under review

அரவின் குமார்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
mNo edit summary
Line 1: Line 1:
[[File:அரவின் குமார்.jpg|thumb]]
[[File:அரவின் குமார்.jpg|thumb]]
அரவின் குமார் (மார்ச் 8, 1995) மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை போன்ற படைப்புகளை எழுதிவருகிறார்.  
அரவின் குமார் (மார்ச் 8, 1995) மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை எழுதிவருகிறார்.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அரவின் குமார் மார்ச் 8, 1995-ல் கோலாப்பிலா, நெகிரி செம்பிலானில் பிறந்தார். தந்தையார் பெயர் பெ. ஜெயசங்கர், தாயார் பெயர் கி. வசுந்திராதேவி. நான்கு சகோதரர்களில் அரவின் குமார் இரண்டாவது பிள்ளை.  
அரவின் குமார் மார்ச் 8, 1995-ல் கோலாப்பிலா, நெகிரி செம்பிலானில் பிறந்தார். தந்தையார் பெயர் பெ. ஜெயசங்கர், தாயார் பெயர் கி. வசுந்திராதேவி. நான்கு சகோதரர்களில் அரவின் குமார் இரண்டாவது பிள்ளை.  

அரவின் குமார் தன் தொடக்கக்கல்வியை குவாந்தானில் உள்ள பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியில்தொடங்கினார். தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரை கல்வி கற்றார். 2013-ஆம் ஆண்டு தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரை சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழாய்வு பிரிவில் கல்வி கற்று இளங்கலை பட்டம் பெற்றார்.  
அரவின் குமார் தன் தொடக்கக் கல்வியை குவாந்தானில் உள்ள பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரை கல்வி கற்றார். 2013-ஆம் ஆண்டு தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரை சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழாய்வு பிரிவில் கல்வி கற்று இளங்கலை பட்டம் பெற்றார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
2019-ஆம்  ஆண்டு தொடங்கி, கோலாலம்பூரில் உள்ள தேசியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
2019-ஆம்  ஆண்டு தொடங்கி, கோலாலம்பூரில் உள்ள தேசியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
[[File:அரவின் குமார் 2.jpg|thumb|305x305px]]
[[File:அரவின் குமார் 2.jpg|thumb|305x305px]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அரவின் குமாரின் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.ஆசிரியர் கல்விக்கழகத்தில் பயிலும்போது [[மு. வரதராசன்]], [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அரவின் குமார் பயின்ற ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழ் விரிவுரைஞராக இருந்த தமிழ்மாறனின் தூண்டுதலால் [[ஜெயமோகன்]], [[அசோகமித்திரன்]], [[கி. ராஜநாராயணன்]] ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கழகத்தில் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] உரையைச் செவிமடுத்துத் தீவிர இலக்கியங்களை அரவின் குமார் வாசிக்கத் தொடங்கினார்.
அரவின் குமாரின் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றார். ஆசிரியர் கல்விக்கழகத்தில் பயிலும்போது [[மு. வரதராசன்]], [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அரவின் குமார் பயின்ற ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழ் விரிவுரைஞராக இருந்த தமிழ்மாறனின் தூண்டுதலால் [[ஜெயமோகன்]], [[அசோகமித்திரன்]], [[கி. ராஜநாராயணன்]] ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கழகத்தில் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] உரையைக் கேட்டு தீவிர இலக்கியங்களை அரவின் குமார் வாசிக்கத் தொடங்கினார்.

ஆசிரியர் கல்விக்கழகத்தில் தயாரிக்கப்படும் இளவேனில் இதழில் கட்டுரை, பத்தி போன்றவற்றை எழுதினார். மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியத் தேசியப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு முதல் [[வல்லினம்]] இணைய இதழில் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
ஆசிரியர் கல்விக்கழகத்தில் தயாரிக்கப்படும் இளவேனில் இதழில் கட்டுரைகள், பத்திகள் எழுதினார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியத் தேசியப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றார். 2019-ஆம் ஆண்டு முதல் [[வல்லினம்]] இணைய இதழில் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
== இலக்கிய செயல்பாடு ==
== இலக்கிய செயல்பாடு ==
2022-ஆம் ஆண்டுக்கான [[வல்லினம் விருது]] பெற்ற எழுத்தாளர் [[மா. ஜானகிராமன்|மா. ஜானகிராமனின்]] ஆவணப்படத்தின் இயக்குநராக அரவின் குமார் பணியாற்றினார். தொடர்ந்து வல்லினம் ஆவணப்படங்களை இயக்குகிறார்..  
2022-ஆம் ஆண்டுக்கான [[வல்லினம் விருது]] பெற்ற எழுத்தாளர் [[மா. ஜானகிராமன்|மா. ஜானகிராமனின்]] ஆவணப்படத்தின் இயக்குநராக அரவின் குமார் பணியாற்றினார். தொடர்ந்து வல்லினம் ஆவணப்படங்களை இயக்குகிறார்.  
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
‘தெளிவாக சொல்ல வந்ததைச் சரியாக வெளிப்படுத்த முயலும் மொழி. தேவையற்ற விவரிப்புகள், விளக்கங்கள் இல்லை. அளவெடுத்துத் தைத்தாற்போலக் கச்சிதம், சொற்சிக்கனம். அரவின்  குமாரின் கதைகளில் மனிதர்கள் மீதான, வாழ்க்கை மீதான கசப்பு அல்லது விலகல் தென்படுகின்றன. அரவின்  குமாரால் இந்த எதிர்மறை உணர்வுகளையும் சுவாரசியமான மொழியில் சொல்ல முடிகிறது’ என [[ஸ்ரீதர் ரங்கராஜ்]] குறிப்பிடுகிறார்.  

