under review

ஆறுமுகப்பெருமாள் நாடார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 22: Line 22:
ஆறுமுகப்பெருமாள் நாடார் வைகுண்டரின் [[அகிலத்திரட்டு]] அம்மானை நூலை பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவர் பெயரில் வராமல் ‘சென்றதிசை வென்ற பெருமாள் நாடார்’ என்ற புனைபெயரில் வைகுண்டரின் அகிலத்திரட்டு 1967-ல் வெளிவந்தது. [[வைகுண்டர்]] மரபைச்சேர்ந்த எட்டு குடும்பத்தினர் அப்போது அந்நூலை உரிமைகொண்டாடினர்.அந்நூல் புனிதமானது என்றும், திருஏடு வாசிப்பு என்னும் சடங்கில் தவிர நூலை வாசிக்கக்கூடாது என்றும், அதற்குரிய குடிகளில் பிறக்காதோர் அதை வாசிக்கலாகாது என்றும் அன்று நம்பப்பட்டது. ஆறுமுகப்பெருமாள் நாடார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடன்குடி கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சந்தையடி, தாமரைக்குளம், அகச்தீஸ்வரம் ஆகிய ஊர்களில் கிடைத்த பல ஏட்டுப்பிரதிகளின் அடிப்படையில் பெரும்பாலும் பிழையற்ற பதிப்பை கொண்டுவந்தார். அந்நூலை மனப்பாடம்செய்து வைத்திருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.  
ஆறுமுகப்பெருமாள் நாடார் வைகுண்டரின் [[அகிலத்திரட்டு]] அம்மானை நூலை பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவர் பெயரில் வராமல் ‘சென்றதிசை வென்ற பெருமாள் நாடார்’ என்ற புனைபெயரில் வைகுண்டரின் அகிலத்திரட்டு 1967-ல் வெளிவந்தது. [[வைகுண்டர்]] மரபைச்சேர்ந்த எட்டு குடும்பத்தினர் அப்போது அந்நூலை உரிமைகொண்டாடினர்.அந்நூல் புனிதமானது என்றும், திருஏடு வாசிப்பு என்னும் சடங்கில் தவிர நூலை வாசிக்கக்கூடாது என்றும், அதற்குரிய குடிகளில் பிறக்காதோர் அதை வாசிக்கலாகாது என்றும் அன்று நம்பப்பட்டது. ஆறுமுகப்பெருமாள் நாடார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடன்குடி கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சந்தையடி, தாமரைக்குளம், அகச்தீஸ்வரம் ஆகிய ஊர்களில் கிடைத்த பல ஏட்டுப்பிரதிகளின் அடிப்படையில் பெரும்பாலும் பிழையற்ற பதிப்பை கொண்டுவந்தார். அந்நூலை மனப்பாடம்செய்து வைத்திருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.  
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
சுவடிகளில் இருந்து பழைய நூல்களை அச்சில்கொண்டுவரும் பதிப்பியக்கம் தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. உ.வே. சாமிநாதையர், [[சி.வை. தாமோதரம் பிள்ளை]], [[சௌரிப்பெருமாள் அரங்கன்]] என பல முன்னோடிகள் அதில் ஈடுபட்டனர். அறிஞர்கள் நடுவே அதில் போட்டியே இருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கில் கிடைத்த நாட்டார் இலக்கியச் சுவடிகளை எவரும் பொருட்படுத்தவில்லை. நாட்டார் கலைகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து பார்ப்பதே கீழான செயல் என்னும் சமூகத்தடையும் இருந்தது. அச்சூழலில் அந்த ஏடுகளை தேடி எடுத்து பிழைநோக்கி சொந்தச்செலவில் பதிப்பிட்ட ஆறுமுகப்பெருமாள் நாடார் உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற முன்னோடிகளுக்கு நிகரான இடம் கொண்டவர் என அ.கா.பெருமாள் கூறுகிறார்(வாழ்க்கையை நகர்த்தும் கலைஞன்)
சுவடிகளில் இருந்து பழைய நூல்களை அச்சில்கொண்டுவரும் பதிப்பியக்கம் தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. உ.வே. சாமிநாதையர், [[சி.வை. தாமோதரம் பிள்ளை]], [[சௌரிப்பெருமாள் அரங்கன்]] என பல முன்னோடிகள் அதில் ஈடுபட்டனர். அறிஞர்கள் நடுவே அதில் போட்டியே இருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கில் கிடைத்த நாட்டார் இலக்கியச் சுவடிகளை எவரும் பொருட்படுத்தவில்லை. நாட்டார் கலைகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து பார்ப்பதே கீழான செயல் என்னும் சமூகத்தடையும் இருந்தது. அச்சூழலில் அந்த ஏடுகளை தேடி எடுத்து பிழைநோக்கி சொந்தச்செலவில் பதிப்பிட்ட ஆறுமுகப்பெருமாள் நாடார் உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற முன்னோடிகளுக்கு நிகரான இடம் கொண்டவர் என [[அ.கா. பெருமாள்]] கூறுகிறார்(வாழ்க்கையை நகர்த்தும் கலைஞன்)
== நூல்கள் ==
== நூல்கள் ==
* சுடலைமாட சாமி கதை - 1949, ஜெயஜோதி அச்சகம் ராதாபுரம்
* சுடலைமாட சாமி கதை - 1949, ஜெயஜோதி அச்சகம் ராதாபுரம்

