இட்டகவேலி நீலகேசி அம்மன்

From Tamil Wiki
Revision as of 16:26, 22 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|இட்டகவேலி முடிப்புரை தெய்வங்கள் இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் : ஓர் இந்து, நாட்டார்த் தெய்வம். கன்யாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள இந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இட்டகவேலி முடிப்புரை தெய்வங்கள்

இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் : ஓர் இந்து, நாட்டார்த் தெய்வம். கன்யாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முடிப்புரை எனப்படுகிறது. இங்குள்ள நீலகேசி அம்மனுக்கு குழந்தைகளை தூக்கியபடி நெம்புகோல் ஒன்றில் தொங்கியபடி சுற்றிவரும் தூக்கு நேர்ச்சை எனப்படும் வழிபாடு செய்யப்படுகிறது.

இடம்

இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில், குலசேகரம் அருகே இட்டகவேலி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. இது முடிப்புரை எனப்படுகிறது. வழிபடப்படுவது முடி எனப்படும் ஒரு பொருள். அண்மைக்காலம் வரை ஆலயம் என்னும் அமைப்பு இல்லாமல் வழிபடுபொருட்களான முடி வைக்கும் கட்டிடமே இருந்தது. இப்போது ஆலயமாக மாற்றமடைந்துள்ளது.

தொன்மம்

இட்டகவேலியின் தெய்வம் நீலகேசி அம்மன் எனப்படுகிறது. நீலகேசி என்பது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அக்கதையில் நீலகேசி என குறிப்பிடப்படும் தெய்வம் கணவனால் கொல்லப்பட்டு பேயான ஒரு பெண். சமண முனிவரால் மனம்திருந்தி அவர் ஆணைக்கேற்ப சமணக்கருத்துக்களை மறுதரப்புகளுடன் விவாதித்து நிறுவியவள். அந்தக் கதையின் இன்னொரு வடிவம் கள்ளியங்காட்டு நீலி என்ற பெயரில் கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்குகிறது. பழையனூர் நீலி என்ற பெயரிலும் அக்கதை தமிழகத்தில் வழங்குகிறது

நீலகேசி என்னும் தெய்வம் சமண மதத்தின் வருகைக்கு முன்னரே தமிழ்நிலத்தில் வழிபடப்பட்ட பெண்தெய்வமாக இருக்கலாம். சமணம் அதை உள்ளிழுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சமணத்தெய்வமான நீலகேசி பின்னர் நாட்டார் தெய்வமாக உருமாற்றம் அடைந்து உள்ளூர் தொன்மங்கள் ஏற்றப்பட்டிருக்கவும்கூடும்.

வரலாற்றுப் பின்னணி

கதை

வழிபாடுகள்

உசாத்துணை