/3533-gokul-prasad கோகுல் பிரசாத் கட்டுரைகள்: விகடன்]
* [https://www.vikatan.com/author/3533-gokul-prasad கோகுல் பிரசாத் கட்டுரைகள்: விகடன்]
* [https://www.youtube.com/watch?v=tm3JIAKzfFQ&ab_channel=AnnaCentenaryLibrary%2CChennai சிறுவாணி இலக்கியத் திருவிழா 2023 | நவீன இலக்கியத்தில் நகர்புற வாழ்க்கை | கோகுல் பிரசாத்]
* [https://www.youtube.com/watch?v=tm3JIAKzfFQ&ab_channel=AnnaCentenaryLibrary%2CChennai சிறுவாணி இலக்கியத் திருவிழா 2023 | நவீன இலக்கியத்தில் நகர்புற வாழ்க்கை | கோகுல் பிரசாத்]
* எம்.கோபலகிருஷ்ணன் - ஒரு நாள் கருத்தரங்கு | மணல் கடிகை - கோகுல் பிரசாத்





Revision as of 17:29, 26 March 2024

To read the article in English: Gokul Prasad. ‎

கோகுல் பிரசாத்

கோகுல் பிரசாத் (பிறப்பு: டிசம்பர் 23, 1991) தமிழில் திரைப்பட ஆராய்ச்சிகளும் இலக்கியவிமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர். தமிழினி இலக்கிய இணைய இதழின் ஆசிரியர். கோவையில் வாழ்கிறார்.

பிறப்பு, இளமை

கோகுல்பிரசாத் டிசம்பர் 23, 1991 அன்று சிவகாசியில் பார்த்தசாரதி, சந்திரலீலா இணையருக்கு பிறந்தார். பெற்றோரின் பணிமாற்றம் காரணமாக பிறந்ததிலிருந்தே கோவையில் வளர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரை வீரபாண்டி பிரிவிலுள்ள இமாகுலேட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆறிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் திண்டுக்கல் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் பொறியியல் கற்றார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பிரிவு. கோவையில் வணிகம் செய்துவருகிறார்.

இலக்கியவாழ்க்கை

கோகுல்பிரசாத் தமிழில் இலக்கிய விமர்சனக்குறிப்புகளையும் திரைவிமர்சனங்களையும் எழுதி வருகிறார். இவரின் முதல் நூல் 'மாயா வேட்டம்' உலகத் திரைப்படத் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக 2022-ல் வெளியானது. இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இலக்கியம் தொடர்பான கருத்துகள் அடங்கிய தொகுப்பான ”மாயிரு ஞாலம்”, ”தேம்படு தேறல்” என்ற திரைப்படக் கட்டுரைகள் தொடர்பான நூல், அனுபவக் குறிப்புகளும் சிந்தனைகளும் அடங்கிய “உள்ளுறை நறுவீ” ஆகிய மூன்றும் தமிழினி வெளியீடாக 2022-ல் வெளியானது. தமிழினி இணைய இதழில் இலக்கியம், சினிமா தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார்.

தன் இலக்கிய ஆதர்சங்கள் என அ.மாதவையா, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், சு.வேணுகோபால், தல்ஸ்தோய், விக்ட்ர் ஹ்யூகோ, செகாவ், பால்சாக், எமில் சோலா, ஹெர்மன் ஹெஸ்ஸே, தாமஸ் மன், மார்சல் ப்ரூஸ்ட், பொலான்யோ ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இதழியல்

கோகுல் பிரசாத் ஜூலை 2018 முதல் தமிழினி என்னும் இணைய இதழை நடத்திவருகிறார்.

நூல்பட்டியல்

  • மாயா வேட்டம் - சினிமாக் கட்டுரைகள்
  • மாயிரு ஞாலம்
  • தேம்படு தேறல்
  • உள்ளுறை நறுவீ
மொழிபெயர்ப்பு
  • தல்ஸ்தோயின் கலை (ஜெயமோகன், த. கண்ணனுடன் இணைந்து)

உசாத்துணை



✅Finalised Page