Revision as of 23:11, 2 July 2022

To read the article in English: Arumuga Perumal Nadar. ‎

ஆறுமுகப்பெருமாள் நாடார் (1909-1983) நாட்டாரியல் நூல்களின் பதிப்பாளர், நாட்டாரியல் அறிஞர். வில்லிசைப் பாடல்களை பதிப்பித்து தமிழக நாட்டாரியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்டவர்.

பிறப்பு, கல்வி

சோழநாட்டில் இருந்து அரசருடன் பூசலிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு குடியேறிய நாடாளும் அதிகாரம் கொண்ட நாடார் குடி ஒன்று அங்கே உருவான ஒரு பூசலுக்குப்பின் கன்யாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊரில் பதினேழாம் நூற்றாண்டில் குடியேறியது. அக்குடியைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் நாடார் (1850-1909) அகஸ்தீஸ்வரத்தில் தென்னைத்தோப்புகளை உருவாக்கினார். அவர் மகன் குமாரசாமி நாடார் (1877-1958) கல்வியறிவு பெற்றவர். நிறைய தோப்புகள் இருந்தமையால் இவர் தோப்புநாடார் என அழைக்கப்பட்டார். இவருக்க்கு 1909-ல் பிறந்தவர் கு.ஆறுமுகப்பெருமாள் நாடார்.

ஆறுமுகப்பெருமாள் நாடார் செல்வந்தர். ஆகவே பள்ளிக்குச் சென்று பயிலவில்லை. வீட்டுக்கு அண்ணாவி எனப்படும் ஆசிரியர் வந்து எழுத்து அறிவித்தார். அவர்கள் இல்லத்திற்கு வந்து அங்கே சித்தமருத்துவம் செய்த உன்னங்குளம் மருத்துவர் என்பவரிடம் சித்தமருத்துவம் கற்றார். அவருடைய ஊரில் பின்னர் அவரே மருத்துவம் செய்யத் தொடங்கினார். இலவசமருத்துவம் செய்பவராகவே அவர் அகஸ்தீஸ்வரத்தில் அறியப்பட்டார். இவர் முழுநேரமாக ஏடுதேடுவதை கண்ட இவர் தந்தை தன் சொத்துக்களை இவருடைய மகன்கள் பேருக்கே எழுதிவைத்துவிட்டார். அதன்பின் வாழ்க்கை முழுக்க முழுநேர நாட்டாரிலக்கியப் பதிப்பாளராகவே இருந்தார்.

