ஆனந்த்குமார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Anand.jpg|thumb|ஆனந்த்குமார்]]
ஆனந்த்குமார் தமிழில் எழுதிவரும் கவிஞர். புகைப்பட நிபுணர். எளிமையான இயல்பான கவிதைகள் எழுதியவராக கணிக்கப்படுகிறார்.
ஆனந்த்குமார் தமிழில் எழுதிவரும் கவிஞர். புகைப்பட நிபுணர். எளிமையான இயல்பான கவிதைகள் எழுதியவராக கணிக்கப்படுகிறார்.
   
   

Revision as of 16:58, 17 January 2022

ஆனந்த்குமார்

ஆனந்த்குமார் தமிழில் எழுதிவரும் கவிஞர். புகைப்பட நிபுணர். எளிமையான இயல்பான கவிதைகள் எழுதியவராக கணிக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஆனந்த்குமார் நாகர்கோயிலில் 22-3-1984 ஆண்டு சதானந்தன் கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 20005 ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

மனைவி பெயர் ஜெயஸ்ரீ. 3-7- 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் -அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா.

இப்போது கோவையில் புகைப்படக்காரராக பணியாற்றுகிறார்.

படைப்புலகம்

பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020 ல் என ஆனந்த்குமார் கூறுகிறார்.

சொல்வனம் இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020 ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை மார்ச் 2021ல் வெளியாகியது.

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என ஜெயமோகன், அசோகமித்திரன், வைக்கம் முகம்மது பஷீர், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.

நூல் பட்டியல்

  • டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு. தன்னறம் வெளியீடு 2021

ஆவணப்படங்கள்

  • வீடும் வீதிகளும் - ஆவணப்படம் | விக்ரமாதித்யன் 2021