under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தலஸங்கட்டிதம்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தலஸங்கட்டிதம் (தட்டொட்டு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தலஸங்கட்டிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலஸங்கட்டிதம். தமிழில் இது 'தட்டொட்டு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை டோலாபாதமாக இருமருங்கும் வளைத்து வைத்து, கைகளைப் பதாக முத்திரையாகப் பிடித்து, கீழ் நோக்கி இரண்டையும் சேர்த்துப் பிடித்து நின்று இடது கையை இடுப்பிலும், வலது கையை ஹம்ஸ பத்மமாகவும் பிடித்துச் சுழன்று ஆடுவது தலஸங்கட்டிதம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 10:43:09 IST