under review

கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார்

From Tamil Wiki
Revision as of 19:30, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Killimangalan Kilarmaganar Cherakovanar. ‎

கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

சோகோவனார், கிள்ளிமங்கலங் கிழாரின் மகன். பாண்டிய நாட்டைச் சேர்ந்த கிள்ளிமங்கலம் என்ற ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் (365) குறிஞ்சித்திணை பாடலாக உள்ளது.

பாடல் நடை

  • நற்றிணை 365

அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
சென்மோ வாழி- தோழி!- பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

உசாத்துணை


✅Finalised Page