கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது
From Tamil Wiki
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அவற்றுள் தமிழ் கணிமைக்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-தமிழ்க் கணிமை விருது
தமிழ்க் கணினி இயல் வளர்ச்சிக்கு சிறந்தப் பங்களிப்புக்களைச் செய்து வருவோருக்கு, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. 2006 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவு கூரும் வகையில் ’சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது’ என இவ்விருது அழைக்கப்படுகிறது.
தமிழ்க் கணிமை விருது பெற்றோர்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2006 | கே. ஸ்ரீநிவாசன் |
2007 | கு. கல்யாணசுந்தரம் |
2008 | சுரதா யாழ்வாணன் |
2009 | தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு |
2010 | முத்து நெடுமாறன் |
2011 | வாசு அரங்கநாதன் |
2012 | முகுந்தராஜ் சுப்பிரமணியன் |
2013 | மணி மணிவண்ணன் |
2014 | முத்தையா அண்ணாமலை |
2015 | சே. ராஜாராமன் (எ) நீச்சல்காரன் |
2016 | த. சீனிவாசன் |
2017 | சசிகரன் பத்மநாதன் |
2018 | ராமசாமி துரைபாண்டி |
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.