காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை - முதல் வரைவு)
 
Line 1: Line 1:
காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை (1884 -1951) ஒரு தவில் கலைஞர்.
காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை (அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை) (1884 -1951) ஒரு தவில் கலைஞர்.

== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
Line 9: Line 9:
மலைப்பெருமாள் பிள்ளைக்கு செலக்கண்ணு அம்மாள் (கணவர்: கிடிகிட்டிக் கலைஞர் தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை) என்ற மூத்த சகோதரியும், தவில் கலைஞராக இருந்து முப்பத்தி ஐந்தாம் வயதிலேயே மறைந்து விட்ட காரைக்கால் பழனிவேல் பிள்ளை என்ற தம்பியும் இருந்தனர்.

கருவேலி சற்குணம் பிள்ளை என்பவரின் மகள் அம்மாக்கண்ணு அம்மாள் என்பவரை மணந்து ராமநாதன் என்றொரு மகனும், பாப்பம்மாள் என்றொரு மகளும் பிறந்தனர்.
கருவேலி சற்குணம் பிள்ளை என்பவரின் மகள் அம்மாக்கண்ணு அம்மாள் என்பவரை மலைப்பெருமாள் பிள்ளை மணந்து ராமநாதன் என்றொரு மகனும், பாப்பம்மாள் என்றொரு மகளும் பிறந்தனர்.

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
அந்தக் காலத்தில் தவிலுக்கு தனி ஆவர்த்தம் வாசிக்கும் வழக்கம் இல்லை. இன்று கோர்வைகள் பெற்றிருக்கும் இடத்தை அன்று ‘ஜதிகள்’ பெற்றிருந்தன. மலைப்பெருமாள் பிள்ளை எண்ணற்ற ஜதிகள அறிந்தவராக, வல்லினம் மெல்லினத்துடன் ஜதி வாசிப்பதில் வல்லவராக இருந்தார்.  
அந்தக் காலத்தில் தவிலுக்கு தனி ஆவர்த்தம் வாசிக்கும் வழக்கம் இல்லை. ராக ஆலாபனைக்கு நடுவே ஓரிரு நிமிடங்கள் ஜதிகள் வாசிப்பது வழக்கம். இன்று கோர்வைகள் பெற்றிருக்கும் இடத்தை அன்று ‘ஜதிகள்’ பெற்றிருந்தன. மலைப்பெருமாள் பிள்ளை எண்ணற்ற ஜதிகள அறிந்தவராக, வல்லினம் மெல்லினத்துடன் ஜதி வாசிப்பதில் வல்லவராக இருந்தார்.  

மலைப்பெருமாள் பிள்ளையின் மகன் ராமநாதன் பன்னிரண்டு வயதிலேயே தவில் வாசிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். மலைப்பெருமாள் பிள்ளை ராமநாதனுடன் சேர்ந்து தவில் வாசித்து ராமநாதபுர அரசவையில் பல பரிசுகள் பெற்றார். [[மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை]]  தன் தங்கப்பதக்கம் ஒன்றை ராமநாதனுக்கு அணிவித்தார். அச்சிறுவன் பதினான்கு வயதில் காலமானான். அந்தத் துயரில் பல மாதங்கள் தவிலைத் தொடாமல் இருந்தார்  மலைப்பெருமாள் பிள்ளை. மதுப் பழக்கத்துக்கும் ஆளானார். பின்னர் தன் தம்பி பழனிவேல் பிள்ளையை சிறந்த தவிற்கலைஞராக உருவாக்க முனைந்தார். பழனிவேல் பிள்ளையும் சில காலத்தில் காலராவில் காலமானார். தன் மகள் வயிற்றுப் பேரனுக்குத் தவில் கற்றுக் கொடுத்து அவனது பத்து வயது முதல் அவன் கச்சேரிகளில் வாசிக்கத்தொடங்கினான். அவனைத் தன் கலைவாரிசு என மலைப்பெருமாள் பிள்ளை எண்ணியிருந்த போது, அச்சிறுவனும் பதினான்காம் வயதில் காலமானான்.
மலைப்பெருமாள் பிள்ளையின் மகன் ராமநாதன் பன்னிரண்டு வயதிலேயே தவில் வாசிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான். மலைப்பெருமாள் பிள்ளை ராமநாதனுடன் சேர்ந்து தவில் வாசித்து ராமநாதபுர அரசவையில் பல பரிசுகள் பெற்றார். [[மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை]]  தன் தங்கப்பதக்கம் ஒன்றை ராமநாதனுக்கு அணிவித்தார். அச்சிறுவன் பதினான்கு வயதில் காலமானான். அந்தத் துயரில் பல மாதங்கள் தவிலைத் தொடாமல் இருந்தார்  மலைப்பெருமாள் பிள்ளை. மதுப் பழக்கத்துக்கும் ஆளானார்.  
 
பின்னர் தன் தம்பி பழனிவேல் பிள்ளையை சிறந்த தவிற்கலைஞராக உருவாக்க முனைந்தார். பழனிவேல் பிள்ளையும் சில காலத்தில் காலராவில் காலமானார்.  
 
