being created

திருவரங்கக் கலம்பகம்

From Tamil Wiki
Revision as of 22:23, 13 November 2022 by Jayashree (talk | contribs)

திருவரங்கக் கலம்பகம் பிள்ளைப்பெருமாள் அய்யங்காரால் இயற்றப்பட்டது/

ஆசிரியர்

திருவரங்கக் கலம்பகத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

நூல் அமைப்பு

இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும், காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100 செய்யுள்களும் உள்ளன. அம்மானை, இரங்கல், ஊசல், ஊர், களி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய அகப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது.

திருவரங்கக் கலம்பகம் பிள்ளைப்பெருமாள் அய்யங்காரால் இயற்றப்பட்டது.ள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதிய பிரபந்தங்களில் முதலாவதாக அமைவது திருவரங்கக் கலம்பகம் ஆகும். இதில் நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, மயங்கிசை கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலித்தாழிசை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, தரவுகொச்சகக் கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வியனிலை மருட்பா, வேற்றொலி வெண்டுறை, அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய சந்த விருத்தம், அறுசீர், எழுசீர், எண்சீர், பன்னிருசீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தம், எண்சீர், நாற்பத்தெண்சீர் ஆசிரிய வண்ண விருத்தம் என்னும் பா, பாவின வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இவரது ஏனையப் பிரபந்தங்களை விட இக்கலம்பகம் பொருளமைதியிலும் யாப்பு முறையிலும் சிறப்பு நிலையில் அமைந்து கற்போருக்கு உவகையைத் தருகின்றது. பல்வேறு பா, பாவின வடிவங்களில் திறம்பட கவிதை புனைகிற ஆற்றல் இவருக்கு இருந்ததை இக்கலம்பகம் உணர்த்துகின்றது.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.