first review completed

அஜிதன்: Difference between revisions

From Tamil Wiki
Line 17: Line 17:
* [https://youtu.be/1oiwtWy-DuQ காப்பான்: குறும்படம்: Youtube]
* [https://youtu.be/1oiwtWy-DuQ காப்பான்: குறும்படம்: Youtube]
* [https://youtu.be/qSuCmuDskiA ஜெயமோகன் ஆவணப்படம்: நீர், நிலம், நெருப்பு]
* [https://youtu.be/qSuCmuDskiA ஜெயமோகன் ஆவணப்படம்: நீர், நிலம், நெருப்பு]
* [https://jeyamohan60.blogspot.com/2022/05/blog-post_24.html?m=1 பற்றுக பற்று விடற்கு: அஜிதன்: ஜெ60: சியமந்தகம் கட்டுரை]
* [https://www.jeyamohan.in/167855/ மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை]
* [https://www.jeyamohan.in/167855/ மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை]
* [https://www.jeyamohan.in/166643/ மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா]
* [https://www.jeyamohan.in/166643/ மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா]
* [https://jeyamohan60.blogspot.com/2022/05/blog-post_24.html?m=1 பற்றுக பற்று விடற்கு: அஜிதன்: ஜெ60: சியமந்தகம் கட்டுரை]
*[https://kamaladeviwrites.blogspot.com/2022/07/blog-post_31.html மைத்ரி: பேரிழிலின் சங்கமங்கள், கமலதேவி]
*[https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
{{first review completed}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:54, 16 September 2022

அஜிதன்

அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) நாவலாசிரியர். உதவி இயக்குனர். ’மைத்ரி’ நாவல் முதல் படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

அஜிதன் தர்மபுரியில் பிப்ரவரி 28, 1993-ல் ஜெயமோகன், அருண்மொழிநங்கை இணையருக்குப் பிறந்தார். தங்கை சைதன்யா. சேதுலட்சுமிபாய் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். பெங்களூர், புனித ஜோசஃப் கல்லூரியில் இளங்கலை பட்டம்(சுற்றுசூழல் அறிவியல்) பெற்றார். கேரளா, காலடியிலுள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை

இலக்கிய வாழ்க்கை

அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர் மற்றும் ஜெயமோகனை குறிப்பிடுகிறார். "ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி அ. முத்துலிங்கம் மதிப்பிடுகிறார்.

ஆவணப்படம்
  • எழுத்தாளர் ஜெயமோகனுக்கான "நீர், நிலம், நெருப்பு" ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
மைத்ரி நாவல்

திரைப்படம்

2017-ல் 'காப்பான்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல் கண்மணி’; ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் ஆதர்ச இயக்குனர்களாக டெர்ரன்ஸ் மாலிக், வெர்னர் ஹெர்ஜோக், ராபர்ட் ஆல்ட்மேன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். வேக்னர், பீதோவன் ஆதர்ச இசைக்கலைஞர்கள்.

நூல்கள்

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.