Revision as of 11:20, 10 October 2022

அரவின் குமார்.jpg

அரவின் குமார் (மார்ச் 8, 1995) மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

அரவின் குமார் மார்ச் 8, 1995-ல் கோலாப்பிலா, நெகிரி செம்பிலானில் பிறந்தார். தந்தையார் பெயர் பெ. ஜெயசங்கர், தாயார் பெயர் கி. வசுந்திராதேவி. நான்கு சகோதரர்களில் அரவின் குமார் இரண்டாவது பிள்ளை.

அரவின் குமார் தன் தொடக்கக் கல்வியை குவாந்தானில் உள்ள பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். தானா பூத்தே இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரை கல்வி கற்றார். 2013-ஆம் ஆண்டு தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரை சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழாய்வு பிரிவில் கல்வி கற்று இளங்கலை பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

2019-ஆம்  ஆண்டு தொடங்கி, கோலாலம்பூரில் உள்ள தேசியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

அரவின் குமார் 2.jpg

இலக்கிய வாழ்க்கை

அரவின் குமாரின் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றார். ஆசிரியர் கல்விக்கழகத்தில் பயிலும்போது மு. வரதராசன், கல்கி ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அரவின் குமார் பயின்ற ஆசிரியர் கல்விக்கழகத்தில் தமிழ் விரிவுரைஞராக இருந்த தமிழ்மாறனின் தூண்டுதலால் ஜெயமோகன், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன் ஆகிய எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கத் தொடங்கினார். 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கழகத்தில் ஜெயமோகனின் உரையைக் கேட்டு தீவிர இலக்கியங்களை அரவின் குமார் வாசிக்கத் தொடங்கினார்.

ஆசிரியர் கல்விக்கழகத்தில் தயாரிக்கப்படும் இளவேனில் இதழில் கட்டுரைகள், பத்திகள் எழுதினார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியத் தேசியப்பல்கலைக்கழகம் ஒருங்கிணைத்த சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றார். 2019-ஆம் ஆண்டு முதல் வல்லினம் இணைய இதழில் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

இலக்கிய செயல்பாடு

2022-ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருது பெற்ற எழுத்தாளர் மா. ஜானகிராமனின் ஆவணப்படத்தின் இயக்குநராக அரவின் குமார் பணியாற்றினார். தொடர்ந்து வல்லினம் ஆவணப்படங்களை இயக்குகிறார்.

இலக்கிய இடம்

‘தெளிவாக சொல்ல வந்ததைச் சரியாக வெளிப்படுத்த முயலும் மொழி. தேவையற்ற விவரிப்புகள், விளக்கங்கள் இல்லை. அளவெடுத்துத் தைத்தாற்போலக் கச்சிதம், சொற்சிக்கனம். அரவின்  குமாரின் கதைகளில் மனிதர்கள் மீதான, வாழ்க்கை மீதான கசப்பு அல்லது விலகல் தென்படுகின்றன. அரவின்  குமாரால் இந்த எதிர்மறை உணர்வுகளையும் சுவாரசியமான மொழியில் சொல்ல முடிகிறது’ என ஸ்ரீதர் ரங்கராஜ் குறிப்பிடுகிறார்.

பரிசும் விருதுகளும்

  • பேரவைக் கதைகள் மாணவர் பிரிவு மூன்றாவது இடம் (2016)
  • பேரவைக் கதைகள் மாணவர் பிரிவு ஆறுதல் பரிசு (2017)
  • வல்லினம் சிறுகதைப் போட்டியில் ஐந்து வெற்றியாளர்களில் ஒருவர் (2019)

உசாத்துணை

✅Finalised Page