under review

மோசி கண்ணத்தனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மோசி கண்ணத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மோசி கண்ணத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மோசிக்குடி என்னும் ஊரினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மோசி கண்ணத்தனார் பாடிய பாடல் ஒன்று, நற்றிணையில் 124 வது பாடலாக அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனின் பிரிவால் தனக்கு வரவிருக்கும் துன்பத்தை தலைவியின் பொருட்டு தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

  • தன் துணை இறந்தவுடன் தானும் இறந்துவிடும் அன்றில் பறவையின் இணையைப் போன்றது நம் உறவு
  • ஈங்கை(இண்டம் பூ) அரும்பும் அதிரல்(புனமல்லிகை) மலரும் மணல் மேட்டில் உதிர்ந்து கிடக்கும். அவை மான் குளம்பின் வடிவில் காட்சி அளிக்கும்.
  • ஈங்கை அரும்பும் அதிரல் பூவும் உதிர்ந்து கிடப்பது,வெள்ளியை உருக்கும் கலத்தில் வெள்ளிகொதிப்பது போலத் தோன்றும்.

பாடல் நடை

நற்றிணை - 124

நெய்தல் திணை

  • துறை: தலைமகளின் பிரிவாற்றாமையை உணர்ந்து தோழி தலைவனுக்கு உரைத்தது.

ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும்ஆற் றேனது தானும்வந் தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நௌவி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலங் கடுப்ப விருப்புறத்
தெண்ணீர்க் குமிழி இழிதருந்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Nov-2024, 05:43:33 IST