under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சமநகம்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சமநகம் (இணைப்பறடு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சமநகம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று சமநகம். தமிழில் இது 'இணைப்பறடு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை நகங்கள் நேராகத் தெரியும்படி வைத்து, கொடி போலத் துவண்டு தொங்குகிற கைகளுடன், உடல் வளையாமலும், நிமிராமலும் இயல்பாக ஆடுவது சமநகம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:20:48 IST