under review

உடுக்கைப் பாட்டு: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Corrected error in line feed character)
Tag: Manual revert
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 6: Line 6:
இது கோவில் சார்ந்த கலை. பின்னாளில் இக்கலை கோவிலை விட்டு சமூகத்தைச் சார்ந்தும் பொழுதுபோக்கிற்காக நிகழ்த்தப்படுகிறது.  

இந்நிகழ்ச்சியில் ஒருவர் உடுக்கை அடிப்பார். ஒரு பெண்ணோ, பெண் வேடமிட்ட ஆணோ கதைப் பாடலைப் பாடி ஆடுவார். பின் பாட்டிற்காக இருவர் அல்லது மூன்று பேர் இருப்பர். அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரைவீரன் கதை, நல்லதங்காள் கதை, கோவலன் கதை அகியன இக்கலைக்குரிய கதைப்பாடல்கள். இதில் அண்ணன்மார் சாமி கதையே பெருமளவில் பாடப்படுகிறது.  
இந்நிகழ்ச்சியில் ஒருவர் உடுக்கை அடிப்பார். ஒரு பெண்ணோ, பெண் வேடமிட்ட ஆணோ கதைப் பாடலைப் பாடி ஆடுவார். பின் பாட்டிற்காக இருவர் அல்லது மூன்று பேர் இருப்பர். அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரைவீரன் கதை, நல்லதங்காள் கதை, கோவலன் கதை ஆகியன இக்கலைக்குரிய கதைப்பாடல்கள். இதில் அண்ணன்மார் சாமி கதையே பெருமளவில் பாடப்படுகிறது.  

இக்கலை வழிபாட்டிற்காகவும், மரபு வழி நேர்ச்சைக்காகவும் நிகழ்த்தப்படுகிறது. இக்கதை நிகழும் பொழுதோ அல்லது இதனைக் கேட்டாலோ மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிகழ்ச்சி பொதுவாக நாள் ஒன்றிற்கு மூன்று மணி நேரம் நிகழும். ஆனால் இதற்கு எந்த கால வரையறையும் இல்லை. கதையின் நீளத்தைப் பொறுத்து இது அமையும்.  

Line 19: Line 19:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 20:09, 12 July 2023

To read the article in English: Udukkaipaatu. ‎

உடுக்கை

உடுக்கை என்னும் இசைக்கருவியை அடித்துப் பாடப்படும் கலை உடுக்கைப் பாட்டு. உடுக்கையடித்து பேய் விரட்டுவதற்காக நிகழ்த்தப்படும் உடுக்கடியிலிருந்து இக்கலை வேறுபட்டது. பேய் விரட்டும் உடுக்கடிக் கலை கோடங்கி என்றழைக்கப்படுகிறது. உடுக்கைப் பாட்டு கதையைப் பாடிப் பின்னணியாக உடுக்கையை அடிக்கும் முறையில் அமைந்த கலை நிகழ்வாகும்.

நடைபெறும் முறை

Udukai paatu1.jpg

இது கோவில் சார்ந்த கலை. பின்னாளில் இக்கலை கோவிலை விட்டு சமூகத்தைச் சார்ந்தும் பொழுதுபோக்கிற்காக நிகழ்த்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஒருவர் உடுக்கை அடிப்பார். ஒரு பெண்ணோ, பெண் வேடமிட்ட ஆணோ கதைப் பாடலைப் பாடி ஆடுவார். பின் பாட்டிற்காக இருவர் அல்லது மூன்று பேர் இருப்பர். அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரைவீரன் கதை, நல்லதங்காள் கதை, கோவலன் கதை ஆகியன இக்கலைக்குரிய கதைப்பாடல்கள். இதில் அண்ணன்மார் சாமி கதையே பெருமளவில் பாடப்படுகிறது.

இக்கலை வழிபாட்டிற்காகவும், மரபு வழி நேர்ச்சைக்காகவும் நிகழ்த்தப்படுகிறது. இக்கதை நிகழும் பொழுதோ அல்லது இதனைக் கேட்டாலோ மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிகழ்ச்சி பொதுவாக நாள் ஒன்றிற்கு மூன்று மணி நேரம் நிகழும். ஆனால் இதற்கு எந்த கால வரையறையும் இல்லை. கதையின் நீளத்தைப் பொறுத்து இது அமையும்.

நிகழ்த்தும் சாதியினர்

இக்கலையை பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள் நிகழ்த்துகின்றனர்.

நிகழும் ஊர்கள்

உடுக்கைப் பாட்டு கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப் பேட்டை, பழனி, திருச்சி பகுதிகளில் நிகழ்கிறது.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் - அ.கா.பெருமாள்

காணொளி

✅Finalised Page