under review

அஜிதன்: Difference between revisions

From Tamil Wiki
Line 30: Line 30:
* [https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
* [https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
* [https://www.youtube.com/watch?v=dJBGS7AnTC4 அஜிதன் ஏற்புரை: மைத்ரி]
* [https://www.youtube.com/watch?v=dJBGS7AnTC4 அஜிதன் ஏற்புரை: மைத்ரி]
* அஜிதன் ஏற்புரை | 'மருபூமி' சிறுகதை தொகுப்பு வெளியீடு
* [https://www.youtube.com/watch?v=BPyXA8KDU3M&ab_channel=ShrutiTVLiterature அஜிதன் ஏற்புரை | 'மருபூமி' சிறுகதை தொகுப்பு வெளியீடு]


== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==

Revision as of 14:08, 8 January 2024

அஜிதன்
இசை வகுப்பு

அஜிதன் (பிறப்பு: பிப்ரவரி 28, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். மேலையிசை, தத்துவம் ஆகியவற்றை கற்பிப்பவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஜிதன் தர்மபுரியில் பிப்ரவரி 28, 1993-ல் எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழிநங்கை இணையருக்குப் பிறந்தார். தங்கை சைதன்யா. சேதுலட்சுமிபாய் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு பயின்றார். பெங்களூர், புனித ஜோசஃப் கல்லூரியில் இளங்கலை பட்டம்(சுற்றுசூழல் அறிவியல்) பெற்றார். கேரளா, காலடியிலுள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அஜிதன், சைதன்யா, ஜெயமோகன், அருண்மொழிநங்கை

இலக்கிய வாழ்க்கை

அஜிதனின் முதல் நாவல் 'மைத்ரி’ ஜூன் 2022-ல் வெளியானது. ஜனவரி 2023-ல் அஜிதனின் முதல் சிறுகதை ‘ஜஸ்டினும் நியாத்தீர்ப்பும்’ வல்லினம் ஜனவரி 1, 2023 இதழில் வெளியானது. தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களாக டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பஷீர், ஜெயமோகனை குறிப்பிடுகிறார். அஜிதனின் இரண்டாவது நாவல் 'அல் கிஸா' ஜூலை 2023-ல் வெளியாகியது.

ஆவணப்படம்
  • அஜிதன் எழுத்தாளர் ஜெயமோகனுக்கான 'நீர், நிலம், நெருப்பு' ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

திரைப்படம்

2017-ல் 'காப்பன்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இயக்குனர் மணிரத்னத்திடம் ’ஓ காதல் கண்மணி’, ’காற்று வெளியிடை’ திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குரல்பதிவு மேற்பார்வையாளராக பணியாற்றினார். சினிமாவில் ஆதர்ச இயக்குனர்களாக டெரன்ஸ் மாலிக், வெர்னர் ஹெர்சாக், ராபர்ட் ஆல்ட்மன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். வாக்னர், பீத்தோவன், மாஹ்லர் ஆதர்ச இசைக்கலைஞர்கள்.

நூல்கள்

நாவல்
  • மைத்ரி[1] (2022)
  • அல் கிஸா (2023)
சிறுகதைத் தொகுப்பு
  • மருபூமி (2023)

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page