பதிப்புப்பணி

ஆறுமுகப்பெருமாள் நாடார் முதலில் மருத்துவ ஏடுகளை சேகரித்து பிரதியெடுக்க தொடங்கினார். பின்னர் அதிலிருந்து வில்லிசைப்பாடல்கள், நாட்டார் காவியங்கள் ஆகியவற்றின் மேல் ஆர்வம்கொண்டார். பொத்தையடி ஏ.ஆர்.நாடார் இவருக்கு நாட்டாரியலில் ஆசிரியராக இருந்தார். ஆறுமுகப்பெருமாள் நாடார் 1952 முதல் 1979 வரை பதிப்பு வேலையில் மும்முரமாக இருந்தார். மொத்தம் 18 வில்லிசை பாடல்களை பதிப்பித்திருக்கிறார். 21 சிறு பிரசுரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

பின்னனி

தமிழ்நாட்டில் கிடைக்கும் வாய்மொழி இலக்கியங்களான கதைப்பாடல்களில் பெரும்பாலானவை தென்மாவட்டங்களில்தான் கிடைக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 600 இருக்கலாம். இவற்றில் வில்லிசைப்பாடல்களை முன்னர் சிலர் தொகுத்திருக்கிறார்கள். சங்கு பதிப்பகம் நடத்திய சங்கு கணேசன் (அரசியல்வாதியான குமரி அனந்தன்-னின் மாமனார், அரசியல்வாதியான தமிழிசை சௌந்தர்ராஜனின் தாத்தா) இந்நூல்களை பதிப்பித்தார்.

வில்லிசையில் மேடையில் ஏட்டைப் பார்த்து மூலச்சுவடியை படிக்கும் வழக்கம் உண்டு. இவர்கள் வலம்பாடிகள் எனப்படுவார்கள். வலம்பாடிகளுக்கு சுவடிகளை படிக்கையில் ஏற்படும் ஐயங்களை ஆறுமுகப்பெருமாள் தீர்த்து வைத்தார். பின்னர் அவர்களுக்காக பிழைதிருத்திய அச்சுநூல்களை கொண்டுவர முற்பட்டார். 1952-ல் வெளிவந்த சுடலைமாடன் கதை விற்பாட்டு நூலின் முன்னுரையில் “ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆகிய என்னை வில்லிசைப்புலவர்கள் மிகவும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் ஏடுகளை படித்துப் புரிந்துகொள்ள முடியாத பெண்புலவர்களுக்காகவும் இதைப் பதிப்பித்தேன்’ என்கிறார்

ஆறுமுகப்பெருமாள் நாடார் தன் பதிப்புப் பணியை தொடங்கிய காலகட்டத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏடுகள் கிடைத்தன. வர்மவைத்தியம், சிலம்பம். மாட்டு வாகடம், மந்திரவாதம், பழைய இலக்கியங்கள், கதைப்பாடல்கள் ஆகியவை. அன்று தமிழகத்தின் எல்லை நெல்லை என கருதப்பட்டமையால் ஏடு தேடி பதிப்பித்த உ.வே.சாமிநாதையர் போன்ற முன்னோடிகள் கன்யாகுமரி மாவட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அன்றைய திருவிதாங்கூர் ஆய்வாளர்கள் தீவிரமாக ஏடுதேடுவது, பதிப்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே ஏராளமான ஏடுகள் கேரள மாநில ஆவணச்சேகரிப்புக்கு சென்றுவிட்டன. ஆனால் ஆறுமுகப்பெருமாள் நாடார் அவற்றில் தமிழ்மக்களை சார்ந்த நாட்டாரிலக்கியங்களை பதிப்பித்தார்.

பதிப்புமுறை

ஆறுமுகப்பெருமாள் நாடார் தன் நூல்களை தானே பணம் செலவிட்டுப் பதிப்பித்தார். கன்யாகுமரி கோயிலில் நிகழ்ந்த ஒரு களவு பற்றி எழுதப்பட்ட திருப்பணிக் களவு மாலை என்னும் வாய்மொழி இலக்கியம் மட்டுமே ஒரு செல்வந்தர் உதவியுடன் வெளியாகியது. ஆறுமுகப்பெருமாள் நாடார் பதிப்பில் கதைச்சுருக்கம், அந்நூலை அச்சில் கொண்டுவருவதற்கான காரணம், பாடலின் ஆசிரியர் பெயர், அவருடைய காலம் ஊர் போன்றவை பற்றிய தகவல்களும் அது குறித்த ஆறுமுகப்பெருமாள் நாடாரின் கருத்துக்களும் இருக்கும். பாடல்பெற்றவர் தெய்வமாகிவிட்டார் என்றால் அந்த ஆலயம், வழிபாடு பற்றிய செய்திகளும் இருக்கும். (எடுத்துக்காட்டு பூலங்கொண்டாள் அம்மன் கதைப்பாடல்) மூலநூலில் உள்ள யாப்பு வடிவங்களையும் அடையாளம் கண்டு விவரித்திருப்பார். (விருத்தம், திரு, சிந்து, வெண்பா, கண்ணி)

