under review

இவான் கார்த்திக்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:இவான் கார்த்திக்.jpg|thumb|287x287px|இவான் கார்த்திக்]]
[[File:இவான் கார்த்திக்.jpg|thumb|287x287px|இவான் கார்த்திக்]]
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறர்.
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
இவான் கார்த்திக் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நந்தகுமார், [[வைரவன் லெ.ரா]]. கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

Revision as of 12:27, 1 February 2023

இவான் கார்த்திக்

இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

இவான் கார்த்திக் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நந்தகுமார், வைரவன் லெ.ரா. கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயம்புத்தூர் அரசு பொறியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா.

இலக்கியவாழ்க்கை

இவான் கார்த்திக்கின் முதல் படைப்பான கடுவா சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நாவல் பவதுக்கம் 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக அசோகமித்திரன், தாஸ்தாயெவ்ஸ்கி, ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • பவதுக்கம்

இணைப்புகள்

✅Finalised Page