under review

கண்ணகாரன் கொற்றனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கண்ணகாரன் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கண்ணகாரன் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கொற்றனார் என்னும் இயற்பெயர் உடையவர். கண்ணகாரன் என்ற சிறப்பு பெயரின் காரணம் அறிய இயலவில்லை

இலக்கிய வாழ்க்கை

கண்ணகாரன் கொற்றனார் பாடிய பாடல் நற்றிணையில் 143-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுடன் உடன்போகிய (உடன்போக்கு - பெற்றோரைப் பிரிந்து தனக்கு விருப்பமானவருடன் திருமணம் செய்து கொள்ளுதல்) தலைவியை நினைத்து வருந்தும் அவளது தாயினது கூற்றாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • வீட்டு முற்றத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலில் இளம்பெண்கள் ஒன்று கூடி ஓரை என்னும் விளையாட்டினை விளையாடுவர்.
  • வீட்டிற்கு வேலியாக நொச்சி செடியினை நட்டு வளர்ப்பர். வளர்ந்த நொச்சி மரத்தின் நிழல் முற்றத்தில் விழும்.
  • இளமகளிர் கிளிகளை வளர்க்கும் வழக்கம் இருந்துள்ளது.
  • பிறரறியா வண்ணம் காதல் கொண்டுள்ள இணையரைக் குறித்து ஊர் பெண்கள் புறம் பேசுவது உண்டு. அக்காதலில் ஈடுபட்டுள்ள மகளின் தாயிடமே விஷயத்தைக் கூறி அலர் தூற்றும் வழக்கம் இருந்துள்ளது.

பாடல் நடை

நற்றிணை - 143

  • திணை: பாலை துறை: மனை மருட்சி

ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள்
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:52:47 IST