மூலநூல்களை தங்கள் நிகழ்த்துலையின் தேவைக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்ளும் வழக்கம் நாட்டார்பாடல்களில் இருந்தது. கன்யாகுமரி மாவட்ட ஏடுகள் திருநெல்வேலி மாவட்ட ஏடுகளில் இருந்து வேறுபட்டிருக்கும். ஆறுமுகப்பெருமாள் நாடார் அந்த வேறுபாடுகளை நன்கறிந்தவர். அவற்றை பதிப்புகளில் குறிப்பிடுவார். பலகதைகளில் இடையே வரும் கதைகள் நீக்கப்பட்டிருக்கும். உதாரணம் நாககன்னி தெய்வகன்னி கதையில் பல இடைவிவரிப்புகள் பெரும்பாலான ஏடுகளில் இல்லை, அவற்றை சுவடிகள் எல்லாவற்றையும் பார்த்து ஆவணப்படுத்தியவர் ஆறுமுகப்பெருமாள் நாடார் மட்டுமே என்கிறார் ஆய்வாளரான அ.கா. பெருமாள். முத்துப்பட்டன் கதை யில் பிராமணனாகிய கதைநாயகன் சக்கிலியப்பெண்ணை மணந்துகொள்வதனால் பல ஊர்களில் அதை மாற்றிப்பாடியிருக்கிறார்கள். அச்சிலும் மாறியவடிவங்கள் வந்துள்ளன. ஆறுமுகப்பெருமாள் நாடார் புன்னார்குளத்தில் அவருக்குக் கிடைத்த ஏட்டை அப்படியே பதிப்பித்திருக்கிறார். நா. வானமாமலை பின்னர் பதிப்பித்த முத்துப்பட்டன் கதை ஆறுமுகப்பெருமாள் நாடார் பதிப்பையே சார்ந்துள்ளது.

ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் தொடர்பு

ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆக்ஸ்போர்ட் பல்கலை நாட்டாரியல் தலைவராக பின்னாளில் பணியாற்றிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் (Stuart H. Blackburn) ஆய்வுமாணவராக இருந்தபோது அவருக்கு ஆய்வில் உதவி செய்திருக்கிறார் 1977-ல் ஸ்டூவர்ட் பிளாக்பர்னை நா.வானமாமலையின் நண்பர் தையல்காரர் ரத்தினம் நாடார் ஆறுமுகப்பெருமாள் நாடாரிடம் அழைத்துச்சென்றார். பல ஆண்டுகள் அந்த நட்பு நீடித்தது. ஏராளமான சுவடிகளையும் மூலச்செய்திகளையும் ஆறுமுகப்பெருமாள் நாடார் ஸ்டூவ்ர்ட் பிளாக்பர்னுக்கு அளித்தார். ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் தன்னுடைய Singing Birth and Death என்னும் நூலை ஆறுமுகப்பெருமாள் நாடாருக்கும் நா.வானமாமலைக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்நூலில் Ku. Arumuga PerumaL Nadar, a bow song bard now deceased shared his extensive knowledge of the tradition and argued with my observation giving much himself to a project whose purpose he never fully understood  என சமர்ப்பண வாசகம் உள்ளது

அகிலத்திரட்டு பதிப்பு

ஆறுமுகப்பெருமாள் நாடார் வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை நூலை பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவர் பெயரில் வராமல் ‘சென்றதிசை வென்ற பெருமாள் நாடார்’ என்ற புனைபெயரில் வைகுண்டரின் அகிலத்திரட்டு 1967-ல் வெளிவந்தது. வைகுண்டர் மரபைச்சேர்ந்த எட்டு குடும்பத்தினர் அப்போது அந்நூலை உரிமைகொண்டாடினர்.அந்நூல் புனிதமானது என்றும், திருஏடு வாசிப்பு என்னும் சடங்கில் தவிர நூலை வாசிக்கக்கூடாது என்றும், அதற்குரிய குடிகளில் பிறக்காதோர் அதை வாசிக்கலாகாது என்றும் அன்று நம்பப்பட்டது. ஆறுமுகப்பெருமாள் நாடார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடன்குடி கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சந்தையடி, தாமரைக்குளம், அகச்தீஸ்வரம் ஆகிய ஊர்களில் கிடைத்த பல ஏட்டுப்பிரதிகளின் அடிப்படையில் பெரும்பாலும் பிழையற்ற பதிப்பை கொண்டுவந்தார். அந்நூலை மனப்பாடம்செய்து வைத்திருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இலக்கிய இடம்

