under review

அஜிதன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:நாவலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
No edit summary
Line 1: Line 1:
[[File:அஜிதன்.jpg|thumb|அஜிதன்|273x273px]]
[[File:அஜிதன்.jpg|thumb|அஜிதன்|273x273px]]
அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) நாவலாசிரியர். உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் முதல் படைப்பு.
அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் முதல் படைப்பு.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அஜிதன் தர்மபுரியில் பிப்ரவரி 28, 1993-ல் [[ஜெயமோகன்]], [[அருண்மொழிநங்கை]] இணையருக்குப் பிறந்தார். தங்கை [[சைதன்யா]]. சேதுலட்சுமிபாய் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். பெங்களூர், புனித ஜோசஃப் கல்லூரியில் இளங்கலை பட்டம்(சுற்றுசூழல் அறிவியல்) பெற்றார். கேரளா, காலடியிலுள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

[[File:அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை.jpg|thumb|308x308px|அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை]]
[[File:அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை.jpg|thumb|308x308px|அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர் மற்றும் ஜெயமோகனை குறிப்பிடுகிறார். "ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி [[அ. முத்துலிங்கம்]] மதிப்பிடுகிறார்.
அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை ‘ஜஸ்டினும் நியாத்தீர்ப்பும்’ வல்லினம் இதழில் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர் மற்றும் ஜெயமோகனை குறிப்பிடுகிறார். "ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி [[அ. முத்துலிங்கம்]] மதிப்பிடுகிறார்.
===== ஆவணப்படம் =====
===== ஆவணப்படம் =====
* எழுத்தாளர் ஜெயமோகனுக்கான "நீர், நிலம், நெருப்பு" ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
* எழுத்தாளர் ஜெயமோகனுக்கான "நீர், நிலம், நெருப்பு" ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
Line 20: Line 20:
* [https://www.jeyamohan.in/167855/ மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை]
* [https://www.jeyamohan.in/167855/ மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை]
* [https://www.jeyamohan.in/166643/ மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா]
* [https://www.jeyamohan.in/166643/ மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா]
*[https://kamaladeviwrites.blogspot.com/2022/07/blog-post_31.html மைத்ரி: பேரிழிலின் சங்கமங்கள், கமலதேவி]
* [https://kamaladeviwrites.blogspot.com/2022/07/blog-post_31.html மைத்ரி: பேரிழிலின் சங்கமங்கள், கமலதேவி]
*[https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
* [https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
* அஜிதன் ஏற்புரை: மைத்ரி
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]

Revision as of 08:12, 8 January 2023

அஜிதன்

அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் முதல் படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

அஜிதன் தர்மபுரியில் பிப்ரவரி 28, 1993-ல் ஜெயமோகன், அருண்மொழிநங்கை இணையருக்குப் பிறந்தார். தங்கை சைதன்யா. சேதுலட்சுமிபாய் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். பெங்களூர், புனித ஜோசஃப் கல்லூரியில் இளங்கலை பட்டம்(சுற்றுசூழல் அறிவியல்) பெற்றார். கேரளா, காலடியிலுள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை

இலக்கிய வாழ்க்கை

அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை ‘ஜஸ்டினும் நியாத்தீர்ப்பும்’ வல்லினம் இதழில் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர் மற்றும் ஜெயமோகனை குறிப்பிடுகிறார். "ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி அ. முத்துலிங்கம் மதிப்பிடுகிறார்.

ஆவணப்படம்
  • எழுத்தாளர் ஜெயமோகனுக்கான "நீர், நிலம், நெருப்பு" ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
மைத்ரி நாவல்

திரைப்படம்

2017-ல் 'காப்பன்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல் கண்மணி’; ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் ஆதர்ச இயக்குனர்களாக டெரன்ஸ் மாலிக், வெர்னர் ஹெர்சாக், ராபர்ட் ஆல்ட்மன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். வாக்னர், பீத்தோவன், மாஹ்லர் ஆதர்ச இசைக்கலைஞர்கள்.

நூல்கள்

இணைப்புகள்

✅Finalised Page