under review

கருவூர் பவுத்திரனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கருவூர் பவுத்திரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கருவூர் பவுத்திரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். பவுத்திரன் என்ற வடமொழி சொல்லுக்கு தூயவன் என்று பொருள்.

இலக்கிய வாழ்க்கை

கருவூர் பவுத்திரனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 162-வது பாடலாக அமைந்துள்ளது. வினைமுடித்து திரும்பிய தலைவன் முல்லை மலரைப் பார்த்து தனக்கும் தலைவிக்கும் நேர்ந்த பிரிவுத் துயரைக் கூறுவதாக முல்லைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கார் காலத்தில் வரும் மழையினால் முல்லை நிலத்தில் மாலை நேரம் ஒளி குன்றி, மக்கள் பலரும் தம் வீடுகளுக்கு செல்லும்படி செய்யும்.
  • உவமை: முல்லை மலர்கள் பூத்திருப்பது மகளிரின் புன்னகையாக போல தோற்றம் காட்டி பிரிந்தவரை துயர் கொள்ள செய்யும்.

பாடல் நடை

குறுந்தொகை - 162

முல்லைத் திணை துறை: வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:42:41 IST