சுவடிகளில் இருந்து பழைய நூல்களை அச்சில்கொண்டுவரும் பதிப்பியக்கம் தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் என பல முன்னோடிகள் அதில் ஈடுபட்டனர். அறிஞர்கள் நடுவே அதில் போட்டியே இருந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கில் கிடைத்த நாட்டார் இலக்கியச் சுவடிகளை எவரும் பொருட்படுத்தவில்லை. நாட்டார் கலைகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து பார்ப்பதே கீழான செயல் என்னும் சமூகத்தடையும் இருந்தது. அச்சூழலில் அந்த ஏடுகளை தேடி எடுத்து பிழைநோக்கி சொந்தச்செலவில் பதிப்பிட்ட ஆறுமுகப்பெருமாள் நாடார் உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற முன்னோடிகளுக்கு நிகரான இடம் கொண்டவர் என அ.கா. பெருமாள் கூறுகிறார்(வாழ்க்கையை நகர்த்தும் கலைஞன்)

நூல்கள்

  • சுடலைமாட சாமி கதை - 1949, ஜெயஜோதி அச்சகம் ராதாபுரம்
  • அரிகரபுத்திரர் என்னும் சாத்தா வரலாற்று விற்பாட்டு - 1953, சங்கு நூலகம் திருநெல்வேலி
  • அனந்தாயி கதை - 1955
  • பிச்சைக்காலன் கதை - 1959
  • முத்துப்பட்டன் கதை - 1962, கிருஷ்ணா அச்சகம் நாகர்கோயில்
  • முத்தாரம்மன் கதை - 1949
  • இயக்கியம்மன் கதை - 1962, கருங்கல்
  • கிருஷ்ணசாமி கதை - 1962, திருநெல்வேலி
  • திருப்பணி களவு மாலை - 1966, தாணுமாலையபுரம்
  • தோட்டுக்காரி அம்மன் கதை - 1967, திங்கள்சந்தை
  • உவரி சுயம்புலிங்க சாமி விற்பாட்டு - 1970, நாகர்கோயில்
  • மாரியம்மன் கதை - 1971, நாகர்கோயில்
  • காலசாமி கதை - 1977. திக்கணங்கோடு
  • வெங்கலசாமி கதை - 1977, திங்கள்சந்தை
  • பார்வதி அம்மன் கதை - 1978, நாகர்கோயில்
  • பூலங்கொண்டாள் அம்மன் கதை - 1978, நாகர்கோயில்
  • வள்ளியம்மன் கதை (தேதி இல்லை), நாகர்கோயில்
சிறு வெளியீடுகள்
  • ராமநாமம் கெருடப்பத்து
  • கோவிந்த பதிகம் பத்து
  • முத்தாலம்மன் துதி
  • மீனாட்சியம்மன் கலிவெண்பா
  • முத்தாலம்மன் கும்மி
  • மறைந்துகிடக்கும் மாணிக்கங்கள்
  • தேவார திருவாசக பஜனை
  • 27 சில்லறைக் கட்டிடம்
  • அருள்நூல்
  • காமராஜ் புகழ்மாலை
  • மகாத்மா துக்க சிந்து
  • ஒப்பாரிக்கண்ணி நூறு
  • விடுகவிக் களஞ்சியம்
  • அப்புக்குட்டனை ஆனை கொன்ற கதை
  • இரட்டைப்பழமொழி
  • சேவல் பாட்டு
  • முச்சீர் பழமொழி
  • ஆரூட சாஸ்திரம்
  • திருக்கல்யாண வாழ்த்து
  • தாலாட்டு
  • ராட்டு மான்மியம்

உசாத்துணை


✅Finalised Page