standardised

கி.சந்திரசேகரன்

From Tamil Wiki
Revision as of 08:39, 11 April 2022 by Tamaraikannan (talk | contribs)

கி. சந்திரசேகரன (1904 - ஆகஸ்ட் 28, 1988) தமிழ் எழுத்தாளர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர். நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

பிறப்பு

கி.சந்திரசேகரன் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயர் - பாலாம்பாள் (வாலாம்பாள்) தம்பதியருக்கு 1904-ல் பிறந்தார். இவருடைய சகோதரிகளான கி.சாவித்ரி அம்மாள், கி.சரஸ்வதி அம்மாள் இருவரும் எழுத்தாளர்கள். மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பொருளியல் மற்றும் வரலாற்றை பாடமாக எடுத்து எம்.ஏ படித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இலக்கியவாழ்க்கை

கி.சந்திரசேகரன் பெரும்பாலும் கலைமகள் இதழில் எழுதினார். கல்கி ஆனந்தவிகடன் இதழ்களிலும் அவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை அவர் வி.கிருஷ்ணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதி கலைமகள் காரியாலய வெளியீடாக வந்தது. தன் நண்பர் கே.ராமகோடீஸ்வர ராவ் ஆங்கிலத்தில் நடத்திய TRIVENI Quarterly இதழில் பெரும்பாலும் எழுதினார்.

பொதுப்பணிகள்

வி.சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். தன் உறவினரான நாராயணசாமி ஐயர் நடத்திய Madras Law Journal இதழில் தொடர்ந்து எழுதினார். Indian Law Reports இதழில் டாக்டர் வி.வி.சௌதுரிக்கு பின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவர் சட்டத்தொழிலை தீவிரமாகச் செய்யவில்லை.

தன் தந்தை தொடங்கிய பொதுநிறுவனங்களை நிர்வகிப்பதையே வி.சந்திரசேகரன் பொதுவாகச் செய்துவந்தார். வி.கிருஷ்ணசாமி ஐயர் தொடங்கிய மெட்ராஸ் சம்ஸ்கிருதக் கல்லூரியின் செயலாளராகப் பணியாற்றினார். சென்னை மியூசிக் அக்காதமியின் நிறுவனர்களில் ஒருவர், முதல் துணைத்தலைவர்.

சந்திரசேகரன் கீழ்க்கண்ட பதவிகளை வகித்தார்.

  • முதல் தேர்தல் வழக்குமன்ற உறுப்பினர் (Election Tribunal during the elections held in 1952)
  • சென்னைப் பல்கலைக்கழக தாகூர் இருக்கையின் பேராசிரியர்
  • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்
  • சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி உறுப்பினராக ஆறு ஆண்டுகள்
  • வானொலி திரைப்படத் தணிக்கைக் குழுக்களில் ஆறு ஆண்டுகள்
  • குப்புசாமி சாஸ்திரி ரிசர்ச் இன்ஸ்டியூட்டின் தலைவர்.
  • சம்ஸ்கிருத அக்காதமி தலைவர்
  • ஆர்ய மாதா சபை செயலாளர்
  • வெங்கடரமணா ஆயுர்வேத கல்லூரி செயலாளர்
  • சவுத் இண்டியன் நேஷனல் அசோசியேஷன் தலைவர்
  • ரானடே லைப்ரரி செயலாளர்
  • கலாக்ஷேத்ரா அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர்.

மறைவு

கி.சந்திரசேகரன் ஆகஸ்ட் 28, 1988-ல் மறைந்தார்

படைப்புகள்

தமிழ்
  • இசையணங்கு
  • பாசம்
  • பச்சைக்கிளி
  • கண்ணில்லாத கபோதி
  • முன்னிரவு சிறுகதைத் தொகுதிகள்
ஆங்கிலம்
  • Culture and creativity
  • Golden harvest
  • Tagore a master mind
  • P.S. Sivasamy Iyer
  • V. Krishnaswamy Iyer
  • Persons and Persona lities
  • Studies and sketches
  • Waves and stranger

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.