standardised

கி.சரஸ்வதி அம்மாள்

From Tamil Wiki

கி.சரஸ்வதி அம்மாள் (1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். நீதிபதி வி..கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவர் சகோதரி கி.சாவித்ரி அம்மாளும் சகோதரர் கி.சந்திரசேகரனும் எழுத்தாளர்கள்

பிறப்பு, கல்வி

கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் பாலாம்பாள் இணையருக்கு 1901-ல் பிறந்தார். இவருடைய தங்கை கி.சாவித்ரி அம்மாள், தம்பி கி.சந்திரசேகரன் ஆகியோரும் எழுத்தாளர்கள்.

இலக்கிய வாழ்க்கை

கி.சரஸ்வதி அம்மாள் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டியில் நிழலும் ஒளியும் என்னும் நாவலுக்காக பரிசு பெற்றார். இந்நாவலுக்கு எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா ஒரு காலகட்டத்தின் மனப்போராட்டச் சித்தரிப்பு நாவல் என விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறார்[1]. ஒரு சிறு கிராமத்தில் ஒதுங்கி வாழும் பிராமணக்குடும்பம் ஒன்று புறவுலக அரசியல் நிகழ்வுகளால் தவிர்க்கமுடியாதபடி அலைவுறுவதைச் சித்தரிக்கும் நாவல் இது என சிட்டி-சிவபாத சுந்தரம் அவர்களின் தமிழ்நாவல் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நூல்கள்

  • நிழலும் ஒளியும் - 1949

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.