தன் மகள் வயிற்றுப் பேரனுக்குத் தவில் கற்றுக் கொடுத்து அவனது பத்து வயது முதல் அவன் கச்சேரிகளில் வாசிக்கத்தொடங்கினான். அவனைத் தன் கலைவாரிசு என மலைப்பெருமாள் பிள்ளை எண்ணியிருந்த போது, அச்சிறுவனும் பதினான்காம் வயதில் காலமானான்.

மனம் ஒடிந்த மலைப்பெருமாள் பிள்ளை தவில் வாசிப்பதைக் கைவிட்டார். 1941ல் கண் பார்வையும் இழந்தார்.
மனம் ஒடிந்த மலைப்பெருமாள் பிள்ளை தவில் வாசிப்பதைக் கைவிட்டார். 1941ல் கண் பார்வையும் இழந்தார்.

Revision as of 20:00, 1 April 2022

காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை (அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை) (1884 -1951) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

காரைக்காலைச் சேர்ந்த தவில்கலைஞர் கந்தஸ்வாமி பிள்ளை - ரத்தினம்மாள் இணையருக்கு 1884ஆம் ஆண்டு மலைப்பெருமாள் பிள்ளை பிறந்தார்.

தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளையிடம் (தமக்கையின் கணவர்) மலைப்பெருமாள் பிள்ளை தவிற்கலை இரண்டு வருடங்கள் கற்றார். பின்னர் ஒன்பது வருடங்கள் சிக்கல் சிங்காரவேலுப் பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

மலைப்பெருமாள் பிள்ளைக்கு செலக்கண்ணு அம்மாள் (கணவர்: கிடிகிட்டிக் கலைஞர் தில்லையாடி ஸ்ரீனிவாச பிள்ளை) என்ற மூத்த சகோதரியும், தவில் கலைஞராக இருந்து முப்பத்தி ஐந்தாம் வயதிலேயே மறைந்து விட்ட காரைக்கால் பழனிவேல் பிள்ளை என்ற தம்பியும் இருந்தனர்.

கருவேலி சற்குணம் பிள்ளை என்பவரின் மகள் அம்மாக்கண்ணு அம்மாள் என்பவரை மலைப்பெருமாள் பிள்ளை மணந்து ராமநாதன் என்றொரு மகனும், பாப்பம்மாள் என்றொரு மகளும் பிறந்தனர்.

இசைப்பணி

அந்தக் காலத்தில் தவிலுக்கு தனி ஆவர்த்தம் வாசிக்கும் வழக்கம் இல்லை. ராக ஆலாபனைக்கு நடுவே ஓரிரு நிமிடங்கள் ஜதிகள் வாசிப்பது வழக்கம். இன்று கோர்வைகள் பெற்றிருக்கும் இடத்தை அன்று ‘ஜதிகள்’ பெற்றிருந்தன. மலைப்பெருமாள் பிள்ளை எண்ணற்ற ஜதிகள அறிந்தவராக, வல்லினம் மெல்லினத்துடன் ஜதி வாசிப்பதில் வல்லவராக இருந்தார்.

மலைப்பெருமாள் பிள்ளையின் மகன் ராமநாதன் பன்னிரண்டு வயதிலேயே தவில் வாசிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான். மலைப்பெருமாள் பிள்ளை ராமநாதனுடன் சேர்ந்து தவில் வாசித்து ராமநாதபுர அரசவையில் பல பரிசுகள் பெற்றார். மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை தன் தங்கப்பதக்கம் ஒன்றை ராமநாதனுக்கு அணிவித்தார். அச்சிறுவன் பதினான்கு வயதில் காலமானான். அந்தத் துயரில் பல மாதங்கள் தவிலைத் தொடாமல் இருந்தார் மலைப்பெருமாள் பிள்ளை. மதுப் பழக்கத்துக்கும் ஆளானார்.

பின்னர் தன் தம்பி பழனிவேல் பிள்ளையை சிறந்த தவிற்கலைஞராக உருவாக்க முனைந்தார். பழனிவேல் பிள்ளையும் சில காலத்தில் காலராவில் காலமானார்.

தன் மகள் வயிற்றுப் பேரனுக்குத் தவில் கற்றுக் கொடுத்து அவனது பத்து வயது முதல் அவன் கச்சேரிகளில் வாசிக்கத்தொடங்கினான். அவனைத் தன் கலைவாரிசு என மலைப்பெருமாள் பிள்ளை எண்ணியிருந்த போது, அச்சிறுவனும் பதினான்காம் வயதில் காலமானான்.

மனம் ஒடிந்த மலைப்பெருமாள் பிள்ளை தவில் வாசிப்பதைக் கைவிட்டார். 1941ல் கண் பார்வையும் இழந்தார்.

உடன் வாசித்த கலைஞர்கள்

காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

காரைக்கால் மலைப்பெருமாள் பிள்ளை 1941 முதல் பத்தாண்டுகள் கண் பார்வையற்றவராக வாழ்ந்து 1951ல் அம்பகரத்தூரில் மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013