under review

உலகத் தமிழ்ச் சங்க விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 92: Line 92:


* [https://utsmdu.org உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை]  
* [https://utsmdu.org உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை]  
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:17, 13 December 2023

உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆய்வுக்காகவும் 1986-ல் மதுரையில், தமிழக அரசால் நிறுவப்பட்ட ஓர் அரசு நிறுவனம். இந்நிறுவனத்தின் மூலம், 2016-ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் உலகத் தமிழ் சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலகத் தமிழ்ச் சங்க விருது

இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருது மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அவை,

  • இலக்கிய விருது
  • இலக்கண விருது
  • மொழியியல் விருது

உலகத் தமிழ்ச் சங்க விருது பெற்றவர்கள் (2021 வரை)

ஆண்டு விருதுகள் பெயர்
2016 இலக்கிய விருது நா.ஆண்டியப்பன் (சிங்கப்பூர்)
இலக்கண விருது பெஞ்சமின் லெபோ (பிரான்ஸ்)
மொழியியல் விருது சுபாஷினி (ஜெர்மனி)
2017 இலக்கிய விருது சந்திரிகா சுப்ரமணியன் (ஆஸ்திரேலியா)
இலக்கண விருது உல்ரிகே நிக்லஸ் (ஜெர்மனி)
மொழியியல் விருது ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா)
2018 இலக்கிய விருது ஜீவகுமாரன் (டென்மார்க்)
இலக்கண விருது பாட்டரசர் கி. பாரதிதாசன் (பிரான்ஸ்)
மொழியியல் விருது பேராசிரியர் முனைவர் ச. சச்சிதானந்தம் (பிரான்ஸ்)
2019 இலக்கிய விருது பெ.ராசேந்திரன் (மலேசியா)
இலக்கண விருது முத்து கஸ்தூரிபாய் (பிரான்ஸ்)
மொழியியல் விருது சுபதினி ரமேஷ் (இலங்கை)
2020 இலக்கிய விருது அலெக்சிசு தேவராசு சேன்மார்க் (பிரான்ஸ்)
இலக்கண விருது அருணாசலம் சண்முகதாசு (இலங்கை)
மொழியியல் விருது முனைவர் சுப. திண்ணப்பன் (சிங்கப்பூர்)
2021 இலக்கிய விருது பாலசுந்தரம் (கனடா)
இலக்கண விருது முனைவா் மனோன்மணி தேவி (மலேசியா)
மொழியியல் விருது செ.ஆரோக்கிய ராஜ், (சியோல், கொரியா)

உசாத்துணை


✅Finalised Page