அமெரிக்க மதுரை மிஷன்

From Tamil Wiki
Revision as of 13:12, 6 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அமெரிக்க மதுரை மிஷன் (1834 ) அமெரிக்க மிஷன் என்னும் கிறிஸ்தவ மதப்பரப்பு அமைப்பு மதுரையில் உருவாக்கிய மதப்பரப்பு நிறுவனம். இது மதுரையில் அமெரிக்கன் கல்லூரி உட்பட முக்கியமான கல்வி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அமெரிக்க மதுரை மிஷன் (1834 ) அமெரிக்க மிஷன் என்னும் கிறிஸ்தவ மதப்பரப்பு அமைப்பு மதுரையில் உருவாக்கிய மதப்பரப்பு நிறுவனம். இது மதுரையில் அமெரிக்கன் கல்லூரி உட்பட முக்கியமான கல்விநிறுவனங்களைத் தொடங்கியது.

தொடக்கம்

அமெரிக்க இலங்கை மிஷன் இலங்கையில் செய்துவந்த மதப்பணிகளை தமிழகத்திற்கும் விரிவாக்கம் செய்ய எண்ணியது. அதன்படி 1894 ல் ரெவெ ஸ்போல்டிங் இலங்கையில் இருந்து ரெவெ:ரோட், ரெவெ:ஹொய்சிங்டன் ஆகியோரையும் வட்டுக்கோட்டை குருமடத்தில் கல்வி கற்ற மாணவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு மதுரைக்கு வந்தார். ஊட்டில் ஓய்வில் இருந்த ரெவெ:த்வுட்வேர்ட் அவர்களுடன் இணைந்துகொள்ளவிருந்தபோது உயிர்நீத்தார். ஹொய்சிங்டன் மதுரையில் அமெரிக்க மிஷன் பணிகளை தொடங்கினார்

வளர்ச்சிக்காலம்