under review

ஐசக் ஹென்றி ஹக்கர்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
Line 28: Line 28:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
<references />
<references />
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:30, 15 November 2022

ஐசக் ஹென்றி ஹக்கர்

To read the article in English: Isaac Henry Hacker. ‎

ஐசக் ஹென்றி ஹக்கர் (1848 - 1933) (Isaac Henry Hacker) லண்டன் மிஷன் சொசைட்டியின் மதப்பரப்புநர், கல்வியாளர், வரலாற்றுப் பதிவாளர்.

பிறப்பு , கல்வி

ஐசக் ஹென்றி ஹக்கர் ஜூலை 7, 1848-ல் பிரிட்டனில் பிர்மிங்ஹாம் (Birminghram) பகுதியில் பிறந்தார். அக்டோபர் 3, 1877-ல் குரு பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

எலிசபெத் டைமன்ட் போலார்ட் (Elizabeth Dymond Pollard)-ஐ நவம்பர் 4, 1879 அன்று மணந்தார். எலிசபெத் பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டார். நெய்யூரில் பூத்தையலுக்கான அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். எலிசபெத் ஏப்ரல் 1 , 1885-ல் முட்டம் கடற்கரை ஊரில் தன் 36-ஆம் வயதில் மறைந்தார். பிறகு, ஹாக்கர் பேலிஸின் மகள் வினிஃப்ரட் பேலிஸ் (Winifred Downing née Baylis)-ஐ நெய்யூரில் ஆகஸ்ட் 24, 1887-ல் மணந்தார்.

மதப்பணிகள்

மூலச்சல் ஐசக் ஹென்றி ஹக்கர் நினைவு ஆலயம்

ஐசக் ஹென்றி ஹக்கர் லண்டன்மிஷன் சொசைட்டியில் இணைந்து மதப்பணியாளர் ஆனார். நெய்யூர் பகுதியில் பணியாற்றி வந்த ரெவெ பேலிஸ் (Baylis) அவர்கள் மே17, 1877-ல் மறைந்தபோது அவரது பணிகளை தொடர ஐசக் ஹென்றி ஹக்கர் ஜனவரி 9, 1878 அன்று நெய்யூர் வந்தடைந்தார். நெய்யூர் மற்றும் அப்பகுதிகளில் மதப்பணிகளையும் கல்விப்பணிகளையும் செய்தார். ஹாக்கரும் அவர் மனைவியும் பள்ளியாடி பகுதியில் 18 பள்ளிகளை உருவாக்கினர். அவர் கட்டிய ஆலயங்களில் IHH என்னும் எழுத்துக்களை காணலாம். ஹக்கர் அவருடைய சமகாலத்தவரான ஜேம்ஸ் எம்லின் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். தன் நூலில் ஜான் லோ , ஜேம்ஸ் டதி, டதி அம்மையார் சாமுவேல் மெட்டீர் ஆகியோரை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். ஹக்கர் 42 ஆண்டுகள் மதப்பணியாற்றி 1920-ல் ஓய்வுப்பெற்றார்.

இதழியல்

ஹக்கர் நெய்யூரில் இருந்து தேசஉபகாரி என்னும் இதழை நடத்தினார். தமிழகத்தில் வெளிவந்த பழைய கிறிஸ்தவ இதழ்களில் இதுவும் ஒன்று.

மறைவு

ஓய்வு பெற்றபின் கொடைக்கானலில் வாழ்ந்து மே 5 , 1933 அன்று மறைந்தார். அவரது மனைவி வினிஃப்ரட் ஹக்கர் ஜூன் 23, 1934 அன்று மறைந்தார்.

நினைவகம்

டிசம்பர் 24 , 1957-ல் தக்கலை அருகே மூலச்சலில் கட்டப்பட்ட ஆலயம் ரெவெரெண்ட் ஹக்கர் நினைவு ஆலயம் என பெயரிடப்பட்டது (Hacker Memorial Church[1])

நூல்கள்

ஹக்கர் தன் மதப்பணியை விரிவான குறிப்புகளுடன் நூல் வடிவில் எழுதியிருக்கிறார். அவற்றில் அரிய புகைப்படங்களும் உள்ளன. தென்னகவரலாறு மற்றும் கேரள வரலாற்றை அறிய மிக உதவியான நூல்களாக அவை கருதப்படுகின்றன

  • The hundred years in Trivancore[2]
  • Memories of Thomies Smith Thomson
  • He built many churches & he become author in Desopahari
  • Land of Palms

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page